»   »  "கிக்"மா ஆன நக்மா!

"கிக்"மா ஆன நக்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாவூத் இப்ராகிம் வகையறாக்களுடன் ஒரு பக்கம் கிசுகிசுக்கப்பட்டாலும், மறுபக்கம் தனது கவர்ச்சி ஆட்டத்தில் படுமும்முரமாகத் தான் இருக்கிறார் நக்மா.

இயக்குனர் ஷங்கரின் காதலனில் அறிமுகமாகி தமிழில் ஒரு ரவுண்டு வந்து அதே வேகத்தில் ஓடிப் போன நக்மா, சர்ச்சைகளில்சிக்குவது புதிதில்லை. முன்பு சரத்குமாருடன் படு நெருக்கமாக சுற்றி வந்தார். கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகக் கூடகூறப்பட்டது. கடைசியில் பங்களாவை மட்டும் வாங்கிக் கொண்டு சரத்தை கைவிட்டு விட்டார்.

பின்னர் இந்திய கிரிக்கெட் கேப்டன் செளரவ் கங்குலியுடன் கிசுகிசுக்கப்பட்டார். கங்குலியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதாகவும்பகிரங்கமாக தெரிவித்தார். இந்த பகிரங்க அறிவிப்பால் கங்குலியை அவரது மனைவி டோனா விவாகரத்து செய்யப்போவதாகவும் பரபரப்பாக பேச்சு அடிபட்டது.

அந்த பரபரப்பில் கொஞ்ச நாளைக்கு காலத்தை ஓட்டிய நக்மா, சமீபத்தில் சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் தாவூத்தின்கூட்டாளிகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்பட்டபோது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.

இத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் அதைப் பற்றியெல்லாம் பெரிய அளவில் நக்மா அலட்டிக் கொள்வதில்லை. தாவூத்பிரச்சினையில் சூடாக அடிபட்டுக் கொண்டிருந்தாலும் படு சூடான ஒரு படத்தில் அதிபுயங்கர கவர்ச்சியுடன் நடித்து அசத்திக்கொண்டுள்ளார் நக்மா.

உத்திரபிரதேசம், பீகார் உட்பட சில வட மாநிலங்களில் அதிக அளவில் பேசப்படும் போஜ்புரி மொழியில் தயாராகும் " பண்டிட்ஜிபட்டாய் நா பியா கப் ஹோய் (இவ்வளவு நீளமாகவா பேர் வைப்பார்கள்?) என்ற படத்தில் நக்மா இதுவரை இல்லதை வகையில்வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளாராம்.

இந்தப் படத்தின் ஹீரோவான ரவிகிஷன், சிறையில் அடைக்கப்படுவாராம். சிறையிலிருக்கும் அவருடைய கனவில் நக்மாவைவருகிறார். அப்புறமென்ன டூயட் தான். பாட்டில் குட்டைப் பாவாடையுடன் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட வரும் நக்மாவின்பாவாடையை கற்பனையாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ரவிகிஷன் மேலே தூக்குகிறாராம்.

பாவாடை மேலே போகப்போக, அதை வெட்கத்துடன் நக்மா கீழே இழுக்க.. இந்தக் காட்சியை படு கிளாமராகபடமாக்கியிருக்கிறார்களாம். நக்மாவின் இந்த கிளாமர் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுமாம் -தாவூத் மேட்டரை விடபடு சூடாக!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil