இடறி விழுந்த நர்கீஸ்!

By Staff

நினைத்தாலே படத்தின் நாயகி நர்கீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.

தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தர் இப்போது இயக்குநராகி விட்டார். அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம்நினைத்தாலே. நர்கீஸ் என்ற புதுமுகம், நாயகியாக முகம் காட்டுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோல்கொண்டவில் நடந்தது. அங்குள்ள கோட்டையில் வைத்து 2 நாட்களுக்குபடப்பிடிப்பு நடத்தினர். நான்தானா, நான்தானா என்ற பாடல் காட்சியைத்தான் அங்கு படமாக்கினர்.

ஒரு காட்சியின்போது கோட்டைச் சுவரின் மீதிருந்து நர்கீஸ் கீழே குதிப்பது போலவும், அவரை அருகே ஓடிவந்து ஹீரோ சுசி பிடித்துக் கொள்வது போலவும் படமாக்கினர்.

இதற்காக கீழே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு நர்கீஸை குதிக்கச் சொன்னார்கள். நர்கீஸும்மேலிருந்து குதித்தார். ஆனால், அப்போது கால் இடறி, கீழே விழுந்து உருண்டார் நர்கீஸ்.

இதில் நர்கீஸின் இடது முழங்கால் மற்றும் கணுக்காலில் பலத்த அடிபட்டு கிழிந்து ரத்தம் வழிந்தது. அலறித்துடித்த நர்கீஸை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

நர்கீஸ் இப்போ எப்படி இருக்கிறார் என்று இயக்குநர் சுந்தரிடம் கேட்டபோது, நல்லா இருக்கார். பாடல்காட்சியை மீண்டும் அங்கேயே படமாக்க உள்ளோம் என்றார்.

அப்படியே கூடுதலாக ஒரு செய்தியையும் காதில் போட்டார். படத்தோட கிளைமாக்ஸ் காட்சியைநக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள காட்டுக்குள் வைத்து சுட்டோம் என்றார் சுந்தர்.

நர்கீஸ் கால் முக்கியம்ப்பா, பாத்துக்குங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X