»   »  கவர்ச்சி ஜீராவில் மீரா

கவர்ச்சி ஜீராவில் மீரா

Subscribe to Oneindia Tamil

மீரா ஜாஸ்மின் முழு வேக கவர்ச்சிப் புயலைக் கிளப்பத் தயாராகி விட்டார். நேபாளியில் அவரது கிளாமர் இன்னிங்ஸ் ஆரம்பமாகிறதாம்.

நல்ல நடிகை என்று அறியப்பட்ட மீரா ஜாஸ்மின் திருமகன் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தார். காரணம் படப்பிடிப்பின்போதே மூத்த கலைஞரான ராதாரவி, மீரா ஜாஸ்மின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.

சும்மா சொல்லக் கூடாது, நடிப்பிலும், நெருக்கமாக அசத்துவதிலும் மீரா பின்னி எடுத்திருந்தார். ஆனாலும் திருமகன் சுமாராக ஓடியதால் மீரா பெரிதும் ஏமாற்றமடைந்தார்.

இந்த நிலையில் பரத்துடன் இணைந்து நடிக்கவுள்ள நேபாளி படத்தில் கிளாமரில் கலக்கப் போகிறாராம் மீரா. குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் கிளாமர் ஜீராவில் ஊறவிருக்கிறாராம் மீரா.

இனிமேல் ஒவ்வொரு படத்திலும் கிளாமரில் கலக்கவும் உத்தேசித்துள்ளாராம். போட்டிகள் கடுமையாக இருப்பது ஒருபக்கம் என்றால் என்னால் எப்படியும் அசத்த முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவாம்.

கிளாமராக நடிக்கும் அதேசமயம், தனது நவரச நடிப்பையும் தொடருவாராம் மீரா. இப்போதெல்லாம் யாராவது பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் குறித்து பேசினாலே அப்செட் ஆகி விடுகிறாராம் மீரா. படம் போணியாகாமல் போனதாலும், தனது கேரக்டர் சிறப்பாக வரவில்லை என்ற விசனத்தாலும்தான் இந்த அப்செட்டாம்.

துடிப்பை நம்பி நடிப்பை விட்டுடாதீங்க மீரா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil