நந்திதா தாசின் கமலி கொஞ்ச காலமாக தென் இந்திய சினிமா பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்த நந்திதா தாஸ் மீண்டும் வருகிறார்.இம்முறை தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறார்.கண்ணத்தில் முத்தமிட்டால், அழகி, விஸ்வ துளசி என அட்டகாசமான படங்கள் மூலம் தமிழில் கலக்கியவர்நந்திதா. அதே நேரத்தில் பயர் மாதிரியான படங்களிலும் தனது மறு பக்கத் திறமையைக் காட்டி எல்லோரையும்ஆச்சரிப்பட வைத்தவர்.கடைசியாக இவர் நடித்த விஸ்வ துளசி பெரும் தோல்வியடைந்தது. இதனால் தமிழ் இவரை மறந்தேவிட்டது.இந் நிலையில் அவார்ட் பட இயக்குனர் கேஎன்டி சாஸ்திரி இயக்கும் கமலி என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கப்போகிறார் நந்திதா.இந்தப் படத்தில் செளந்தர்யா தான் நடிக்க இருந்ததாம். அவரது திடீர் மரணத்தையடுத்து பட திட்டதையே தூக்கிபரணில் போட்டுவிட்டாராம் சாஸ்திரி.பின்னர் மீரா ஜாஸ்மீனை ஹீரோயினாக்கி படத்தை எடுக்க திட்டமிட்டார்களாம். இதற்காக மீராவிடம் கால்ஷீட்எல்லாம் வாங்கிய நிலையில், அவர் சொதப்பல் செய்ததால் அவரைத் தூக்கிவிட்டு நந்திதா தாஸைஹீரோயினாக்கிருக்கிறார்கள்சாஸ்திரி முன்பு இயக்கிய திலாதனம் படம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே மாதிரி இந்தப்படமும் பெண்களின் பிரச்சனையைப் பற்றி அலசும் மிக வித்தியாசமான கதையோட்டம் கொண்டதாம்.கதையைக் கேட்டவுடன் இதில் நடிக்க முன் வந்துவிட்டாராம் நந்திதா தாஸ். தெலுங்கு தவிர இந்தியிலும் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் நாள் பூஜையோடு தொடங்கிய சூட்டிங் ஸ்பாட்டுக்குடீச்சர் மாதிரி டிரஸ் அணிந்து மிக கெளரவமாக வந்திருந்தார் நந்திதா. இது தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கு மிகவித்தியாசமான அனுபவம்.காரணம், வழக்கமாக பூஜைக்கு வரும் நடிகைகள் பட தயாரிப்புப் பார்ட்டிகளையும் கேமராக்களையும் கவரவசதியாக, கொஞ்சம்போல உடையில் தான் வருவார்கள்.சேலையில் வந்திருந்த நந்திதா.. அட்டகாசமாக இருந்தார், ஒரு தேவதை மாதிரி.
கொஞ்ச காலமாக தென் இந்திய சினிமா பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்த நந்திதா தாஸ் மீண்டும் வருகிறார்.இம்முறை தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறார்.
கண்ணத்தில் முத்தமிட்டால், அழகி, விஸ்வ துளசி என அட்டகாசமான படங்கள் மூலம் தமிழில் கலக்கியவர்நந்திதா. அதே நேரத்தில் பயர் மாதிரியான படங்களிலும் தனது மறு பக்கத் திறமையைக் காட்டி எல்லோரையும்ஆச்சரிப்பட வைத்தவர்.
கடைசியாக இவர் நடித்த விஸ்வ துளசி பெரும் தோல்வியடைந்தது. இதனால் தமிழ் இவரை மறந்தேவிட்டது.
இந் நிலையில் அவார்ட் பட இயக்குனர் கேஎன்டி சாஸ்திரி இயக்கும் கமலி என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கப்போகிறார் நந்திதா.
இந்தப் படத்தில் செளந்தர்யா தான் நடிக்க இருந்ததாம். அவரது திடீர் மரணத்தையடுத்து பட திட்டதையே தூக்கிபரணில் போட்டுவிட்டாராம் சாஸ்திரி.
பின்னர் மீரா ஜாஸ்மீனை ஹீரோயினாக்கி படத்தை எடுக்க திட்டமிட்டார்களாம். இதற்காக மீராவிடம் கால்ஷீட்எல்லாம் வாங்கிய நிலையில், அவர் சொதப்பல் செய்ததால் அவரைத் தூக்கிவிட்டு நந்திதா தாஸைஹீரோயினாக்கிருக்கிறார்கள்
சாஸ்திரி முன்பு இயக்கிய திலாதனம் படம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே மாதிரி இந்தப்படமும் பெண்களின் பிரச்சனையைப் பற்றி அலசும் மிக வித்தியாசமான கதையோட்டம் கொண்டதாம்.
கதையைக் கேட்டவுடன் இதில் நடிக்க முன் வந்துவிட்டாராம் நந்திதா தாஸ்.
தெலுங்கு தவிர இந்தியிலும் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.
படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் நாள் பூஜையோடு தொடங்கிய சூட்டிங் ஸ்பாட்டுக்குடீச்சர் மாதிரி டிரஸ் அணிந்து மிக கெளரவமாக வந்திருந்தார் நந்திதா. இது தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கு மிகவித்தியாசமான அனுபவம்.
காரணம், வழக்கமாக பூஜைக்கு வரும் நடிகைகள் பட தயாரிப்புப் பார்ட்டிகளையும் கேமராக்களையும் கவரவசதியாக, கொஞ்சம்போல உடையில் தான் வருவார்கள்.
சேலையில் வந்திருந்த நந்திதா.. அட்டகாசமாக இருந்தார், ஒரு தேவதை மாதிரி.


Click it and Unblock the Notifications











