துவங்காமல் உள்ள நானே வருவேன் படத்தின் சூட்டிங்... 16ம் தேதி சூட்டிங் துவக்கம்!

சென்னை : நடிகர் தனுஷ் தன்னுடைய அண்ணனின் டைரக்ஷனின் இணையவுள்ள படம் நானே வருவேன்.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை சூட்டிங் துவங்கப்படாத நிலையில் தற்போது அக்டோபர் 16ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் அவர் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அவரின் ஜகமே தந்திரம் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

அவர் ஹாலிவுட் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய நிலையில் அடுத்தடுத்த தமிழ் படங்களில் பிசியோ பிசி. தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் தனுஷிற்கு ஜோடி சேர்ந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வரும்நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு அடுத்ததாக அவரது அண்ணனின் இயக்கத்தில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தள்ளிப்போன நானே வருவேன் படம்

தள்ளிப்போன நானே வருவேன் படம்

முன்னதாக இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தனுஷின் கால்சீட் கிடைக்காததாலும், சாணிக் காயிதம் மற்றும் பீஸ்ட் படங்களில் செல்வராகவன் பிசியாக நடித்து வந்ததாலும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் சங்கர் ராஜா இசை

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ள நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ளார். மேலும் கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரிக்கவுள்ளார். புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X