»   »  நவ்யாவும், அக்காவும் இளம் நடிகைகள் சிலரை விட அவர்களது அம்மாக்கள் படு அட்டகாசமாகஇருப்பார்கள். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் நவ்யாவின் அம்மாவும்!

நவ்யாவும், அக்காவும் இளம் நடிகைகள் சிலரை விட அவர்களது அம்மாக்கள் படு அட்டகாசமாகஇருப்பார்கள். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் நவ்யாவின் அம்மாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளம் நடிகைகள் சிலரை விட அவர்களது அம்மாக்கள் படு அட்டகாசமாகஇருப்பார்கள். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் நவ்யாவின் அம்மாவும்!

த்ரிஷாவை விட அவரது அம்மாவுக்கு கோலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.குறிப்பாக விக்ரமுக்கு த்ரிஷாவை விட அவரது அம்மா உமாதான் ரொம்பஅழகானவராகத் தெரிகிறார்.

உமாவைப் பார்த்து விட்டால் போதும், நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பாராம். த்ரிஷாவே வந்து கலைத்து விட்டால்தான் உண்டாம். இதுலவிசேஷம் என்னவென்றால், உமாவை விட விக்ரமுக்கு வயசு சாஸ்தி!

இதேபோல, கோபிகாவின் அம்மாவும் படு பாந்தமாக இருப்பார். முன்புகோலிவுட்டில் கோபிகா படு பிசியாக இருந்த நேரத்தில் கோபிகாவுடன் அவரதுஅம்மாவும், ஷூட்டிங் ஸ்பாட், திரை நிகழ்ச்சிகளுக்கு வருவார்.

அப்போது கோபிகாவை விட அவரது அம்மாவுக்குத்தான் பலத்த வரவேற்புகிடைக்கும். அந்த அளவுக்கு படு ப்யூட்டி, கோபிகாவின் மம்மி!


இவர்களைப் போலவே, நயன்தாரா, நமீதா, சந்தியா என ஏகப்பட்ட அழகுபதுமைகளின் அம்மாக்களுக்கும் கோலிவுட்டில் ரசிகர்கள் உண்டு.

சில அம்மாக்களை நடிக்க வைக்கவும் கோலிவுட்டார்கள் முயற்சித்து தோற்றுப்போனதுண்டு.

இப்போது கோலிவுட் வட்டாரத்தைக் கவர்ந்த அழகிய அம்மாக்களின் வரிசையில்நவ்யாவின் அம்மையும் சேர்ந்துள்ளார். நவ்யா நாயர் இதுவரை தனியாகவேஷூட்டிங்குகளுக்கு வந்து சென்றார்.

இப்போது பிசியாகி விட்டதால் அலைச்சல் அதிகமாகி விட்டது. இதனால் சரியாகசாப்பிடுவதில்லை, ரொம்ப டெடிகேட்டாக நடித்து வருவதால் உடம்பு பாதித்துவிடுமோ என்று பயந்து அவருடன், இப்போது நவ்யாவின் அம்மாவும் வரஆரம்பித்துள்ளார்.

ஷூட்டிங்கின்போது நவ்யாவின் அம்மாவைப் பார்த்த பலரும் ஆவென வாயைப்பிளக்கிறார்களாம்.

இவரே நடிக்கலாம் போலிருக்கே, என்று ஜொள்ளி ஜொள்ளி ஸாரி.. சொல்லி சொல்லிமாய்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.


இது யாரு உங்க அக்காவா, படு க்யூட்டா இருக்காங்களே என்று நவ்யாவிடமே சிலர்வம்பு செய்கிறார்களாம். இதைக் கேட்கும் நவ்யாவுக்கு சந்தோஷம் பிச்சுக்குதாம்.அம்மாவுக்கு வெட்கம் வந்துவிடுகிறதாம்.

இப்போது சேரனுடன் நடித்து வரும் ஆடும் கூத்து, மாயக்கண்ணாடியை ஆகியபடங்களை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறாராம் நவ்யா.

ஏனாம்? வேறு எதுக்கு, சம்பளத்தை மொள்ளமா உயர்த்தி விடத்தான்.

அதானே.. சொந்த ஊரு கேரளமல்லோ...!

பிட்டூஸ்:

தொலை தூரக் கல்வியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கும் நவ்யா கடந்த வாரத்தில் பரீட்சை எழுத ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருக்கிறார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil