»   »  மலை ஏற மறுத்த மீரா!

மலை ஏற மறுத்த மீரா!

Subscribe to Oneindia Tamil

பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்திற்காக, செஞ்சி அருகே உள்ள செஞ்சிக் கோட்டை மலை உச்சி மீது நடந்த படப்பிடிப்பின்போது, மலைப்படிகளில் ஏற மறுத்து பிடிவாதம் பிடித்தாராம் மீரா ஜாஸ்மின். கெஞ்சிக் கூத்தாடி மலை ஏற்றி பாடல் காட்சியை படமாக்கினார்களாம்.

தனுஷ், மீரா ஜாஸ்மின், அர்ச்சனா நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் வளர்ந்து வருகிறது.இப்படத்துக்காக எங்கேட அழகுந்தன் அரண்மனையோ அங்கே நான் வந்து விட வழியில்லையோ என்ற பாடலை வித்தியாசமான இடத்தில்படமாக்க நினைத்தார் சுரேஷ் கிருஷ்ணா.

இதற்காக செஞ்சி அருகே உள்ள ராணிக்கோட்டை என்கிற ராஜகிரி கோட்டைக்கு கிளம்பியது பட யூனிட். அந்த கோட்டையின் உச்சிக்குச் செல்ல567 படிகளை ஏறிக் கடக்க வேண்டும். மலை உச்சியை அடைய நடராஜா சர்வீஸ்தான்! வேறு வழியே இல்லை!

தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் படிகளில் குடுகுடுவென ஏறி மேலே போய் விட்டனர். ஆனால் மீராவோ, தன்னால் படி ஏற முடியாது என்று கூறிகீழேயே உட்கார்ந்து விட்டார்.

சுரேஷ் கிருஷ்ணா எவ்வளவோ கெஞ்சியும் முடியாது என்று கூறி விட்டார் மீரா. இதென்னடா வம்பாப் போச்சு என்று அத்தனை பேரும் கடுப்பாகிவிட்டனர். இந்த நிலையில், கேமராமேன் வேல்ராஜ், ஒரு ஐடியா செய்தார்.

மலை மீது சென்று அங்குள்ள காட்சிகளை தனது டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து கீழே வந்து மீராவிடம் காட்டி, இப்படி ஒரு அருமையானஇடத்தில் நீங்கள் ஆடிப் பாடி நடித்தால் படா ஜோரா இருக்காது என்று கூறியுள்ளார்.

வேல்ராஜ் காட்டிய காட்சிகளைப் பார்த்த மீரா, அடடே, அழகா இருக்கே, கண்டிப்பா இந்தப் பாட்டு ஹிட் ஆகும், கால் கழன்று கீழே விழுந்தாலும்பரவாயில்லை, கண்டிப்பா வர்றேன் என்று கூறி விட்டு மொள்ளமாக படியேறி மலை உச்சியை வந்தடைந்தாராம்.

அப்புறம் என்ன, கன ஜோராக தனுஷும், மீராவும் ஆடிப் பாட பாடலை படு ஜோராக சுட்டுள்ளனர்.

ஆத்தா மலையேறி ஆடிப் பாடிய காட்சியப்பா, கண்டு களிக்க தவறிடாதீங்க!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil