»   »  ஜில்பான்சும் மணீஷாவும்

ஜில்பான்சும் மணீஷாவும்

Subscribe to Oneindia Tamil

குட்டி ராதிகா வரிசையில் இப்போது சின்ன சிம்ரன். கானல் நீர் பட நாயகிமணீஷாவுக்குத்தான் இந்த செல்லப் பெயராம்.

மணீஷா மேடத்தின் முழுப் பெயர் மணீஷா சாட்டர்ஜியாம். அதாவது இவர் ஒருகொல்கத்தா குல்கந்து. இருந்தாலும் பிறந்து, வளர்ந்தது மும்பையில்.

சிம்ரன் அளவுக்கு சிலிர்க்க வைக்கும் அழகோடு இல்லாவிட்டாலும் கூட சிம்பிளாக,துடைத்து வைத்த பூ ஜாடி போல படு அழகாக இருக்கிறார்.

ஜில்பான்ஸ் சின்னி ஜெயந்த் இயக்கும் கானல் நீர் படத்தின் நாயகிதான் மணீஷா.திரைப்படக் கல்லூ>யில் படித்தவராம் மணீ. படித்து முடித்ததும், வெட்டியாகவீட்டோடு இருக்காமல் மாடலிங்கில் குதித்து விட்டார்.

பிறகு பெங்காலிப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். அந்தப் படத்தைப்பார்த்து விட்டுத்தான் சின்னி கூப்பிட்டாராம். கானல் நீர் படத்தையும், அதில்ஹீரோயினாக நடிக்க ஆள் தேடி வருவதாகவும் சொன்ன சின்னி, உங்க முகம்வசீகரமாக இருக்கு, நடிக்க ரெடியா என்று கேட்டுள்ளார்.

உடனே ஓ.கே. சொல்லி விட்டாராம் மணீஷா. அத்தோடு நிற்காமல் ஒரு ரெபிடெக்ஸ்புத்தகத்தை வாங்கி, சூட்டோடு சூடாக தமிழும் பேசக் கற்றுக் கொண்டு விட்டாராம்.அம்மணி பேசும் தமிழ் கற்கண்டு போல பல்லில் பட்டு இடித்தாலும் சுவையாகத்தான்இருக்கிறது.

இப்படத்தில் சுஜாவின் சூப்பர் குத்தாட்டமும் இருக்கிறதாம். ஹீரோவாக நடிக்கும்ரித்தீஷும், சுஜாவும் இணைந்து குமுறித் தள்ளியுள்ள குத்துப் பாட்டுரசிகர்களுக்காகவாம். மற்றபடி படத்தில் கிளாமரை விட கதைக்குத்தான் அதிகமுக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் சின்னி.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மணீஷாவுக்கு நிறைய பேர் ஃபிரண்ட்ஸ் ஆகி விட்டார்களாம்.ஏன் அப்படி என்று கேட்டால், நான் பழகும் விதம் அவர்களுக்குப் பிடித்துள்ளது. நான்மென்மையாகப் பேசுவேன், சத்தம் போடுவது எனக்குப் பிடிக்காது. அதுஇங்குள்ளவர்களுக்குப் பிடித்துப் போகவே நான் செல்லப் பெண்ணாகி விட்டேன்என்று நாணத்துடன் கூறுகிறார் மணீ.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என்று காதைப் பிடித்து இழுத்து ஒரு மேட்டர்சொன்னார். அவரை எல்லோரும் சின்ன சிம்ரன், குட்டி சிம்ரன் என்றுதான்கூப்பிடுகிறார்களாம். என்னைப் பார்த்தால் சிம்ரன் போலவே இருக்குங்குறாங்க சார்என்று பெருமையாக கூறினார்.

எதைப் பார்த்து உங்களை சிம்ரன் என்று சொல்கிறார்கள் என்று கேட்ட போது, என்முகம் முதல் கால் வரை சிம்ரன் போலவே தெரிகிறேனாம் என்று வெட்கத்துடன்சொல்லி விட்டு துள்ளி ஓடினார் மணீஷா.

நமக்கு அப்படி தெரியலையோ...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil