twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாமியாடிய மீரா ஜாஸ்மின் சண்டைக் கோழி படத்திற்காக மீரா ஜாஸ்மின் சூப்பராக ஒரு சாமியாட்டம் போட்டிருக்கிறாராம். இவரது சாமியாட்டத்தைப்பார்த்து யூனிட்டில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் சிலையாகிப் போய் விட்டனர்.தற்போதுள்ள திறமையான நடிகைகளின் பட்டியலில் மீரா ஜாஸ்மினை சந்தேகத்திற்கு இடமில்லாமல் சேர்த்துக் கொள்ளலாம்.மிக இளம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கி சாதனை படைத்துள்ள அவர், எவ்வளவு காசு கிடைத்தாலும்தனக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார்.தமிழில் ரன், மணிரத்னத்தின் ஆய்த எழுத்துக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மீராவுக்கு இப்போது அடுத்தடுத்துவாய்ப்புகள். லிங்குசாமியின் சண்டைக் கோழி, தனது காட்பாதர் லோகித தாஸின் கஸ்தூரி மான், சேரனின் பொக்கிஷம் ஆகியபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இது தவிர தமிழில் மேலும் பல வாய்ப்புகள் இவருக்கு வந்ததாம். ஆனால் எதிலுமே நடிப்பதற்கு ஸ்கோப் இல்லாததால் நோசொல்லி விட்டார்.சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடிப்பதே எனது லட்சியம். பணம் எல்லாம் எனக்குஇரண்டாம் பட்சம்தான் என்று கூறுகிறார் மீரா. இதற்கு சமீபத்தில் கஸ்தூரி மான் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தையேஉதாரணமாக கூறலாம்.இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகனைப் பார்த்து சூடான சில வசனங்களை மீரா பேச வேண்டும். டைரக்டர்கூறியபடி அந்த வசனங்களை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்த மீரா, திடீரென செட்டிலேயே மயக்கம் போட்டுவிழுந்து விட்டார். உடனே பதறியடித்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மயக்கம் தெளிந்த மீரா என்ன கூறினார் தெரியுமா?மலையாளத்தில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதை விட தமிழில் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எனது திறமைமுழுவதையும் பயன்படுத்தி நடித்தேன்.அதிகமாக உணர்ச்சி வசப்பட்டதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன் என்றார்.இப்படி நடிப்புக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கும் மீரா, சண்டைக் கோழி படத்திலும் தனது திறமையை காட்டியிருக்கிறாராம்.இந்தப் படத்தில் மீரா ஒரு சூப்பர் சாமியாட்டம் போட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், என்னவோ ஏதோ என்று நினைத்துஇயக்குனர் லிங்குசாமி முன் ஆஜரானோம்.குத்தாட்டம் கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன சாமியாட்டம் என்றோம். மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் சதா ரகளையில்ஈடுபடும் ஒரு துடுக்கான பெண்ணாக வருகிறார். யாருக்கும் லேசில் அடங்காத கேரக்டர்.வீட்டில் இருப்பதை விட நண்பர்களுடன் ஜாலியாக பொழுதைப் போக்குவது தான் பிடிக்கும். பாக்கெட் மணிக்கு இருக்கவேஇருக்கிறது அப்பாவின் பாக்கெட். இப்படி ஒரு நாள் அப்பாவின் பாக்கெட்டில் கையை விடும்போது அப்பாவிடமே கையும் காசுமாக மாட்டிவிட, அப்போது மீராபோடும் ஆட்டம் தான் அந்த "லகலக சாமியாட்டம்.அப்பாவைப் பார்த்து, டேய் ராமானுஜம்! என்னுடைய காசை எடுக்க நான் யாருகிட்டடா கேட்கணும்? என்று பல்லைநறநறவென கடித்துக் கொண்டே அலற, பயந்து போன அப்பா, அம்மா நீங்க யாரு? என்று கேட்கிறார்.நான் தாண்டா உன் குல தெய்வம் கெங்கம்மா என்று கூறி ஆட்டம் போடுவார். படம் வந்த பிறகு பாருங்கள் இந்தக் காட்சியில்மீரா பண்ணியிருக்கும் ரகளையை என்று முடித்தார் லிங்குசாமி. மீராவைப் பற்றிய ஒரு கொசுறு: இவரது அக்கா ஜெனிபரும் விரைவில் நடிக்க வரப்போகிறாராம். தற்போது விளம்பரப்படங்களில் கால் பதித்துள்ள இவர் விரைவில் கோலிவுட்டில் கால் பதிக்கப் போகிறார்.சண்டைக் கோழி படத்தில் நிஜமாகவே 2 பேர் சண்டைக் கோழிகளாகி விட்டனர். இயக்குனர் லிங்குசாமிக்கும், ஒளிப்பதிவாளர்ஜீவாவுக்கும் கசாமுசா ஆகி விட இப்போது அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பொறுப்பை ஏற்றிருப்பவர் ஆர்தர் வில்சன்.படம் முடிவதற்குள் வேறு யாரும் சண்டைக் கோழிகளாக ஆகாமல் இருந்தால் சரி!

    By Staff
    |

    சண்டைக் கோழி படத்திற்காக மீரா ஜாஸ்மின் சூப்பராக ஒரு சாமியாட்டம் போட்டிருக்கிறாராம். இவரது சாமியாட்டத்தைப்பார்த்து யூனிட்டில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் சிலையாகிப் போய் விட்டனர்.

    தற்போதுள்ள திறமையான நடிகைகளின் பட்டியலில் மீரா ஜாஸ்மினை சந்தேகத்திற்கு இடமில்லாமல் சேர்த்துக் கொள்ளலாம்.மிக இளம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கி சாதனை படைத்துள்ள அவர், எவ்வளவு காசு கிடைத்தாலும்தனக்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார்.

    தமிழில் ரன், மணிரத்னத்தின் ஆய்த எழுத்துக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மீராவுக்கு இப்போது அடுத்தடுத்துவாய்ப்புகள். லிங்குசாமியின் சண்டைக் கோழி, தனது காட்பாதர் லோகித தாஸின் கஸ்தூரி மான், சேரனின் பொக்கிஷம் ஆகியபடங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

    இது தவிர தமிழில் மேலும் பல வாய்ப்புகள் இவருக்கு வந்ததாம். ஆனால் எதிலுமே நடிப்பதற்கு ஸ்கோப் இல்லாததால் நோசொல்லி விட்டார்.


    சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடிப்பதே எனது லட்சியம். பணம் எல்லாம் எனக்குஇரண்டாம் பட்சம்தான் என்று கூறுகிறார் மீரா. இதற்கு சமீபத்தில் கஸ்தூரி மான் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தையேஉதாரணமாக கூறலாம்.

    இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகனைப் பார்த்து சூடான சில வசனங்களை மீரா பேச வேண்டும். டைரக்டர்கூறியபடி அந்த வசனங்களை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டிருந்த மீரா, திடீரென செட்டிலேயே மயக்கம் போட்டுவிழுந்து விட்டார்.

    உடனே பதறியடித்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மயக்கம் தெளிந்த மீரா என்ன கூறினார் தெரியுமா?மலையாளத்தில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அதை விட தமிழில் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எனது திறமைமுழுவதையும் பயன்படுத்தி நடித்தேன்.

    அதிகமாக உணர்ச்சி வசப்பட்டதால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன் என்றார்.

    இப்படி நடிப்புக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கும் மீரா, சண்டைக் கோழி படத்திலும் தனது திறமையை காட்டியிருக்கிறாராம்.இந்தப் படத்தில் மீரா ஒரு சூப்பர் சாமியாட்டம் போட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், என்னவோ ஏதோ என்று நினைத்துஇயக்குனர் லிங்குசாமி முன் ஆஜரானோம்.

    குத்தாட்டம் கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன சாமியாட்டம் என்றோம். மீரா ஜாஸ்மின் இந்தப் படத்தில் சதா ரகளையில்ஈடுபடும் ஒரு துடுக்கான பெண்ணாக வருகிறார். யாருக்கும் லேசில் அடங்காத கேரக்டர்.

    வீட்டில் இருப்பதை விட நண்பர்களுடன் ஜாலியாக பொழுதைப் போக்குவது தான் பிடிக்கும். பாக்கெட் மணிக்கு இருக்கவேஇருக்கிறது அப்பாவின் பாக்கெட்.

    இப்படி ஒரு நாள் அப்பாவின் பாக்கெட்டில் கையை விடும்போது அப்பாவிடமே கையும் காசுமாக மாட்டிவிட, அப்போது மீராபோடும் ஆட்டம் தான் அந்த "லகலக சாமியாட்டம்.

    அப்பாவைப் பார்த்து, டேய் ராமானுஜம்! என்னுடைய காசை எடுக்க நான் யாருகிட்டடா கேட்கணும்? என்று பல்லைநறநறவென கடித்துக் கொண்டே அலற, பயந்து போன அப்பா, அம்மா நீங்க யாரு? என்று கேட்கிறார்.

    நான் தாண்டா உன் குல தெய்வம் கெங்கம்மா என்று கூறி ஆட்டம் போடுவார். படம் வந்த பிறகு பாருங்கள் இந்தக் காட்சியில்மீரா பண்ணியிருக்கும் ரகளையை என்று முடித்தார் லிங்குசாமி.


    மீராவைப் பற்றிய ஒரு கொசுறு: இவரது அக்கா ஜெனிபரும் விரைவில் நடிக்க வரப்போகிறாராம். தற்போது விளம்பரப்படங்களில் கால் பதித்துள்ள இவர் விரைவில் கோலிவுட்டில் கால் பதிக்கப் போகிறார்.

    சண்டைக் கோழி படத்தில் நிஜமாகவே 2 பேர் சண்டைக் கோழிகளாகி விட்டனர். இயக்குனர் லிங்குசாமிக்கும், ஒளிப்பதிவாளர்ஜீவாவுக்கும் கசாமுசா ஆகி விட இப்போது அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பொறுப்பை ஏற்றிருப்பவர் ஆர்தர் வில்சன்.

    படம் முடிவதற்குள் வேறு யாரும் சண்டைக் கோழிகளாக ஆகாமல் இருந்தால் சரி!

      Read more about: meera jasmines samiattam
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X