»   »  மீண்டும் 'வெத்தலையைப் போட்டேண்டி ...'

மீண்டும் 'வெத்தலையைப் போட்டேண்டி ...'

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்தக் காலத்தில் அட்டகாசமாக பேசப்பட்ட குத்துப் பாட்டான வெத்தலையப் போட்டேண்டி பாடல், பில்லா ரீமேக்கிலும் இடம் பெறுகிறது. அஜீத்துடன் இணைந்து நயனதாரா அட்டகாசமாக ஆடியுள்ளார்.

Click here for more images

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியாவின் கலக்கல் நடிப்பில் உருவான அதிரடிப் படம் பில்லா. இப்போது அதே பெயரில் மீண்டும் ரீமேக் ஆகிறது. ரஜினி வேடத்தில் அஜீத்தும், ஸ்ரீபிரியா வேடத்தில் நயனதாராவும், பிரமீளா வேடத்தில் நமீதாவும் அசத்துகின்றனர்.

தற்போது பில்லாவில் இடம் பெற்ற, கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து ஹிட் ஆன அந்தக் காலத்துக் குத்துப் பாட்டான வெத்தலையைப் போட்டேண்டி என்ற பாடல் ரீமேக் பில்லாவிலும் இடம் பெறுகிறது.

இந்தக் காலத்து டேஸ்ட்டுக்கேற்ப இப்பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். ரஜினிக்குப் பதில் அஜீத் வெத்தலையைப் போடுகிறார், ஸ்ரீபிரியாவுக்குப் பதில் நயனதாரா நளினமான ஆட்டத்தைப் போடுகிறார்.

இந்தப் பாடலை படமாக்குவதற்காக இன்று காலை அஜீத் உள்ளிட்டோர் மலேசியாவுக்குப் பறந்துள்ளனர். அங்குதான் இப்பாடலை அருமையாக படமாக்கவுள்ளனர்.

இந்தப் பாடலில் ஆடுவதற்காக ஆவலோடு காத்திருக்கிறாராம் நயனாரா. எம்.எஸ்.வி. போட்ட அருமையான ட்யூனை, இந்தக் காலத்து இளசுகளுக்கேற்ப இனிய முறையில் மாற்றி அமைத்துள்ளாராம் யுவன் ஷங்கர் ராஜா (இதம் கெடாமல்)

கல்யாண் இந்தப் பாடலுக்கு நடனம் வடிவமைத்துள்ளார். மிகவும் வித்தியாசமாக இப்பாடலைப் படமாக்குகிறார்களாம்.

இதற்கிடையே, நயனதாரா கால்ஷீட் குழப்பம் செய்வதாக தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷ் புகார் கூறியிருந்தார்.  இதைக் கேள்விப்பட்டதும் நயனதாரா அதிர்ச்சியாகி விட்டார். உடனடியாக தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகிய அவர் விளக்கம் அளித்தார். தயாரிப்பாளர் சொல்வது போல தான் குழப்பம் விளைவிக்கவில்லை என்றாராம்.

உண்மையில், இப்படத்துக்காக நயனதாரா கொடுத்திருந்த ஒரு மாத கால்ஷீட்டை படக்குழுவினர்தான் சரியாக பயன்படுத்தாமல் வீணடித்துள்ளனராம். இதனால்தான் புதிய தெலுங்குப் படத்துக்கு போய் விட்டார் நயனதாரா.

நயனதாராவின் விளக்கத்தை கேட்ட தயாரிப்பாளர் கவுன்சில், பில்லாவை முடிக்க கால்ஷீட்டுக்களை அட்ஜெஸ்ட் செய்து தருமாறு அவரை அறிவுறுத்தியதாம். மேலும் படத்தை திட்டமிட்டபடி தீபாவளிக்குக் கொண்டு வர உதவுமாறும் கேட்டுக் கொண்டதாம்.

இதையடுத்து நயனதாராவும் பெருந்தன்மையாக தெலுங்குப் படமான துளசிக்குக் கொடுத்திருந்த டேட்ஸ்களை, அப்படத்தின் தயாரிப்பாளரின் அனுமதியுடன் பில்லாவுக்குக் கொடுத்துள்ளாராம்.

தட்ஸ்குட்!

Read more about: nayanthara

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil