மாளவிகாவுக்கு ஆப்பு, மல்லிகாவுக்கு வாய்ப்பு மாளவிகா செய்த கால்ஷீட் குழப்பத்தால் அவருக்கு கிடைத்த பட வாய்ப்பு இப்போது ஆட்டோகிராப் மல்லிகாவுக்குப் போய் விட்டது. இடையில் காணாமல் போயிருந்த மாளவிகா திடீரென இந்தியில் கிளாமரில் புகுந்து விளையாடினார். சியூ அட் 9 என்ற படத்தில் அவர் போட்ட கிளாமர் களேபரத்தால் இந்திப் படவுலகே சற்று ஆடிப் போனது. அதே வேகத்தோடு தமிழில் ஒரு படத்தில் குத்தாட்டம் போட்டு விட்டுப் போனார். அப்படிப் போனவரைக் கூப்பிட்டு ரஜினி தனது சந்திரமுகி படத்தில் மாளவிகாவுக்கு ஒரு சூப்பர் ரோல் கொடுத்தார். அதில் நடித்தபோது பிரபுவோடு ஏற்பட்ட நட்பு பிளஸ் பாசத்தால் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான பாசக்கிளிகள் படத்திலும் மாளவிகாவை அவர் ரெக்கமெண்ட் செய்ய பாசக்கிளிகளிலும் சிறகடித்துப் பறந்தார் மாளவிகா. இதில் கிடைத்த நல்ல வரவேற்பத்ை தொடர்ந்து மீண்டும் பிரபுவுடன் ஜோடிாயாக சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் புக் ஆனார் மாளவிகா. இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக நடிக்கிறார் பிரபு. இந்த அண்ணன் ரோலுக்கு சரத்குமார், மம்மூட்டி, ஜெயராம் என பிரபலங்களைக் கேட்டு எல்லாப் பேரும் சண்டைக்கு வந்ததால் கடைசியாக பிரபுவை புக் செய்தனர். பிரபுவின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட மாளவிகா இப்போது படத்தில் இல்லையாம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத அவர் ஏகப்பட்ட குழப்பங்கள் செய்தாராம். இந்தியில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ள மாளவிகா அந்தப் படத்திற்காக அடிக்கடி மும்பைக்குப் பறந்து போனதால், பிரபுவின் சமாதானத்தையும் மீறி சம்திங் சம்திங்கிலிருந்து அவரைத் தூக்கி விட்டார்கள். இப்போது மாளவிகா இடத்தில் நடித்துக் கொண்டிருப்பது ஆட்டோகிராப் மல்லிகா. ஆட்டோகிராப்புக்குப் பிறகு இரண்டாவது ஹீரோயின் இல்லாவிட்டால் தங்கச்சி என்ற நிலையில்தான் நடித்துக் கொண்டுள்ளார் மல்லிகா. கில்லியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. கவர்ச்சி காட்டி நடிக்க மல்லிகா தயார் தான் என்றாலும் இயக்குனர்கள் யாரும் அந்த அளவுக்கு தைரியமாக இல்லை. இதனால் குடும்பப் பாங்காக வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த கேரளத்து கிளி. இப்போது அவரைத் தேடி சம்திங் சம்திங் வாய்ப்பு வந்திருக்கிறது. மாளவிகா போனதால் பாதியில் வந்த வாய்ப்பு என்றபோதிலும் மறுக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்து விட்டாராம். மல்லியிடம் இன்னொரு நல்ல பழக்கம். சம்பளத்தை அடாவடியாக பேசுவதில்லை, செட்டுக்கு வந்து விட்டால் சிட்டுப் போல சுறுசுறுப்பாகவும், சமர்த்தாகவும் இருந்து அசத்தி விடுகிறாராம். ஆனால், ஜெயம் ரவியை விட 3 வயது குறைவான மல்லிகா அவருக்கு அண்ணியாகவும், தனது அப்பா வயதில் உள்ள பிரபுவுக்கு ஜோடியாகவும் நடிப்பது தான் ரொம்பவே இடிக்கிறது.

By Staff
மாளவிகா செய்த கால்ஷீட் குழப்பத்தால் அவருக்கு கிடைத்த பட வாய்ப்பு இப்போது ஆட்டோகிராப் மல்லிகாவுக்குப் போய் விட்டது.

இடையில் காணாமல் போயிருந்த மாளவிகா திடீரென இந்தியில் கிளாமரில் புகுந்து விளையாடினார். சியூ அட் 9 என்ற படத்தில் அவர் போட்ட கிளாமர் களேபரத்தால் இந்திப் படவுலகே சற்று ஆடிப் போனது.

அதே வேகத்தோடு தமிழில் ஒரு படத்தில் குத்தாட்டம் போட்டு விட்டுப் போனார். அப்படிப் போனவரைக் கூப்பிட்டு ரஜினி தனது சந்திரமுகி படத்தில் மாளவிகாவுக்கு ஒரு சூப்பர் ரோல் கொடுத்தார்.

அதில் நடித்தபோது பிரபுவோடு ஏற்பட்ட நட்பு பிளஸ் பாசத்தால் கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான பாசக்கிளிகள் படத்திலும் மாளவிகாவை அவர் ரெக்கமெண்ட் செய்ய பாசக்கிளிகளிலும் சிறகடித்துப் பறந்தார் மாளவிகா.

இதில் கிடைத்த நல்ல வரவேற்பத்ை தொடர்ந்து மீண்டும் பிரபுவுடன் ஜோடிாயாக சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் புக் ஆனார் மாளவிகா. இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக நடிக்கிறார் பிரபு. இந்த அண்ணன் ரோலுக்கு சரத்குமார், மம்மூட்டி, ஜெயராம் என பிரபலங்களைக் கேட்டு எல்லாப் பேரும் சண்டைக்கு வந்ததால் கடைசியாக பிரபுவை புக் செய்தனர்.

பிரபுவின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட மாளவிகா இப்போது படத்தில் இல்லையாம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத அவர் ஏகப்பட்ட குழப்பங்கள் செய்தாராம். இந்தியில் ஒரு படத்தில் புக் ஆகியுள்ள மாளவிகா அந்தப் படத்திற்காக அடிக்கடி மும்பைக்குப் பறந்து போனதால், பிரபுவின் சமாதானத்தையும் மீறி சம்திங் சம்திங்கிலிருந்து அவரைத் தூக்கி விட்டார்கள்.

இப்போது மாளவிகா இடத்தில் நடித்துக் கொண்டிருப்பது ஆட்டோகிராப் மல்லிகா. ஆட்டோகிராப்புக்குப் பிறகு இரண்டாவது ஹீரோயின் இல்லாவிட்டால் தங்கச்சி என்ற நிலையில்தான் நடித்துக் கொண்டுள்ளார் மல்லிகா. கில்லியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

கவர்ச்சி காட்டி நடிக்க மல்லிகா தயார் தான் என்றாலும் இயக்குனர்கள் யாரும் அந்த அளவுக்கு தைரியமாக இல்லை. இதனால் குடும்பப் பாங்காக வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த கேரளத்து கிளி.

இப்போது அவரைத் தேடி சம்திங் சம்திங் வாய்ப்பு வந்திருக்கிறது. மாளவிகா போனதால் பாதியில் வந்த வாய்ப்பு என்றபோதிலும் மறுக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்து விட்டாராம்.

மல்லியிடம் இன்னொரு நல்ல பழக்கம். சம்பளத்தை அடாவடியாக பேசுவதில்லை, செட்டுக்கு வந்து விட்டால் சிட்டுப் போல சுறுசுறுப்பாகவும், சமர்த்தாகவும் இருந்து அசத்தி விடுகிறாராம்.

ஆனால், ஜெயம் ரவியை விட 3 வயது குறைவான மல்லிகா அவருக்கு அண்ணியாகவும், தனது அப்பா வயதில் உள்ள பிரபுவுக்கு ஜோடியாகவும் நடிப்பது தான் ரொம்பவே இடிக்கிறது.

More from Filmibeat

Read more about: mallika replaces malavika
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X