»   »  மயக்கடித்து விழுந்த நந்திதா!

மயக்கடித்து விழுந்த நந்திதா!

Subscribe to Oneindia Tamil

ஈர நிலம் நந்திதா, படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈர நலம் மூலம் நடிகையான டான்ஸ் மாஸ்டர் சின்னாவின் மகளான நந்திதா பெரியஅளவில் பிரகாசிக்கவில்லை. அவ்வப்போது ஏதாவது படத்தில் தலையைக் காட்டிவருகிறார். தற்போது வசந்தம் வந்தாச்சு என்ற படத்தில் நடித்து வருகிறார் நந்தி. இதில்இவருக்கு ஜோடி போட்டிருப்பவர் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு.

நந்திதா இப்படத்தில் ஒரு கிளாமர் பாடலுக்கு ஆட்டம் போடும் காட்சியை கற்பகம்ஸ்டூடியோவில் படமாக்கினர். சின்னாதான் நடனத்தை வடிவமைத்திருந்தார். பத்ரகாளிஎன்ற படத்தில் இடம் பெற்ற கேட்டேளே அங்கே, அதை பார்த்தேளா இங்கே என்றஅட்டகாசமான மாமி பாட்டை ரீமேக் செய்து இப்படத்தில் இடம் பெறவைத்துள்ளனர்.

இந்தப் பாட்டுக்காகத்தான் நந்திதா கெட்ட கெட்டப்பில் கலக்காக ஆடிக்கொண்டிருந்தார். இந்த ஆட்டத்திற்காக சில சிரமமான மூவ்மென்ட்களைவைத்திருந்தார் சின்னா.

இருந்தாலும் கடுமையாக பிராக்டிஸ் செய்து அந்த மூவ்மென்ட்களையும் ஆடிஅசத்தினார் நந்திதா. பாடல் காட்சிக்காக ஆடிக் கொண்டிருந்தபோது அவருக்குதிடீரென மயக்கம் வந்து விட்டது. இதனால் அபபடியே விழுந்து விட்டார்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நந்திதாவுக்கு குளிர்பானங்களைக் கொடுத்துஆசுவாசப்படுத்தினர்.

ரெஸ்ட் இல்லாமல் தொடர்ந்து ஆடியதால் இந்த மயக்கமாம். கொஞ்ச நேரஇடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆடி அந்தப் பாட்டை முடித்துக் கொடுத்தார்நந்திதா. சிரமப்பட்டு ஆடினாலும், சிலாகிக்கும்படி கலக்கலாக ஆடியிருக்கிறாராம்நந்திதா.

உயிரை உருக்கும் ஆட்டமாக இது இருந்தாலும், உயிரைக் கொடுத்து நந்திதாஆடியிருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil