அஜித்தின் 'ஏகே61' அடுத்த கட்ட சூட்டிங் எங்கே தெரியுமா? மஞ்சு வாரியர் கலந்துக்கிறாராம்!
சென்னை: போனி கபூர், எச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது ஏகே61.
ஹைதராபாத்தில் இதுவரை படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வேறு இடத்துக்கு படக்குழு நகர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் இணைந்து அடுத்த ஷெட்யூலில் நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

மூன்றாவது முறை
பேவியூ பிக்சர்ஸ் மூலமாக இந்தியா முழுவதும் படங்களை தயாரித்து வருகிறார் போனி கபூர். நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த கூட்டணி வலிமை, ஏகே 61 என தொடர்ந்து கொண்டே வருகிறது. நேர்கொண்ட பார்வை விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், வலிமை சொதப்பியது. இந்நிலையில், மீண்டும் எச். வினோத்துக்கே நம்பிக்கையுடன் ஏகே 61 படத்தை இயக்க கொடுத்துள்ளார் அஜித்.

விஸ்வாசம் வெற்றி
முன்னதாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியான விவேகம் படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் அவருடனே இணைந்து நடித்தார் நடிகர் அஜித். தன்னை நம்பி மீண்டும் வாய்ப்பை கொடுத்துள்ள அஜித்துக்கு விஸ்வாசம் படத்தின் மூலம் தனது விஸ்வாசத்தைக் காட்டினார் இயக்குநர் சிறுத்தை சிவா. இந்நிலையில், எச். வினோத்தும் வலிமையில் மிஸ் ஆனதையும் சேர்த்து ஏகே 61 படத்தில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்திப் சூட்டிங்
ஏகே 61 படத்தின் கதை வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்துத் தான் என்றும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மவுன்ட் ரோடு மற்றும் பேங்க் செட் போட்டு படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு படக்குழு ஷிஃப்ட் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புனேவில் அடுத்த ஷெட்யூல்
ஹைதராபாத்தில் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்புக்காக ஒட்டுமொத்த படக்குழுவும் புனே பறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் புனேவில் ஏகே 61 படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனக் கூறுகின்றனர். ஜூலை மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

மஞ்சு வாரியர் இணைகிறார்
ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாகவே போனி கபூர் அறிவித்து விட்டார். நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன், வலிமை படத்தில் ஹூமா குரேஷி என பாலிவுட் நடிகைகள் நடித்து வந்த நிலையில், ஏகே 61 படத்தில் மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் ஏற்கனவே தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் தற்போது அஜித்துடன் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளார். புனேவில் நடைபெறும் படப்பிடிப்பில் மஞ்சு வாரியரும் பங்கேற்க உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











