»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீண்ட நெடும் காலத்துக்குப் பின் மீனாவுக்கு மீண்டும் ஹீரோயின் சான்ஸ் கிடைத்துள்ளது.

கன்னடத்தில் வெற்றி பெற்ற தவறிகேபாதங்கி என்ற படத்தை உல்டா செய்து தமிழில் எடுக்கிறார்கள்.

இதில் கன்னடத்தைச்சேர்ந்த அர்ஜூன் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார்.

தெலுங்கிலும் எடுக்கப்பட்டு இந்தப் படத்துக்கு இன்னும் நாமகரணம் சூட்டப்படவில்லை. ஆக்ஷன் கலந்த அண்ணன்-தங்கைபாசமழை கதையாம்.

அர்ஜூனுக்கு தங்கையாக ஸ்வாதி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

கிராமத்துப் படமான இது சென்னை, விசாகபட்டிணம் மற்றும் அதன் சுற்றுப்பட்டு கிராமங்களில் எடுக்கப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் ஹீரோயின் சான்ஸ் என்பதால் மீனா மகிழ்ச்சியில் துள்ளிக் கொண்டிருக்கிறார்.

படத்தில் ஷகீலாவும் உண்டு.

சோனாவின் தைரியம்:

மும்தாஜ் தயாரித்து நடிகை கருத்தம்மா ராஜ்ஸ்ரீயின் தங்கை சோனா நடித்த தத்தித் தாவுது மனசு இன்னும்வெளியாகவில்லை.

இந் நிலையில் அவருக்கு சிந்தாமல் சிதறாமல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஓவியக் கல்லூரிமாணவர்கள் மத்தியில் உடைகளைக் கலைந்து நிர்வாணமாய் நிற்கும் காட்சியில் அவர் தத்ரூமாக நடித்தாராம்.

முழு நிர்வாணம் இல்லாவிட்டாலும் கூட முடிந்தவரை கலைந்து சூட்டிங் ஸ்பாட்டையே ஆச்சரியத்தில்ஆழ்த்திவிட்டாராம்.

படத்திலும் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறாராம்.

அக்கா தான் தமிழில் தேறவில்லை, தானாவதுகவர்ச்சியால் காலுண்டுவோம் என்று நினைத்துவிட்டார் போலும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil