»   »  கிறங்கி கொல்லும் நந்திதா!

கிறங்கி கொல்லும் நந்திதா!

Subscribe to Oneindia Tamil

பிறப்பு படத்தில் ஈர நிலம் நந்திதா மிக கெறக்கமாக ஆடி ரசிகர்களை இம்சித்துள்ளார்.

தூத்துக்குடி நாயகி சாத்துக்குடிகார்த்திக அநடித்துள்ள 2வது படம்தான் பிறப்பு. தெத்துப் பல் அழகும், முத்துசிரிப்புமாக ரசிகர்களை முதல் படத்திலேயே வசீகரித்தவர் கார்த்திகா.

தனது பிறப்பு படத்திலும் ரசிகர்களை லயிக்க வைக்கும் வகையில் பல மேட்டர்களை இறக்கி விட்டுள்ளாராம்கார்த்திகா. படத்தை இயக்கியிருக்கம் இளங்கோவன் லேசுப்பட்ட ஆள் இல்லை. பாலாவின் அசோசியேட்.பிறப்பிலும், பாலாவின் பன்ச் ஆங்காங்கே பளிச்சிட்டுள்ளதாம்.

ஹீரோ தம்பி பிரபாவும் சாதாரணப் பார்ட்டி இல்லை. இயக்குநர் லிங்குச்சாமியின் சொந்தக்காரர் தான். இவர்ஜெயிக்கலைன்னா என்னைத்தான் திட்டும் எங்க சொந்தம் என்று பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தலிங்குச்சாமி பெருமையோடு அங்கலாய்த்தார்.

படத்தின் முக்கிய ஹைலைட்டே நந்திதா போட்டுள்ள கடலைதான்.

கடலைன்னா கடலை
இது கரிசக் காட்டு கடலை
விடலைன்னா விடலை

இது எதையும் விடலை

என்னை யாரும் இன்னும் தொடலை

என்று ஆரம்பிக்கும் பாட்டுக்கு நந்திதா போட்டுள்ள ஆட்டம், சாதா குத்து இல்லையாம், சரியான புரோட்டைகுத்தாம். கிளாமரில் வெட்டுக் குத்தே நடந்துள்ளதாம்.

இந்தப் பாட்டுக்கு தியேட்டர்களில் சி கிளாஸ் ரசிகர்கள் சிலிர்க்க வைக்கும் ஆட்டம் போடுவார்கள் என்பதற்குஇயக்குநர் இளங்கோவன் இப்போதே உத்தரவாதம் தருகிறார்.

படத்தில் இடம் பெறும் எந்த ஒரு காட்சியும் அனாவசியமாக இருக்காது, பாட்டாக இருந்தாலும் சரி,குத்தாட்டமாக இருந்தாலும் சரி, வசனமாக இருந்தாலும் சரி எல்லாவற்றுக்கும் ஒரு காரண காரியம் இருக்கும்.அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்து எடுத்துள்ளேன் என்கிறார் இளங்கோவன்.

நந்திதாவின் குத்தாட்டம் மட்டும் படத்தின் முக்கிய அம்சம் இல்லையாம். கார்த்திகாவுக்கும் அருமையான ஒருஆட்டத்தைக் கொடுத்துள்ளாராம்.

இந்த இருவர் தவிர மயூகா என்ற மயிலிறகு மாதிரியான ஒரு பார்ட்டியும் படத்தில் இருக்கிறார்.

ட்ரிபிள் பேரல் கன் உஷார்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil