»   »  சேரனின் மாயக்கண்ணாடி சேரனுடன் ஆடும் கூத்து படத்தில் மொட்டை கெட்டப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நவ்யா நாயர் மீண்டும் ஒரு படத்தில் சேரனுடன் ஜோடி சேருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தப் படத்தின் தலைப்பு மீண்டும் மாறிவிட்டதாம். மலையாளத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய நவ்யா நாயர், தங்கர்பச்சானுடன் நடிக்கும்போது மட்டும் கெட்ட பெயர் வாங்கி விட்டார். அவரது பிடிவாதக் குணத்தால் பொங்கி எழுந்த தங்கர், கோபத்தில் வார்த்தைகளை விட தமிழ் சினிமா உலகையை அது ஒரு புரட்டு புரட்டி விட்டது. எந்தப் படம் (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) தனக்கு பெரும் தலைவலியைக் கொடுத்ததோ, அதேபடம்தான் நவ்யாவுக்கு இப்போது பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்து தமிழில் அவருக்கு பல நல்ல வாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. கலைஞர் கதை, வசனத்தில் உருவான பாசக்கிளிகள், அடுத்து அமிர்தம் என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து இப்போது மிக பிசியான நடிகையாக விட்டார் நவ்யா. அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஆடும் கூத்து. மலையாள இயக்குனர் டி.வி.சந்திரனின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நவ்யாவின் ஜோடி சேரன். ஆடும் கூத்தில் 3 விதமான கேரக்டர்களில் வருகிறார் நவ்யா. அதில் ஒன்று மொட்டைத் தலை நவ்யா. அச்சு அசலாக மொட்டைப் பாப்பாத்தியாகவே நடித்து வருகிறார் நவ்யா. இந்தப் படத்தின் இயக்குனர் சந்திரனுக்காக நடிக்க காசே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் நவ்யா. அதே போல காசு வேண்டாம் என்று இளையராஜாவும் கூறிவிட, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஆகியோரும் காசு வாங்காமல் வேலை பார்த்து வருகின்றனர். ஆடும் கூத்தில் நவ்யாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போன சேரன், தனது இயக்கத்தில் தயாராகும் தீராத காதல் படத்திலும் (முதலில் பொக்கிஷம்) நவ்யாவையே நாயகியாக்கி விட்டார் என்று சொன்னோம். இப்போது தீராத காதலும் கூட பெயர் மாறி மாயக்கண்ணாடி என்றாகிவிட்டது. படத்தின் பெயரை மட்டுமல்ல நாயகிகையும் 3வது முறையாக மாற்றியுள்ளார் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் மீரா ஜாஸ்மின் தான் இதில் நடிப்பதாக இருந்தது. அப்புறம் அவரை தூக்கி விட்டு காதல் சந்தியாவை போட்டார். இப்போது அவருக்கும் கல்தா கொடுக்கப்பட்டு விட்டு விட்டது. அவருக்குப் பதில்தான் நவ்யா நடிக்கவுள்ளார். சினிமாவில் இளையராஜாவுக்கு வாழ்வு தந்த பஞ்சு அருணாச்சலத்தின் சொந்தத் தயாரிப்புதான் மாயக்கண்ணாடி. சேரன் ஹீரோவாக நடித்து இயக்கவும் செய்கிறார். தேசிய கீதம் படத்திற்குப் பிறகு சேரனின் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணைகிறார் இசைஞானி இளையராஜா. இப்படத்தில் நவ்யாவுக்கு அட்டகாசமான வேடமாம். பா.விஜய். இளையராஜாவின் இசையில் எழுதிய பாடல் பதிவுடன் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியது. தமிழ்ப் புத்தாண்டுக்கு திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் சேரன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு கன்னடத்தில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. பிதாமகன் ரீ-மேக்கில் லைலா கேரக்டரில் நவ்யா நடிக்கப் போகிறார்.

சேரனின் மாயக்கண்ணாடி சேரனுடன் ஆடும் கூத்து படத்தில் மொட்டை கெட்டப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நவ்யா நாயர் மீண்டும் ஒரு படத்தில் சேரனுடன் ஜோடி சேருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அந்தப் படத்தின் தலைப்பு மீண்டும் மாறிவிட்டதாம். மலையாளத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய நவ்யா நாயர், தங்கர்பச்சானுடன் நடிக்கும்போது மட்டும் கெட்ட பெயர் வாங்கி விட்டார். அவரது பிடிவாதக் குணத்தால் பொங்கி எழுந்த தங்கர், கோபத்தில் வார்த்தைகளை விட தமிழ் சினிமா உலகையை அது ஒரு புரட்டு புரட்டி விட்டது. எந்தப் படம் (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) தனக்கு பெரும் தலைவலியைக் கொடுத்ததோ, அதேபடம்தான் நவ்யாவுக்கு இப்போது பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்து தமிழில் அவருக்கு பல நல்ல வாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. கலைஞர் கதை, வசனத்தில் உருவான பாசக்கிளிகள், அடுத்து அமிர்தம் என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து இப்போது மிக பிசியான நடிகையாக விட்டார் நவ்யா. அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஆடும் கூத்து. மலையாள இயக்குனர் டி.வி.சந்திரனின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நவ்யாவின் ஜோடி சேரன். ஆடும் கூத்தில் 3 விதமான கேரக்டர்களில் வருகிறார் நவ்யா. அதில் ஒன்று மொட்டைத் தலை நவ்யா. அச்சு அசலாக மொட்டைப் பாப்பாத்தியாகவே நடித்து வருகிறார் நவ்யா. இந்தப் படத்தின் இயக்குனர் சந்திரனுக்காக நடிக்க காசே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் நவ்யா. அதே போல காசு வேண்டாம் என்று இளையராஜாவும் கூறிவிட, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஆகியோரும் காசு வாங்காமல் வேலை பார்த்து வருகின்றனர். ஆடும் கூத்தில் நவ்யாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போன சேரன், தனது இயக்கத்தில் தயாராகும் தீராத காதல் படத்திலும் (முதலில் பொக்கிஷம்) நவ்யாவையே நாயகியாக்கி விட்டார் என்று சொன்னோம். இப்போது தீராத காதலும் கூட பெயர் மாறி மாயக்கண்ணாடி என்றாகிவிட்டது. படத்தின் பெயரை மட்டுமல்ல நாயகிகையும் 3வது முறையாக மாற்றியுள்ளார் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் மீரா ஜாஸ்மின் தான் இதில் நடிப்பதாக இருந்தது. அப்புறம் அவரை தூக்கி விட்டு காதல் சந்தியாவை போட்டார். இப்போது அவருக்கும் கல்தா கொடுக்கப்பட்டு விட்டு விட்டது. அவருக்குப் பதில்தான் நவ்யா நடிக்கவுள்ளார். சினிமாவில் இளையராஜாவுக்கு வாழ்வு தந்த பஞ்சு அருணாச்சலத்தின் சொந்தத் தயாரிப்புதான் மாயக்கண்ணாடி. சேரன் ஹீரோவாக நடித்து இயக்கவும் செய்கிறார். தேசிய கீதம் படத்திற்குப் பிறகு சேரனின் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணைகிறார் இசைஞானி இளையராஜா. இப்படத்தில் நவ்யாவுக்கு அட்டகாசமான வேடமாம். பா.விஜய். இளையராஜாவின் இசையில் எழுதிய பாடல் பதிவுடன் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியது. தமிழ்ப் புத்தாண்டுக்கு திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் சேரன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு கன்னடத்தில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. பிதாமகன் ரீ-மேக்கில் லைலா கேரக்டரில் நவ்யா நடிக்கப் போகிறார்.

Subscribe to Oneindia Tamil
சேரனுடன் ஆடும் கூத்து படத்தில் மொட்டை கெட்டப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நவ்யா நாயர் மீண்டும் ஒரு படத்தில் சேரனுடன் ஜோடி சேருகிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆனால், அந்தப் படத்தின் தலைப்பு மீண்டும் மாறிவிட்டதாம்.

மலையாளத்தில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கிய நவ்யா நாயர், தங்கர்பச்சானுடன் நடிக்கும்போது மட்டும் கெட்ட பெயர் வாங்கி விட்டார். அவரது பிடிவாதக் குணத்தால் பொங்கி எழுந்த தங்கர், கோபத்தில் வார்த்தைகளை விட தமிழ் சினிமா உலகையை அது ஒரு புரட்டு புரட்டி விட்டது.

எந்தப் படம் (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) தனக்கு பெரும் தலைவலியைக் கொடுத்ததோ, அதேபடம்தான் நவ்யாவுக்கு இப்போது பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்து தமிழில் அவருக்கு பல நல்ல வாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

கலைஞர் கதை, வசனத்தில் உருவான பாசக்கிளிகள், அடுத்து அமிர்தம் என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து இப்போது மிக பிசியான நடிகையாக விட்டார் நவ்யா. அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஆடும் கூத்து. மலையாள இயக்குனர் டி.வி.சந்திரனின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நவ்யாவின் ஜோடி சேரன்.

ஆடும் கூத்தில் 3 விதமான கேரக்டர்களில் வருகிறார் நவ்யா. அதில் ஒன்று மொட்டைத் தலை நவ்யா.

அச்சு அசலாக மொட்டைப் பாப்பாத்தியாகவே நடித்து வருகிறார் நவ்யா.

இந்தப் படத்தின் இயக்குனர் சந்திரனுக்காக நடிக்க காசே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் நவ்யா. அதே போல காசு வேண்டாம் என்று இளையராஜாவும் கூறிவிட, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஆகியோரும் காசு வாங்காமல் வேலை பார்த்து வருகின்றனர்.

ஆடும் கூத்தில் நவ்யாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போன சேரன், தனது இயக்கத்தில் தயாராகும் தீராத காதல் படத்திலும் (முதலில் பொக்கிஷம்) நவ்யாவையே நாயகியாக்கி விட்டார் என்று சொன்னோம்.

இப்போது தீராத காதலும் கூட பெயர் மாறி மாயக்கண்ணாடி என்றாகிவிட்டது.

படத்தின் பெயரை மட்டுமல்ல நாயகிகையும் 3வது முறையாக மாற்றியுள்ளார் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் மீரா ஜாஸ்மின் தான் இதில் நடிப்பதாக இருந்தது. அப்புறம் அவரை தூக்கி விட்டு காதல் சந்தியாவை போட்டார். இப்போது அவருக்கும் கல்தா கொடுக்கப்பட்டு விட்டு விட்டது. அவருக்குப் பதில்தான் நவ்யா நடிக்கவுள்ளார்.

சினிமாவில் இளையராஜாவுக்கு வாழ்வு தந்த பஞ்சு அருணாச்சலத்தின் சொந்தத் தயாரிப்புதான் மாயக்கண்ணாடி. சேரன் ஹீரோவாக நடித்து இயக்கவும் செய்கிறார். தேசிய கீதம் படத்திற்குப் பிறகு சேரனின் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணைகிறார் இசைஞானி இளையராஜா.

இப்படத்தில் நவ்யாவுக்கு அட்டகாசமான வேடமாம். பா.விஜய். இளையராஜாவின் இசையில் எழுதிய பாடல் பதிவுடன் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியது. தமிழ்ப் புத்தாண்டுக்கு திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார் சேரன்.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு கன்னடத்தில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. பிதாமகன் ரீ-மேக்கில் லைலா கேரக்டரில் நவ்யா நடிக்கப் போகிறார்.


Read more about: cherans maya kannadi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil