»   »  நமிதா இடையளந்த சூர்யா!

நமிதா இடையளந்த சூர்யா!

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் நமீதாவின் இடுப்பை கையால் அளந்து, அளப்பறிய சந்தோஷத்தைஎஸ்.ஜே.சூர்யா அடைவது போன்ற ஒரு குளுகுளு குல்மா காட்சியை சமீபத்தில்வியாபாரி படத்துக்காக இயக்குநர் ஷக்தி சிதம்பரம் படமாக்கியுள்ளார்.

நமீதா, மாளவிகா, தமன்னா என மூன்று தக்காளிகளை, எஸ்.ஜே.சூர்யாவோடு ஜோடிசேர்த்து படு கதகதப்பான கதைப் பின்னணியில் ஷக்தி எடுத்து வரும் படம் தான்வியாபாரி.

மூன்று முத்தான நாயகிகள் இருப்பதால் படம் முழுக்க பப்பளக்காவாக இருக்கும்என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவுகிறது. பல ஏரியாக்களின் விநியோக உரிமைஏற்கனவே விற்று விட்டதாகக் கூட கூறுகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சியை படு சூடாக படமாக்கினார் ஷக்தி.அதாவது உடலை கும்மென வைத்துக் கொள்வதற்காக தினசரி ஜிம்முக்குப் போய்வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்வாராம் நமீதா.

பயிற்சிகளை முடித்தவுடன் உடல் அங்கங்களின் அளவுகளை மீட்டர் போட்டு அளந்துசரி பார்த்துக் கொள்வாராம். அன்று அவர் போனபோது அளவு எடுக்கும்பொண்ணைக் காணோம். இதனால் யாரை வைத்து அளக்கலாம் என நமீதாயோசிக்கிறார்.

அப்போது அங்கே எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்த எஸ்.ஜே.சூர்யாவைப்பார்க்கிறார். பார்வையில் அணல் பறக்கிறது. அது சூர்யாவையும் சுடுகிறது.நமீதாவைப் பார்க்கிறார் சூர்யா. கண்களால் அழைக்கிறார் நமீதா.

பக்கத்தில் வருகிறார் சூர்யா. மீட்டரைக் கையில் கொடுத்து அளந்து கொடேன்என்கிறார் நமீதா. மீட்டரை எடுத்து மேட்டரை ஆரம்பிக்கிறார் சூர்யா. மேலிருந்துஆரம்பிக்கிறார். முதுகை முடித்து விட்டு இடுப்புக்கு வரும்போது அளந்துகொண்டிருக்கும்போது நிலை தடுமாறி மீட்டரைக் கீழே போட்டு விடுகிறார்.

அது போனால் என்ன ,கைதான் இருக்கிறதே, அதை வைத்து அளந்து விடு என்றுபெருமூச்செறிந்து பெர்மிஷன் கொடுக்கிறார் நமீதா. சூர்யாவும் தத்திங்கிணத்தோம்போடும் நெஞ்சோடு நமீதாவின் இடையில் கை வைத்து இன்ச் பை இன்ச்சாக அளக்கஆரம்பிக்கிறார்.

நமீதாவுக்கோ கண்கள் சொருக, சூர்யாவுக்கு உணர்ச்சி பெருக, அங்கே ஆரம்பிக்கிறதுபாட்டு.

தா தா நமீதா தாகம் எடுக்குது தண்ணி தா என சூர்யா எடுக்க, யா யா சூர்யா, தேகம்முழுக்க உந்தன் ஏரியா என்று நமீதா கொடுக்க, ஒரே அமர்க்கள அட்டகாசமாகபோகிறது பாட்டு.

இந்தப் பாடல் காட்சியில் சூர்யாவும், நமீதாவும் போட்டி போட்டு பட்டையைக்கிளப்பியிருக்கிறார்களாம் ஆட்டத்தில். கூட, 100 நடனக் கலைஞர்களும் சேர்ந்துகொண்டு சிலுப்பியிருக்கிறார்கள்.

நமிதாவின் இடுப்பு அல்வாத் துண்டா அல்லது அல்வா மலையான்னு சூர்யா கிட்டதனியா போய்க் கேட்டா தெரியும்..

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil