»   »  செக்ஸ் தொந்தரவு: கேரளாவில் சுகன்யா பட்டபாடு!

செக்ஸ் தொந்தரவு: கேரளாவில் சுகன்யா பட்டபாடு!

Subscribe to Oneindia Tamil

நடிகை சுகன்யாவிடம் செக்ஸ் தொந்தரவு செய்த கேரளாவைச் சேர்ந்த டிவி தொடர் தயாப்பாளர்கள் 14 பேரைபோலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.

சமீப காலமாக நடிகைகள் செக்ஸ் தொந்தரவில் சிக்குவது அதிகரித்து வருகிறது. பாலிவுட்டில் ஆரம்பித்த இந்தவிவகாரம் தற்போது கோலிவுட்டுக்கும் வந்து விட்டது.

கோடம்பாக்கத்தில் சமீபத்தில் அனாமிகாவில் தொடங்கிய இந்த புகார், ராதா, ஷராவியா, தனுஜா என நீண்டுகொண்டே போகிறது.

இதுவரை பெரிய திரையில் மட்டுமே அதிகமாக இருந்து வந்த இந்த செக்ஸ் புகார் இப்போது சின்னத்திரைபக்கமும் வந்து விட்டது. டிவி தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மீது நடக்கும் பாலியல் அநீதிகள் குறித்துஏகத்துக்கும் செய்திகள் வருகின்றன.

இந்தப் பட்டியலில் சுகன்யாவும் இடம் பிடித்துவிட்டார்.

பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான சுகன்யா குறுகிய காலத்திலேயே முன்னணிஇடத்தை பிடித்தார். கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் என மூத்த நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்த இவருக்குகாலப்போக்கில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.

இதனால் திருமணமாகி செட்டில் ஆனவர், கணவரை விட்டுவிட்டுத் திரும்பி வந்து டிவி தொடர்களில் நடிக்கஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏராளமான டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் நடித்த கடமற்றத்து கத்தனார் என்ற டிவி தொடர், இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.இதற்குப் பிறகு பல மலையாள தொடர்களில் நடிக்க சுகன்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந் நிலையில், அவரை சமீபத்தில் சில இளைஞர்கள் சந்தித்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த அவர்கள், தாங்கள்மலையாளத்தில் ஒரு டிவி தொடரை எடுக்கப் போவதாகவும், அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றுசுகன்யாவிடம் கூறியுள்ளனர். அதை ஏற்றுக் கொண்டுள்ளார் சுகன்யா.

இதையடுத்து தொடரை மொத்தம் 14 பேர் சேர்ந்து தயாரிக்கப் போவதாகவும், அனைவரிடமும் நீங்கள்அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என்றும் சுகன்யாவிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் தரப்பில் இருந்து தொந்தரவு அதிகரித்துள்ளது. அவரை வளைக்க இந்த இளைஞர்கள் பல வகையிலும்முயற்சிக்கவே, சுகன்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதால், கண்ணூ<ர் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளரை அணுகி புகார் செய்துள்ளார். போலீஸார் சம்பந்தப்பட்ட 14 பேரையும் அழைத்துவிசாரித்துள்ளனர்.

அப்போது தாங்கள் அவ்வாறு கூறவில்லை என்றும் தொடரில் சுகன்யாவின் கேரக்டர் எப்படி அமைய வேண்டும்,அவரது மேக்கப், கெட்டப் குறித்துத்தான் விவாதித்தாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து இனிமேல் இதுபோன்ற புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து 14பேரையும் போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த செக்ஸ் கும்பலிடமிருந்து தப்பித்த சுகன்யா தற்போது சென்னைக்கே வந்து விட்டார். இனிமேல் கேரள டிவி,சினிமா பக்கம் அவர் போவது சந்தேகமே.


Read more about: sex torture for suganya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos