»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"தத்தித் தாவுது மனசு" படத்தை தன் மேனேஜர் ரியாஸை வைத்து பினாமியாகத் தயாரித்து வரும்மும்தாஜ் இந்தப் படத்துக்காக ரொம்பவே உடலை வருத்தி வருகிறாராம்.

"குண்டக்க மண்டக்க" மூவ்மென்ட்ஸ் வைத்து தமிழக ரசிகர்களை மூச்சுத் திணற வைத்த மும்தாஜ்திடீரென காணாமல் போனார்.

உடம் அதிகம் ஊதியதால் ஆட முடியாமல் தவித்தார். சிலஆபரேசன்களையும் செய்துவிட்டு வந்தார். ஆனால், சான்ஸ்கள் தான் கிடைக்கவில்லை.

இதையடுத்து இப்போது தானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இதன்மூலம் தனக்கு தமிழில் மறுஜென்மம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இதற்காகத் தான் தன்னை வருத்திக்கொண்டு உழைக்கிறார்.

இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் வரும் மும்தாஜ் 3 விதமான கெட்டப்பில் வருகிறார்.

அதில் ஒரு கெட்டப்பாக மீன்காரி வேடம் போட்டு கவர்ச்சியை கலக்கி கலக்கிகொடுத்திருக்கிறாராம்.

"செக்ஸ் பாம்", "கிளாமர் குவீன்" என்று சொன்னவர்கள் எல்லாம் என்னை இனிமேல் "ஆக்டிங் குவீன்"என்றும் பாராட்டப் போகிறார்கள்.

அந்த அளவுக்கு நடித்திருக்கிறேன் என்று பெருமை பொங்கக்கூறுகிறார் மும்ஸ்.

உங்கிட்ட யாரு நடிப்பை எதிர்பார்த்தாங்க மும்ஸ்?? என்று கேட்டால் செல்லமாகசிணுங்குகிறார்.

மேலும் இந்தப் படத்தில் தான் அறிமுகம் செய்யும் 3 குலுக்கல்ஸ் நடிகைகளுக்கு டான்ஸ் பயிற்சி, மூவ்மெண்ட்ஸ்பயிற்சியை மும்தாஜே சொல்லித் தருகிறாராம். அதிலும் குறிப்பாக சிந்தூரி மீது ரொம்பவே அக்கறை எடுத்துடான்ஸ் சொல்லித் தருகிறாராம்.

இவர் மீது மட்டும் மும்தாஜ் தனி கவனம் செலுத்துவது மற்ற இரண்டு பேரையும்கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil