»   »  ஜலக் ஜலக் மும்தாஜ் தளக் தளக் டிஆர்

ஜலக் ஜலக் மும்தாஜ் தளக் தளக் டிஆர்

Subscribe to Oneindia Tamil

இத்தனை நாட்களாக காணாமல் போயிருந்த மும்தாஜின் குறும்பாட்டத்தைவீராச்சாமியில் பார்க்கலாமாம். குரு டி.ராஜேந்தருடன் சேர்ந்து அவர் போட்டுள்ளஆட்டம், லேட்டஸ்ட் இளசுகளுக்கே சவால் விடும் வகையில், சப்ஜாடாகஇருக்கிறதாம்.

டி.ராஜேந்தரின் நடிப்பில், இயக்கத்தில், பாடல்களில், இசையில், ஒளிப்பதிவில், கதை,திரைக்கதையில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம்தான் வீராசாமி.

ஏங்க இப்படி ஒரு வித்தியாசமான பெயர் என்று அவரிடம் கேட்டபோது, ரஜினியின்வீரா மிகப் பெரிய வெற்றிப் படம். அதேபோல விக்ரமின் சாமி மிகப் பெரிய ஹிட்படம்.

இந்த இரண்டு படங்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு எனது படம் ஓடும்.அதனால்தான் இரு பெரும் ஹிட் படங்களின் பெயரை இணைத்து வீராசாமி என்றுபெயர் வைத்தேன், ஆ..டங்கு டக்கா, ஏ..டமுக்கு டக்கா என்று காரணம்சொல்லியிருந்தார் டி.ஆர்.

இப்படத்தில் வழக்கம் போல ஹீரோ ஒரு புதுமுகம். ஹீரோயினாக மேக்னா நாயுடு,ரசிகர்களை மெல்ட் ஆக்கும் வகையில் நடித்துள்ளார். கூடவே, சால்ட் கொட்டா சரசுஎன்ற ஜலக் ஜலக் கேரக்டரில் படு ஜில்லிப்பாக நடித்துள்ளார் மும்தாஜ்.

இவருக்கு ஆத்தா வேடத்தில் வருபவர் முன்னாள் உலுக்கல் நாயகி ஷர்மிலி.இருவரும் சேர்ந்து தளுக்கித் தள்ளியுள்ளனராம்.

வீராசாமியில் விசேஷம் என்னவென்றால் மும்தாஜும், டி.ஆரும் சேர்ந்து ஒரு டூயட்பாடியுள்ளனராம். அதுவும் எப்படி, விஜய், அஜீத் கணக்கில் படு ஷோக்காக சூட்கோட் போட்டுக் கொண்டு படு ஜோராக டான்ஸ் ஆடியுள்ளாராம் டி.ஆர்.

மும்தாஜ் கொஞ்சம் போல குண்டடித்துக் காணப்பட்டாலும் கூட இந்தப் பாடலுக்காகஆடியபோது அசத்தி விட்டாராம். கூட சேர்ந்து ஆடிய டி.ஆர்.தான் ரொம்பக்களைப்பாகிப் போய் விட்டாராம்.

அவரது தலைமுடி கிழக்கில் ஆட, தலை தெற்கில் போக, உடம்போ வடக்கைநோக்கி வண்டியெடுக்க, மேற்குப் பக்கமாக ஆடி யூனிட்டையே அசரஅடித்திருக்கிறார் டி.ஆர்.

நீண்ட ஷெர்வாணி சகிதம் டி.ஆர். வந்து ஆடியபோது யூனிட்டே ஆடி விட்டதாம்(உற்சாகத்தில்தான்..). விஸ்தீரண டி.ஆரும், உப்பிய மும்தாஜும் சேர்ந்துபோட்டிருக்கும் ஆட்டம், டங்கணக்காவாக வந்திருக்கிறதாம்..

இந்தப் பாட்டுக்காக வரிகளை அற்புதமாக போட்டுள்ளாராம் டி.ஆர். இப்போது வரும்குத்துப் பாட்டுக்களைப் போலவே இது இருந்தாலும், வரிகளில் தமிழ் தாலாட்டும்,ஆங்கிலப் பேயை ஓட்டும் என முழங்குகிறார் டி.ஆர்.

இந்தப் பாடல் காட்சியின் ஸ்டில்களைப் பார்க்கும்போதே அடி வயிறு அங்கயும்,இங்கயும் ஓடியாடுது, தியேட்டரில் இப்பாடலைப் பார்க்கும்போது எப்படிஇருக்குமோ.

யம்மா, யம்மா, யம்மா, யம்மம்மா...

Read more about: mumtajtrs duet in veerasamy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil