»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

ரசு தனக்கு பெரும் பிரேக் கொடுக்கும் என்று பெரிதாக நம்பியிருந்தார் சரத்குமார். ஆனால் அவரதுநம்பிக்கையை பொய்யாக்கி விட்டது அரசு. படம் சுமாராகவே ஓடுகிறது.

அதே நேரத்தில் வெளியான சிலம்பரசனின் தம் படம் ஓடிய அளவுக்கு கூட அரசு ஓடவில்லையாம்.

இதனால் அடுத்த படமான பாறையை ரொம்பவே நம்பியுள்ளார். அவரது உறுதியான நம்பிக்கைக்கு முக்கியக்காரணம் கே.எஸ்.ரவிக்குமார். ரவிக்குமாரின் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் 9-வது படம் இது.

பாறை மூலம் மீண்டும் ஒரு ஸ்டிராங்கான இடத்தைப் பிடிப்பேன் என்று உறுதியாக கூறுகிறார் சரத்.

விஜய்காந்தின் அடுத்த படமான தென்னவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கிரண். இது பழையசெய்தி. இப்போது இன்னொரு ஹீரோயினையும் போடச் சொல்லிவிட்டாராம் விஜய்காந்த். ஒன்னு போதாதாம்!

ரணுடனான சண்டை முடிவுக்கு வந்துவிட்டதால் அவரது அடுத்த படத்தில் அஜீத் நடிக்கிறார்.

படத்தின் பெயர் அட்டகாசம். அஜீத்தை வைத்து சரண் இயக்கிய முதல் படம் அமர்க்களம். உருப்படியான கதை கூட இல்லாதஜெமினி படத்தைக் கூட ஹிட்டாக்கியவர் என்பதால் சரணை ரொம்பவே நம்பியிருக்கிறார் அஜீத்.

பிரசாந்துக்கு ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு படம் வரப் போகிறது.

சிவ சக்தி பாண்டியன் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர் நாகா. ஹீரோயினாக மீரா ஜாஸ்மீனைப் போடச் சொல்லிவிட்டாராம் பிரசாந்த்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil