சூரரைப் போற்று சூட்டிங் ஸ்பாட்டில் கூடும் ரசிகர்கள்...நெகிழும் சூர்யா
Recommended Video
சென்னை: ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பை கண்டு நடிகர் சூர்யா நெகிழ்ந்து போயுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சந்திக்க வரும் அனைத்து ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். இது குறித்த சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பார்த்த நிறைய பேர் சூர்யாவின் பண்புகளை பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிக்க வந்த புதிதில், எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்ததை அவருடைய அப்பா நடிகர் சிவகுமார் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார் என்று தான் சொல்லவேண்டும்.

சிவகுமார், தான் நடத்தும் அறக்கட்டளையில் சூர்யாவையும் பங்கெடுக்கச் செய்தார். இதன் பிறகே இவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே தான் நடிக்கும் படங்களிலும் அவ்வப்போது நல்ல கருத்துக்களை சொல்லி வருகிறார்.
இதனாலேயே, சூர்யா பற்றியும், அவருடைய அப்பா சிவகுமார் அவர்களை பற்றியும் பல விதமான கருத்துக்களும் சர்ச்சைகளும் வந்து கொண்டே தான் இருக்கிறது. யார் எதை சொன்னாலும் அவர்கள் செய்யும் சில நற்பணிகளை அவர்கள் நிறுத்துவதே கிடையாது.

சூர்யா, நடிகர் என்பதை தாண்டி, படிக்கும் குழந்தைகளுக்கு அகரம் என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை படிக்க வைத்து, அவர்கள், அவர்களுடைய சொந்த காலால் நிற்கும் அளவிற்கான தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறார்.
சிவகுமார் சிறிய அளவில் தொடங்கிய இந்த அறக்கட்டளை இப்போது விஸ்வரூபம் எடுத்து பல நல்ல விசயங்களை செய்து வருகிறது. சமீப காலமாக அரசியல் ரீதியாகவும் நிறைய பேசி வருகிறார் சூர்யா. இவரின் பேச்சுகளுக்கு ஒரு பக்கம், நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், தொடர்ந்து சிலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இவர் தற்போது காப்பான் படத்தை தொடர்ந்து மும்மரமாக நடித்து வரும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யாவை பார்க்கும் ஆசையில் பல ரசிகர்கள், குழந்தைகள் என பலர் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூடுகிறார்கள்.
இதில் மாற்றுத் திறனாளி ரசிகர்களும் அடங்குவர். ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பை கண்டு நெகிழ்ந்து தினமும் நடிகர் சூர்யா அனைத்து ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். இது குறித்த சில புகைப்படங்களைப் பார்த்த பலரும் சூர்யாவின் பண்புகளை பாராட்டி வருகின்றனர்.
சினிமா கலைஞர்கள் எப்போதும் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தாமல், பல நல்ல விசயங்கள் செய்து வந்தால் தான், அவர்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் இந்த சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நல்லதே நடக்கும்.


Click it and Unblock the Notifications











