துணை நடிகையை தாக்கிய நவ்யா-சேரன் மாயக்கண்ணாடி படப்பிடிப்பின்போது நவ்யா நாயருக்கும், துணை நடிகை பிரியா என்பவருக்கும் இடையேபெரிய அடிதடி நடந்தது. நவ்யாவுக்கு ஆதரவாக துணை நடிகையை இயக்குனர் சேரனும் முதுகில் குத்தினார்.இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்புக்குள்ளானது.சேரன் இயக்கத்தில் உருவாகும் மாயக்கண்ணாடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்யா. சலூன்கடை வைத்திருப்பவராக சேரனும், பியூட்டி பார்லர் நடித்துபவராக நவ்யாவும் நடிக்கின்றனர்.சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. தி.நகரில் நவ்யா நாயர், சில துணை நடிகைகள்சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டன.சூட்டிங் இடைவெளியின்போது பிரியா என்ற துணை நடிகை செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரைக்கூப்பிட்ட நவ்யா, செல்போனை ஆஃப் செய்.. சூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனில் பேசக் கூடாது என்றுடைரக்டர் சொல்லிருக்கிறார் என்று கூறியுள்ளார்.இதனால் பிரியாவுக்கும் கோபம் ஏறி விட்டது. நான் சூட்டிங் இடைவெளியில் தானே பேசினேன். நான்பேசுவதை நிறுத்தச் சொல்ல நீ யார்? நீ என்ன டைரக்டரா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டுள்ளார் பிரியா.இதையடுத்து சேரனிடம் ஓடிய நவ்யா, பிரியா மீது புகார் தந்துள்ளார். இதையடுத்து ப்ரியாவை அழைத்த சேரன்,நவ்யாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.நான் ஏன் இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நவ்யாவை பிரியா முறைக்கவே, அவரைஅறைந்துள்ளார் நவ்யா. இதையடுத்து பிரியாவும் நவ்யாவுக்கு கன்னத்தில் ஒரு பளார் விட்டார். இதையடுத்தஇருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.சீனியர் நடிகையையே அடிக்கிறாரா என்று கேட்டபடி, பிரியாவின் முதுகில் அடித்துள்ளார் சேரன். கடுப்பானபிரியா, நடிகைன்னா எல்லோரும் ஒண்ணு தான் என்று சொல்லிபடி சேரனை பதிலுக்கு அடிக்கப் பாய்ந்துள்ளார்.இதனால் சூட்டிங் ஸ்பாட்டே களேபரமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரியா மீது போலீசில் புகார் கொடுக்கசேரன் முயற்சித்துள்ளார். ஆனால், அவரை தடுத்த அவரது நண்பர்கள், போலீசுக்கு போனால் ரொம்பஅசிங்கமாகிவிடும். இதனால் மூன்று பேரும் சமாதானமாகப் போய்விடுங்கள் என்று அறிவுறுத்தினர்.இதையடுத்து போலீசுக்குப் போவதை சேரன் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது. நமக்குள்ளேயே சமாதானமாகப்போய்விடலாம் என சேரன் கூறியதை பிரியா ஏற்றுக் கொண்டுவிட்டார்.ஆனால், நவ்யா நாயர் மட்டும் கோபித்துக் கொண்டு கேரளாவுக்கு பிளேன் ஏறிவிட்டார்.ஏற்கனவே மலையாளப் படம் ஒன்றின் ஷூட்டிங்கின்போதும் நவ்யா நாயருக்கும், கூட நடிக்கும் ஹீரோயின்ஒருவருக்கும் இடையே அடிதடி நடந்ததாக செய்திகள் வந்தன.இப்போது துணை நடிகையுடன் கும்மாங்குத்து சண்டை போட்டுள்ளார் நவ்யா.நவ்யாவுக்கு என்னாச்சு?

By Staff
மாயக்கண்ணாடி படப்பிடிப்பின்போது நவ்யா நாயருக்கும், துணை நடிகை பிரியா என்பவருக்கும் இடையேபெரிய அடிதடி நடந்தது. நவ்யாவுக்கு ஆதரவாக துணை நடிகையை இயக்குனர் சேரனும் முதுகில் குத்தினார்.இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டே பரபரப்புக்குள்ளானது.

சேரன் இயக்கத்தில் உருவாகும் மாயக்கண்ணாடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்யா. சலூன்கடை வைத்திருப்பவராக சேரனும், பியூட்டி பார்லர் நடித்துபவராக நவ்யாவும் நடிக்கின்றனர்.

சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. தி.நகரில் நவ்யா நாயர், சில துணை நடிகைகள்சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டன.

சூட்டிங் இடைவெளியின்போது பிரியா என்ற துணை நடிகை செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவரைக்கூப்பிட்ட நவ்யா, செல்போனை ஆஃப் செய்.. சூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போனில் பேசக் கூடாது என்றுடைரக்டர் சொல்லிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதனால் பிரியாவுக்கும் கோபம் ஏறி விட்டது. நான் சூட்டிங் இடைவெளியில் தானே பேசினேன். நான்பேசுவதை நிறுத்தச் சொல்ல நீ யார்? நீ என்ன டைரக்டரா என்று கோபமாக பதில் கேள்வி கேட்டுள்ளார் பிரியா.

இதையடுத்து சேரனிடம் ஓடிய நவ்யா, பிரியா மீது புகார் தந்துள்ளார். இதையடுத்து ப்ரியாவை அழைத்த சேரன்,நவ்யாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.

நான் ஏன் இவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நவ்யாவை பிரியா முறைக்கவே, அவரைஅறைந்துள்ளார் நவ்யா. இதையடுத்து பிரியாவும் நவ்யாவுக்கு கன்னத்தில் ஒரு பளார் விட்டார். இதையடுத்தஇருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.

சீனியர் நடிகையையே அடிக்கிறாரா என்று கேட்டபடி, பிரியாவின் முதுகில் அடித்துள்ளார் சேரன். கடுப்பானபிரியா, நடிகைன்னா எல்லோரும் ஒண்ணு தான் என்று சொல்லிபடி சேரனை பதிலுக்கு அடிக்கப் பாய்ந்துள்ளார்.

இதனால் சூட்டிங் ஸ்பாட்டே களேபரமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரியா மீது போலீசில் புகார் கொடுக்கசேரன் முயற்சித்துள்ளார். ஆனால், அவரை தடுத்த அவரது நண்பர்கள், போலீசுக்கு போனால் ரொம்பஅசிங்கமாகிவிடும். இதனால் மூன்று பேரும் சமாதானமாகப் போய்விடுங்கள் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து போலீசுக்குப் போவதை சேரன் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது. நமக்குள்ளேயே சமாதானமாகப்போய்விடலாம் என சேரன் கூறியதை பிரியா ஏற்றுக் கொண்டுவிட்டார்.

ஆனால், நவ்யா நாயர் மட்டும் கோபித்துக் கொண்டு கேரளாவுக்கு பிளேன் ஏறிவிட்டார்.

ஏற்கனவே மலையாளப் படம் ஒன்றின் ஷூட்டிங்கின்போதும் நவ்யா நாயருக்கும், கூட நடிக்கும் ஹீரோயின்ஒருவருக்கும் இடையே அடிதடி நடந்ததாக செய்திகள் வந்தன.

இப்போது துணை நடிகையுடன் கும்மாங்குத்து சண்டை போட்டுள்ளார் நவ்யா.

நவ்யாவுக்கு என்னாச்சு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X