புதுவை ஷூட்டிங் ஓவர்... அடுத்து ஐதராபாத்தில் தொடங்குது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்

By

சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் இன்று தொடங்குகிறது.

கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் பிரபல இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் உருவாகிறது.

விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை

ஏ.ஆர்.ரகுமான் இசை

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது. இந்தப் படத்துக்காக, கோயில்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் கோயில்களில் படப்பிடிப்பு நடத்த பர்மிஷன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தாய்லாந்தில் ஷூட்டிங் நடந்ததாகவும் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

அங்கு நடந்த படப்பிடிப்பில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அவர்கள் நடித்தக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு பொங்கலுக்கு முன் சென்னைத் திரும்பியது.

என்னென்ன கேரக்டர்கள்

என்னென்ன கேரக்டர்கள்

இந்தப் படத்தில் நந்தினியாக, ஐஸ்வர்யா ராயும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், சுந்தரச் சோழனாக சரத்குமாரும் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் சின்ன பழுவேட்டைரையராக ரகுமானும் ஆதித்த கரிகாலனாக விக்ரமும் வந்தியத் தேவனாக கார்த்தியும் குந்தவையாக, த்ரிஷாவும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரியில்

புதுச்சேரியில்

இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்துவந்தது. அங்கு ஜெயம் ரவி, விக்ரம் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. 10 ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அதற்குள்ளாகவே அங்கு ஷூட்டிங் முடிந்தது.

ஐதராபாத்

ஐதராபாத்

இதையடுத்து ஐதராபாத்தில் இதன் ஷூட்டிங் இன்று மாலை முதல் தொடங்க இருக்கிறது. ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் அதில் பங்கேற்கிறார்கள். இதற்காக ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு நடக்கிறது. இங்கு இந்த மாதம் முழுவதும் ஷூட்டிங் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X