»   »  ரஸ்தாலி தனுஷும், பப்பாளி முமைத்கானும்!

ரஸ்தாலி தனுஷும், பப்பாளி முமைத்கானும்!

Subscribe to Oneindia Tamil

அய்யங்கார் கெட்டப்பில் படு அமர்க்களான, குத்துப் பாட்டுக்கு முமைத் கானுடன் இணைந்து தனுஷ் சிலிர்க்க வைக்க ஆடியுள்ளாராம் பரட்டைஎன்கிற அழகசுந்தரம் படத்துக்காக.

சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறான் பரட்டை. கன்னடத்தில் ஜோகி என்ற பெயரில் ஓடி பெரும் வெற்றியைப் பெற்றஇப்படம், தெலுங்கில் யோகி என்ற பெயரில் வெளியாகி சுமாராக ஓடியது.

இப்படத்தை தமிழில் தயாரித்து, அதில் தனுஷை நடிக்க வைக்கு அட்வைஸ் செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடிபோட்டிருப்பவர் மீரா ஜாஸ்மின்.

சமீபத்தில் இப்படத்துக்காக செமையான குத்துப் பாட்டை படமாக்கினர். அய்யங்கார் ஆத்து அம்பி வேடத்தில் தனுஷ் கலக்கலான கெட்டப்புக்குமாறியிருந்தார். கூட கொக்கியைப் போட முமைத் கான், கொஞ்சூண்டு துணியுடன் வியர்க்க விறுவிறுக்க காத்திருந்தார்.

இருவரும் இணைந்து ஆட பாடல் ஒலித்தது. என்ன பாட்டு தெரியுமா?

நீ ரஸ்தாலி பழம் கேட்டா, நான் பப்பாளி பழம் தருவேன் ... இதுதான் பாடலின் முதல் வரியாம். பாட்டுக்கு முமைத்கான் காட்டியுள்ள முரட்டுஅசைவுகள், இளகிய மனங்களை ரொம்ப இளக்கி விடுமாம். அப்படி ஒரு அடாவடி அசத்தலாம்.

தனுஷுக்கு சும்மாவே டான்ஸுன்னா, குச்சி ஐஸ் சாப்பிடுவது போல. இதில் முமைத் கானுடன் இணைந்து, பின்னி எடுத்திருக்கிறாராம். இந்தப்பாட்டுக்கு ஆடுவதற்காக முமைத் கானுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார்களாம். சீரும், சிறப்புமாக கிளாமர் காட்ட வேண்டும்என்பதற்காகத்தான் இந்த தூக்கல் சம்பளமாம்.

முமைத்கானின் மும்முர குத்தாட்டத்தில் பம்பரமாக சுழலப் போகிறார்கள் ரசிகர்கள்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil