»   »  நளினி, தீபா அடிதடி!!!

நளினி, தீபா அடிதடி!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவியில் படு பிசியாக நடித்து வரும் முன்னாள் நாயகி நளினியும், இளம் டிவி நடிகையான தீபா வெங்கட்டும்ஷூட்டிங் ஸ்பாட்டில் தலை முடியைப் பிடித்து உலுக்கிக் கொண்டு அடித்துக் கொண்ட சம்பவம் சின்னத் திரைஉலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குதிரை நடை நாயகி என்ற செல்லப் பெயர் கொண்டவர் நளினி. ஒரு காலத்தில் மோகன், சத்யராஜ் எனஅந்தக்கால செகண்ட் ரேங்க் நாயகர்களுடன் பிசியான ஹீரோயினாக நடித்தவர் நளினி.

பிறகு ராமராஜனை காலதித்து கல்யாணம் செய்து கொண்டு அருண், அருணா என இரட்டைக் குழந்தைகளைப்பெற்றவர். சில வருடங்களுக்கு முன்பு ராமராஜனை விட்டுப் பிரிந்தார்.

இரு குழந்தைகளுடன் இப்போது தனியாக வசித்து வரும் நளினி, டிவி நாடகங்களில் படு பிசியான அம்மாவாகதிறமை காட்டி வருகிறார். தமிழ் தவிர மலையாள, தெலுங்கு டிவி சீரியல்களிலும் நளினியின் திறமை கல்லாக்கட்டி வருகிறது.

அம்மா நடிகைகளிலேயே நளினிதான் இப்போ ரொம்ப டிமாண்டுக்குரிய நடிகை. இவரைப் போலவே பிசியானஇளம் நடிகை தீபா வெங்கட். ரொம்ப காலமாக டிவி பெட்டிக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பவர்.அவ்வப்போது திரைப்படங்களிலும் தலை காட்டுவார். முன்னணி நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுப்பார்.

சீனியர் டிவி நடிகைகளில் ஒருவரான தீபா வெங்கட்டுக்கும், நளினிக்கும் சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் முட்டிக்கொண்டு விட்டதாம். கோலங்கள் உள்பட ஓரிரு சீரியல்களில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

சமீபத்தில் செட்டில் இருந்தபோது ஏதோ ஒரு காரணத்திற்காக இருவருக்கும் பயங்கர வாய்ச்சண்டை வந்துள்ளது.அது அப்படியே கைலகலப்பாக மாறி குடுமி பிடிச் சண்டையாகி விட்டதாம். செட்டில் இருந்தவர்கள் இந்தசண்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நின்று விட்டார்களாம்.

பின்னர் அங்கிருந்த பெண்கள் உள்ளே புகுந்து மிகுந்த கஷ்டப்பட்டு இருவைரயும் விலக்கி விட்டனராம். என்னகாரணத்திற்காக சண்டை தெரியவில்லை. ஆனால் ரொம்ப நாளாகவே இருவருக்கும் புகைச்சல் இருந்து வந்ததாம்.அது இப்போது வெடித்து வெங்காயம் போல உரிந்து விட்டதாம்.

இப்படிச் சண்டை போட்ட பின்னரும் கூட யாராவது என்னாச்சு என்று கேட்டால், அய்யோ, அப்படியெல்லாம்ஒண்ணும் இல்லை நான் அம்மா மாதிரி, அவ மக மாதிரி என்று கேட்டு புல்லரிக்க வைக்கிறாராம் நளினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil