»   »  கருத்த மச்சான், சிவப்பு மச்சி..

கருத்த மச்சான், சிவப்பு மச்சி..

Subscribe to Oneindia Tamil

சிவப்பதிகாரம் வரலாறு படைக்குமோ என்னவோ, அதில் நடிக்கும் மம்தாமோகன்தாஸின் கவர்ச்சி ரசிகர்களை கிறங்க வைத்து கிறங்கலாறு படைக்கப் போவதுமட்டும் உறுதி.

கருத்த மச்சான் விஷாலின் 4வது படம் சிவப்பதிகாரம். தொடர்ந்து மூன்று ஹிட்படங்களைக் கொடுத்து விட்டார் விஷால்.

கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவாகும் சிவப்பதிகாரத்தில் விஷாலுக்குஜோடியாக மலையாள மம்தா மோகன்தாஸ். பார்த்தவுடனேயே மனதுக்குள் பசையைப்போட்டு பச்செக்கன உட்கார்ந்து கொள்கிறார் மம்தா. அம்புட்டு அழகு இந்தமலையாள மங்காத்தா.

விஷாலின் நெட்டிலிங்க உயரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் படு ரவுசாககாணப்படும் மம்தா, நடிப்பில் மட்டுமல்ல, கிளாமரிலும் கிண்டி கிழங்கெடுப்பவர்.

ஏற்கனவே மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் லங்கா என்ற படத்தில் படுநெருக்கமான காட்சிகளில் உணர்ச்சி வசப்பட்டு நடித்து ரசிகர்கைளஉசுப்பேத்தியவர்தான் இந்த பேஜார் பேரழகி.

இப்போது விஷாலுடன் ஒட்டி ஒரசி உலுக்கி எடுக்கும் கிளாமரை அள்ளிக் கொடுத்துரசிகர்களின் தாகத்தைத் தீர்க்க தண்ணீராக ஓடி வருகிறார் மம்தா இப்படம் மூலம்.

ஒருவேளை மம்தாவின் சுண்ட வைக்கும் சிவப்பழகை பார்த்துதான் கருசிவப்பதிகாரம் என பெயர் வைத்திருப்பார் போல.

பாடல் காட்சிகளில் மம்தா திமிறி எடுத்திருக்கிறாராம். கூட ஆடிய விஷால்தான்விக்கித்துப் போய் விட்டாராம் ஈடு கொடுக்க முடியாமல். ஒரு பாடலில் மழைச் சாரல்,நீர்வீழ்ச்சியின் தூறல் என விஷாலுடன் ஆடிப் பாடி அமர்க்களப்படுத்தியுள்ளாராம்மம்தா.

கரு பழனியப்பன் படம் என்பதால் கதைக்கும், விஷால் ஹீரோ என்பதால் ஆக்ஷனும்,மம்தா படம் என்பதால் சூட்டுக்கும் பஞ்சம் இருக்காது என்பது நிஜம்.

Please Wait while comments are loading...