twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    13ம் தேதி, வெள்ளிக்கிழமை, நடுராத்திரி... சுடுகாட்டில் ஷூட்டிங்... மாயமான ‘மசாலா பட’ யூனிட் !

    |

    சென்னை : வெண்ணிலா கபடிக்குழு, குள்ளநரிக் கூட்டம், தில்லு முல்லு படங்களின் ஒளிப்பதிவாளராக ல ஷ்மண், இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் ‘மசாலா படம்'.

    ‘ஆல் இன் பிக்சர்ஸ்'ன் முதல் தயாரிப்பாக வெளி வருகிறது இப்படம். இப்படத்தில் மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, புதுமுகம் கவுரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே'வில் நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    புதுமுகம் கார்த்திக் ஆச்சார்யா இப்படதிற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார் , கலை இயக்கம் விஜி, நிர்வாக தயாரிப்பை அப்சர் கவனிக்கிறார்.

    நண்பர்களாக சேர்ந்து பண்ணும் படம் என்பதால் படப்பிடிப்பு எப்போதும் கலகலப்பாகவே காணப்படுகிறதாம்.

    சுடுகாட்டுல ஷூட்டிங்...

    சுடுகாட்டுல ஷூட்டிங்...

    படத்துல ஒரு காட்சிக்கு சுடுகாட்டுல படமாக்க வேண்டி இருந்ததாம். எதேச்சையாக படப்பிடிப்பு நடத்த வேண்டிய நாள் 13ம் தேதி வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டதாம்.

    வெள்ளிக்கிழமை நடுராத்திரி...

    வெள்ளிக்கிழமை நடுராத்திரி...

    நடுராத்திரி ஷூட்டிங் என எல்லாருக்கும் சொல்லப்பட்டதாம். பொதுவாக 13ம் தேதி வெள்ளிக்கிழமை தான் பேய், பிசாசுகளுக்கு உகந்த நாள்னு பெரும்பாலானவர்களுக்கு ஒரு நம்பிக்கை.

    அப்டியே ஷாக் ஆகிட்டேன்...

    அப்டியே ஷாக் ஆகிட்டேன்...

    ஆனா, நம்ம ஆளுங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டாங்க' என நினைத்த இயக்குநர் லஷ்மண், நடுராத்திரி ஸ்பாட்டுக்கு போய் அதிர்ந்து விட்டாராம்.

    யாரைத் திட்ட...

    யாரைத் திட்ட...

    காரணம், எல்லாரும் பயத்துல ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி லீவ் போட்டுட்டாங்களாம். அதனால யாரை திட்டுறதுனு இயக்குநரும் மவுனமா திரும்பிட்டாராம்.

    ஜாலி, கேலி...

    ஜாலி, கேலி...

    இப்படி ஜாலி கேலிக்கு நடுவே தான் மணமணக்க ‘மசாலா'வைக் கிண்டி வருகிறார்களாம் படக்குழுவினர்.

    English summary
    Masala Padam is a movie directed by Lakshman and playing by Mirchi Siva and Simha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X