»   »  கெளம்பிருச்சுய்யா...! தமிழ் சினிமாவில் டிஸ்கஷன் என்ற வார்த்தைக்கு ஏகப்பட்ட பொருள் உள்ளது. எங்கே செய்கிறார்கள், யார் யார் செய்கிறார்கள், எந்த நேரத்தில் நடக்கிறது என்பதைப் பொருத்து அதற்குரிய அர்த்தத்தை எடுத்துக் கொள்வார்கள். படத்தில் நடிக்கும் ஹீரோயினுடன், இயக்குனரோ அல்லது ஹீரோவோ டிஸ்கஷன் செய்தால் அதற்கு ஏகப்பட்ட அர்த்தம் கற்பிக்கப்படும், வதந்திகள் புறப்படும். அத்தகைய ஒரு டிஸ்கஷன் பத்தித்தான் இந்த நியூஸே!

கெளம்பிருச்சுய்யா...! தமிழ் சினிமாவில் டிஸ்கஷன் என்ற வார்த்தைக்கு ஏகப்பட்ட பொருள் உள்ளது. எங்கே செய்கிறார்கள், யார் யார் செய்கிறார்கள், எந்த நேரத்தில் நடக்கிறது என்பதைப் பொருத்து அதற்குரிய அர்த்தத்தை எடுத்துக் கொள்வார்கள். படத்தில் நடிக்கும் ஹீரோயினுடன், இயக்குனரோ அல்லது ஹீரோவோ டிஸ்கஷன் செய்தால் அதற்கு ஏகப்பட்ட அர்த்தம் கற்பிக்கப்படும், வதந்திகள் புறப்படும். அத்தகைய ஒரு டிஸ்கஷன் பத்தித்தான் இந்த நியூஸே!

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் டிஸ்கஷன் என்ற வார்த்தைக்கு ஏகப்பட்ட பொருள் உள்ளது. எங்கே செய்கிறார்கள், யார் யார் செய்கிறார்கள், எந்த நேரத்தில் நடக்கிறது என்பதைப் பொருத்து அதற்குரிய அர்த்தத்தை எடுத்துக் கொள்வார்கள்.

படத்தில் நடிக்கும் ஹீரோயினுடன், இயக்குனரோ அல்லது ஹீரோவோ டிஸ்கஷன் செய்தால் அதற்கு ஏகப்பட்ட அர்த்தம் கற்பிக்கப்படும், வதந்திகள் புறப்படும். அத்தகைய ஒரு டிஸ்கஷன் பத்தித்தான் இந்த நியூஸே!

இப்போது வதந்தியில் சிக்கியுள்ளவர் அட்டகாசமான படங்களை அடுத்தடுத்து கொடுத்து தமிழ் சினிமாவின் காலரை உயர்த்திப் பிடிக்கும் இயக்குனர் சேரன்தான். அவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுபவர் நவ்யா நாயர்.

இருவரும் சேர்ந்து ஆடும் கூத்து என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். மலையாள இயக்குனர் டி.வி.சந்திரன் இப்படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதை களத்துடன் உருவாகும் ஆடும் கூத்தில் நவ்யா நாயர் மொட்டை கெட்டப் உள்பட 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.


இந்தப் படத்தில் நவ்யாவின் நடிப்பால் ரொம்பவே கவரப்பட்ட சேரன், தனது அடுத்த படமான மாயக் கண்ணாடியிலும் நவ்யாவை தனது ஜோடியாக்கியுள்ளார். இதில்தான் வதந்தியில் சிக்கி விட்டார்.

ஆடும் கூத்து மற்றும் மாயக்கண்ணாடி படத்தின் கதை தொடர்பாகவும், தங்களது கேரக்டர் குறித்தும் அடிக்கடி நவ்யாவுடன் டிஸ்கஷன் செய்கிறாராரம் சேரன். இதை வைத்து ஏகப்பட்ட கதைகளை கிளப்பி விட ஆரம்பித்துள்ளார்கள் கோலிவுட்காரர்கள்.

தாங்கள் பரப்பும் வதந்திகளுக்கு அவர்கள் பக்க பலமான காரணமாக காட்டுவது, நவ்யாவை ஓவராக புகழ்கிறார் சேரன், கோபிகாவுக்குப் பதில் உங்களைத்தான்ஆட்டோகிராப்பில் போடுவதாக இருந்தேன், ஆனால் நீங்கள் கிடைக்காததால் அது முடியவில்லை, அப்படி, இப்படி என்று சேரன் கூறுவதை நம்ப முடியலையே என்று அவர்கள் புலம்புகிறார்கள்.

கோலிவுட்டில் என்ன கூறினாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத சேரன் தனது டிஸ்கஷனை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் உள்ளார்.


ஆடும் கூத்திலும், மாயக் கண்ணாடியிலும் சேரனும், நவ்யாவும் போட்டி போட்டு நடித்து வருகிறார்களாம்.

நவ்யாவோடு சேர்ந்து சேரன் டான்ஸிலும் பிரமாதப்படுத்தி வருகிறாராம். இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி, பட்டயைக் கிளப்பப் போவதாக சேரன் தரப்பு ரொம்ப சந்தோஷத்துடன் கூறுகிறது.

பத்மப்பிரியாவோடு செய்த டிஸ்கஷன் என்னாச்சுண்ணே!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil