பொங்கல் லீவு விட்டாச்சு... சென்னை திரும்பியது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீம்

By

சென்னை: தாய்லாந்தில் நடந்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு பொன்னியின் செல்வன் டீம் சென்னை திரும்பியுள்ளது.

கல்கியின் பிரமாண்ட நாவலான 'பொன்னியின் செல்வனை' படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

தாய்லாந்து

தாய்லாந்து

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.

கோயில்களில்

கோயில்களில்

இந்தப் படத்துக்காக, கோயில்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் கோயில்களில் படப்பிடிப்பு நடத்த பர்மிஷன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தாய்லாந்தில் ஷூட்டிங் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

தாய்லாந்தில் நடந்த ஷூட்டிங்கில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் உட்பட பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அவர்கள் நடித்தக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வந்தன.

சென்னை ரிட்டர்ன்

சென்னை ரிட்டர்ன்

இந்நிலையில், படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு நேற்று முன் தினம் சென்னை திரும்பியுள்ளது. பொங்கலுக்காக படக்குழு சென்னை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேறு நாட்டில்

வேறு நாட்டில்

இன்னும் பத்து நாட்கள் கழித்து இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. அதில் சரத்குமார், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அந்த ஷூட்டிங், தாய்லாந்தில் தொடர்கிறதா? அல்லது வேறு எந்த நாட்டிலும் நடக்கிறதா என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X