நவ்யாவும் 600 ரூபாயும் 7வெறும் 600 ரூபாய் பாக்கி வைத்ததற்காக படப்பிடிப்பையே நிறுத்த முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு நடிகை.அது வேறு யாருமல்ல. அழகிய தீயாக வந்து சிதம்பரத்தில் அப்பாசாமி உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்நவ்யா நாயர் தான் அந்த பெருமையைப் பெற்றவர்.கோலிவுட்டை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது மலையாள குஜிலிகள் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால்தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் 90 சதவீத படங்களிலும் மலையாள மங்கைகளின் ஆதிக்கம் தான் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கிறது.முதலில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு பிறகு எம். குமரன் சன் ஆப் மகாலெட்சுமி மூலம் மார்க்கெட் பிடித்தஅஸினின் கைவசம் இப்போது குறைந்தது 4 படங்கள் உள்ளன. அதுவும் கோலிவுட்டின் தற்போதைய முன்னணி இளம்ஹீரோக்களான விஜய், சூர்யா, அஜித் ஆகியோர்களின் படங்களில் இவர் தான் நாயகி.இதற்கு அடுத்து ஐயா மூலம் மெதுவாக கோலிவுட்டில் கால் பதித்து, அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகிஇப்போது எஸ்.ஜே. சூர்யா, சிம்பு என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் உதட்டுக் கடி நாயகி நயன் தாரா.மலையாளத்தில் இவர் கடைசியாக நடித்த படத்திற்கு வாங்கிய சம்பளம் 5 லட்சத்திற்குள். விஜய்யின் சிவகாசி படத்திற்குவிஜய்யின் அன்பு வேண்டுகோளை ஏற்று இவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.அதற்கு இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை 10 லட்சம் தான். இப்படியே தெலுங்கு வழியாகஇந்தியிலும் கால் பதிக்கப் போகிறார் இவர்.இதற்கு அடுத்து கோலிவுட்டுக்குள் ஆட்டோகிராப் போட்டு உள்ளே நுழைந்தவர் கோபிகா. முதல் படம் ஓட, அதற்கு அடுத்துவந்த கனா கண்டேனும் பரபரப்பாக ஓட இவரது காட்டிலும் மழை. ஆட்டோகிராப் வந்த உடனேயே சிம்புவுடன் தொட்டி ஜெயாவில் இணைந்தார். தொடர்ந்து ரவி கிருஷ்ணாவுடன் பொன்னியின்செல்வன், தனுஷுடன் அசோகமித்ரன் என்று கோபிகாவின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.மலையாள குஜிலிகளின் பட்டியலில் நயன்தாராவுக்கு கொஞ்சம் முன்னதாக அழகிய தீயே மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர்நவ்யா நாயர். இவரது முதல் படமும் நன்றாக ஓடியதால் அமிர்தம், சிதம்பரத்தில் அப்பாசாமி, பேரவை என அடுத்தடுத்துகைவசம் படங்கள்.அப்பாசாமியை தங்கர்பச்சான் இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறார் என்று எல்லோருக்குமே தெரியும். இந்தப் படத்தில் 2குழந்தைகளுக்கு தாயாக நவ்யா நடித்து வருகிறார். (இந்த வேடத்தில் நடிக்க கோலிவுட்டில் யாருமே தயாராகவில்லை என்றுகுறிப்பிடத்தக்கது)முதலில் மிகவும் பாந்தமாக டைரக்டர் சொல்பேச்சைத் தட்டாமல் நவ்யா நடித்து வந்தார். பிறகு மெல்ல, மெல்ல டைரக்டரைடார்ச்சர் பண்ண ஆரம்பித்தார். சில காட்சிகளில் நடிக்க அவர் எதிர்ப்பு தெரிவித்தாராம்.வேறு வழியில்லாமல் தங்கர் நவ்யாவை அட்ஜஸ்ட் செய்து படத்தின் கிளைமாக்ஸ் வரை கொண்டு வந்து விட்டார். கிளைமாக்ஸ்காட்சி எடுக்கும் போது தான் நவ்யாவும் தனது கிளைமாக்ஸை அரங்கேற்றியுள்ளார்.கடைசி நாள் ஷூட்டிங். எல்லோரும் ரெடி. ஆனால் கதாநாயகி நவ்யாவை காணவில்லை. டென்ஷனான தங்கர் நவ்யாவை தேடிஆள் அனுப்பினார். அப்போது மேக்கப் ரூமில் இருந்த நவ்யா ஷூட்டிங்கிற்கு வரமுடியாது என்று கூறிவிட்டார்.என்ன, ஏது என்று விசாரித்தால் அவருக்கு முடியலங்காரம் செய்யும் பெண்ணுக்கு 600 ரூபாய் பாக்கி இருப்பதால் அதைக்கொடுத்தால் தான் வருவேன் என்று கூறியுள்ளார்.இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொண்டே அந்த 600 ரூபாயை உடனே செட்டில் செய்துள்ளார்.அதற்குப் பிறகே நவ்யா கிளைமாக்ஸ் காட்சியை முடித்துக் கொடுத்தாராம்.கடல் போல தண்ணீர் இருந்தாலும் எதுவோ, எப்படியோ குடிக்குமாம். அந்த பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது

By Staff

7வெறும் 600 ரூபாய் பாக்கி வைத்ததற்காக படப்பிடிப்பையே நிறுத்த முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு நடிகை.அது வேறு யாருமல்ல. அழகிய தீயாக வந்து சிதம்பரத்தில் அப்பாசாமி உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்நவ்யா நாயர் தான் அந்த பெருமையைப் பெற்றவர்.


கோலிவுட்டை இப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது மலையாள குஜிலிகள் என்று தான் கூறவேண்டும். ஏனென்றால்தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் 90 சதவீத படங்களிலும் மலையாள மங்கைகளின் ஆதிக்கம் தான் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கிறது.

முதலில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு பிறகு எம். குமரன் சன் ஆப் மகாலெட்சுமி மூலம் மார்க்கெட் பிடித்தஅஸினின் கைவசம் இப்போது குறைந்தது 4 படங்கள் உள்ளன. அதுவும் கோலிவுட்டின் தற்போதைய முன்னணி இளம்ஹீரோக்களான விஜய், சூர்யா, அஜித் ஆகியோர்களின் படங்களில் இவர் தான் நாயகி.

இதற்கு அடுத்து ஐயா மூலம் மெதுவாக கோலிவுட்டில் கால் பதித்து, அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகிஇப்போது எஸ்.ஜே. சூர்யா, சிம்பு என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் உதட்டுக் கடி நாயகி நயன் தாரா.

மலையாளத்தில் இவர் கடைசியாக நடித்த படத்திற்கு வாங்கிய சம்பளம் 5 லட்சத்திற்குள். விஜய்யின் சிவகாசி படத்திற்குவிஜய்யின் அன்பு வேண்டுகோளை ஏற்று இவர் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதற்கு இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை 10 லட்சம் தான். இப்படியே தெலுங்கு வழியாகஇந்தியிலும் கால் பதிக்கப் போகிறார் இவர்.

இதற்கு அடுத்து கோலிவுட்டுக்குள் ஆட்டோகிராப் போட்டு உள்ளே நுழைந்தவர் கோபிகா. முதல் படம் ஓட, அதற்கு அடுத்துவந்த கனா கண்டேனும் பரபரப்பாக ஓட இவரது காட்டிலும் மழை.

ஆட்டோகிராப் வந்த உடனேயே சிம்புவுடன் தொட்டி ஜெயாவில் இணைந்தார். தொடர்ந்து ரவி கிருஷ்ணாவுடன் பொன்னியின்செல்வன், தனுஷுடன் அசோகமித்ரன் என்று கோபிகாவின் பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.


மலையாள குஜிலிகளின் பட்டியலில் நயன்தாராவுக்கு கொஞ்சம் முன்னதாக அழகிய தீயே மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர்நவ்யா நாயர். இவரது முதல் படமும் நன்றாக ஓடியதால் அமிர்தம், சிதம்பரத்தில் அப்பாசாமி, பேரவை என அடுத்தடுத்துகைவசம் படங்கள்.

அப்பாசாமியை தங்கர்பச்சான் இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறார் என்று எல்லோருக்குமே தெரியும். இந்தப் படத்தில் 2குழந்தைகளுக்கு தாயாக நவ்யா நடித்து வருகிறார். (இந்த வேடத்தில் நடிக்க கோலிவுட்டில் யாருமே தயாராகவில்லை என்றுகுறிப்பிடத்தக்கது)

முதலில் மிகவும் பாந்தமாக டைரக்டர் சொல்பேச்சைத் தட்டாமல் நவ்யா நடித்து வந்தார். பிறகு மெல்ல, மெல்ல டைரக்டரைடார்ச்சர் பண்ண ஆரம்பித்தார். சில காட்சிகளில் நடிக்க அவர் எதிர்ப்பு தெரிவித்தாராம்.


வேறு வழியில்லாமல் தங்கர் நவ்யாவை அட்ஜஸ்ட் செய்து படத்தின் கிளைமாக்ஸ் வரை கொண்டு வந்து விட்டார். கிளைமாக்ஸ்காட்சி எடுக்கும் போது தான் நவ்யாவும் தனது கிளைமாக்ஸை அரங்கேற்றியுள்ளார்.

கடைசி நாள் ஷூட்டிங். எல்லோரும் ரெடி. ஆனால் கதாநாயகி நவ்யாவை காணவில்லை. டென்ஷனான தங்கர் நவ்யாவை தேடிஆள் அனுப்பினார். அப்போது மேக்கப் ரூமில் இருந்த நவ்யா ஷூட்டிங்கிற்கு வரமுடியாது என்று கூறிவிட்டார்.

என்ன, ஏது என்று விசாரித்தால் அவருக்கு முடியலங்காரம் செய்யும் பெண்ணுக்கு 600 ரூபாய் பாக்கி இருப்பதால் அதைக்கொடுத்தால் தான் வருவேன் என்று கூறியுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் தலையில் அடித்துக் கொண்டே அந்த 600 ரூபாயை உடனே செட்டில் செய்துள்ளார்.அதற்குப் பிறகே நவ்யா கிளைமாக்ஸ் காட்சியை முடித்துக் கொடுத்தாராம்.

கடல் போல தண்ணீர் இருந்தாலும் எதுவோ, எப்படியோ குடிக்குமாம். அந்த பழமொழி தான் நமக்கு நினைவுக்கு வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X