»   »  தெம்பு கொடுத்த உம்மா! முத்தம் கொடுத்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் (கொடுப்பவரையும், பெறுவதையும் பொறுத்து!

தெம்பு கொடுத்த உம்மா! முத்தம் கொடுத்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் (கொடுப்பவரையும், பெறுவதையும் பொறுத்து!

Subscribe to Oneindia Tamil
முத்தம் கொடுத்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் (கொடுப்பவரையும், பெறுவதையும் பொறுத்து!) என்பார்கள். ஆனால் நடிப்பு வரவேண்டும் என்பதற்காக ஒரு நடிகை, நடிகருக்கு உம்மா கொடுத்த கதை இது!

நவ்யா நாயர், கணேஷ் என்ற புதுமுகம் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் அமிர்தம். போர்த்திக் கொண்டு நடித்த நவ்யா இதில்கிளாமரில் தூள் பரத்தி வருகிறார். கணேஷ் தான் புதுமுகம், ஆனால் இவரது அப்பா திரையுலகில் ரொம்பப் பிரபலம்.

பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜனான முருகேசன் தான் கணேஷின் அப்பா. பல நடிகைகளின் முகம், மூக்கு, உதடுகளை சீர்படுத்திஅவர்களை மேலே தூக்கி விட்டவர் முருகேசன். அந்தக் கால ஸ்ரீதேவிக்கு இவர்தான் மூக்கை சரி செய்து கொடுத்தார். ரஜினியின்உதட்டில் இருந்த கருமை நிறத்தையும் சரி செய்து கொடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட பிரபலமான டாக்டரின் மகனான கணேஷ் தனது சொந்தத் திறமையால் இப்போது நடிகராகியுள்ளார். புதுமுகம்ஆனாலும் கூட நடிப்பில் கலக்கி வருகிறாராம் கணேஷ். ஆனால் நவ்யா நாயருடன் நடிக்கும்போது மட்டும் பதட்டமாகி பலடேக்குகளை வாங்கி வருகிறாராம்.

இயக்குநர் கூச்சப்பட வேண்டாம், தைரியமாக நடி என்று பலமுறை கூறியும் கணேஷுக்கு கூச்சம் போனபாடில்லை. இதனால்என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்த இயக்குநர், நவ்யா நாயரின் காதைக் கடித்துள்ளார். இயக்குநர் சொன்னதைப் புரிந்துகொண்ட நவ்யா, கணேஷை செட்டில் தனிமையான இடத்திற்கு அழைத்துப் போய் சகஜமாக பேசியுள்ளார்.

பின்னர், சினிமாங்கறது வெறும் நடிப்பு தான். இங்கு உணர்ச்சிகளுக்கு இடமில்லை. காதலிப்பது போல் நடிக்கத் தான்செய்கிறோம், நிஜமாகவே காதல் உணர்வை யாரும் அனுபவிப்பதில்லை. எனவே கூச்சப்பட்டால் கதை நடக்காது.

தைரியமாக நடிக்க வேண்டும் என்று கூறி அருகே அமர்ந்து, கணேஷின் தோளைப் பிடித்து சகஜமாக்கியுள்ளார். எதற்கும்இருக்கட்டுமே என்று கணேஷின் கையில் ஒரு உம்மாவும் கொடுத்து கணேஷை கூல் படுத்தினாராம்.

அப்புறம் என்ன, காதல் காட்சியிலும் பிற காட்சியிலும் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டாராம் கணேஷ். இப்போதெல்லாம்நவ்யா நாயர் சம்பந்தப்பட்ட காட்சிகளில், இயக்குநர் போதும் போதும் என்றாலும் கூட விடாமல் வெளுத்துக் கட்டுகிறாராம்கணேஷ்.

நவ்யா கொடுத்த உம்மாவால் கணேஷ் என்ற நடிகர், கம்ப்ளீட் நடிகராக மாறியுள்ளார் என்று இயக்குநர் பெருமைப்படுகிறார்.இயக்குநர் வேறு யாரும் அல்ல வேதம் புதிது படத்தின் வசனகர்த்தா கண்ணன் தான்.

பாசக்கிளிகளில் லேசு பாசாக கவர்ச்சி காட்டிய நவ்யா, அமிர்தத்தில் தேவாமிர்தமாக கிளாமரை அள்ளி தெளித்துள்ளாராம்.படத்தில் கிளாமர் மட்டும் தானா என்று கேட்டு விடாதீர்கள். நாத்திக கருத்துகளை ஆணித்தரமாக அள்ளித் தெளித்திருக்கிறாராம்கண்ணன் இப்படத்தில்.

காதலும், ஆத்திக, நாத்திக கருத்துக்களும் கலந்த அமிர்தம் இந்த அமிர்தம் என்றும் கூறுகிறார் கண்ணன்.


Read more about: navyas hesitation
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil