twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயனுக்கு மலையாள ரெட்? மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டு பின்னர் நடிக்க மறுத்துசென்னைக்குக் கிளம்பிச் சென்ற நடிகை நயனதாரா மீது ரெட் கார்டு போட மலையாளநடிகர் சங்கம் பரிசீலித்து வருகிறது.சுரேஷ் கோபி, கோபிகா, ஷம்ருத்தா, கார்த்திகா, மணிவண்ணன், ரஞ்சித் ஆகியோர்நடிக்கும் மலையாளப் படமான ஜென்மம் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்கபொள்ளாச்சியில் நடந்து வருகிறது.இந்தப் படத்தில் நடிகை வேடத்திலேயே நடிக்க நயனதாராவை ஒப்பந்தம்செய்திருந்தனர்.நடிகையாக நடிப்பதற்கும், ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கும் நயனதாராவுக்கு 5லட்சம் சம்பளமாக (தமிழிலில்தான் குண்டக்க மண்டக்க சம்பளம், மலையாளத்தில்நயனதாராவின் மதிப்பு இதுதான்!) பேசியிருந்தனர். இதில் இரண்டரை லட்சத்தைஅட்வான்ஸாக நயனதாரா வாங்கி விட்டார்.நயனதாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டிருந்தன. இதற்காக பொள்ளாச்சிக்கு வந்திருந்தார் நயனதாரா. நிவேதாஹோட்டலில் அவர் குடும்பத்தோடு வந்து தங்கியிருந்தார்.படப்பிடிப்புக்கு முதல் நாள் மாலை ஹோட்டலுக்கு வந்த பட இயக்குனர் ராஜன்சங்கராடி, தயாரிப்பு நிர்வாகி செவன் ஆர்ட்ஸ் மோகன் ஆகியோர் நயனதாராவிடம்காட்சிகளை விளக்கினர். பின்னர் மறுநாள் காலை வருவதாக கூறி விட்டுச் சென்றனர்.அடுத்த நாள் காலை 7 மணிக்கு தயாரிப்பு நிர்வாகி வந்தபோது, என்னால் இப்படததில்நடிக்க முடியாது. பாடல் காட்சியில் மட்டும்தான் ஆடுவேன் என்றுசொல்லியிலிருந்தேன். ஆனால் அதனுடன் இணைந்த காட்சிகளிலும் நடிக்க வேண்டும்என்று அவர்கள் சொல்லவில்லை. எனவே என்னால் வர முடியாது என்று நயனதாராகூறியுள்ளார்.இதையடுத்து கதாசிரியர், உதவி இயக்குனர் உள்ளிட்டோர் ஹோட்டலுக்கு வந்தனர்.அப்போது அவர்களை சத்தம் போட்டுத் திட்டிய நயனதாரா, மரியாதை குறைவாகவும்பேசியதாக தெரிகிறது.இதற்கிடையே, படப்பிடிப்புக்காக சுரேஷ் கோபி மற்றும் சென்னையிலிருந்து சென்றநடனக் குழுவினர், உடை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் நீண்டநேரமாக காத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் நயனதாரா வருவதாகத்தெரியவில்லை.இந் நிலையில் நயனதாரா ஹோட்டலைக் காலி செய்து விட்டு கேரளாவுக்குப் பறந்துவிட்டார். நயனதாராவின் இந்த செயலால் படக் குழுவினர் பெரும் அதிர்ச்சிஅடைந்தனர். ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடிதான் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.இதற்காக ரூ. 13 லட்சம் செலவில் பல ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அப்படிச்செய்தும் நயனதாராநநிடிக்க வராமல் போய் விட்டதால் அவர்கள் கடுப்பாகிவிட்டனர்.இதையடுத்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில்நயனதாரா மீது படத் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார். நயனதாரா மீதுநடவடிக்கை எடுக்கவும், அவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க தடை விதிப்பதுகுறித்தும் மலையாள நடிகர் சங்கம் யோசித்து வருகிறதாம்.இப்போது நயனதாராவுக்குப் பதில் வேறு நடிகையை வைத்து படம் எடுக்கதயாரிப்பாளர் மோகன் டிவு செய்துள்ளார்.நயனதாராவின் இந்த திடீர் ராவடிக்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது அவரதுமனம் கவர்ந்த நடிகர்தான், இப்படிப்பட்ட துணை நடிகை வேடம், சிங்கிள் பாட்டுக்குஆடுவது போன்றவற்றில் நடிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்தாராம். அதைக்கேட்ட பின்தான் நயனதாரா நடிக்க மறுத்தார் என்கிறார்கள்.விரைவிலேயே நயனதாராவுக்கு மலையாள திரையுலகம் ரெட் கார்டு போட்டு விடும்என்று கூறுகிறார்கள்.

    By Staff
    |
    மலையாளப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டு பின்னர் நடிக்க மறுத்துசென்னைக்குக் கிளம்பிச் சென்ற நடிகை நயனதாரா மீது ரெட் கார்டு போட மலையாளநடிகர் சங்கம் பரிசீலித்து வருகிறது.

    சுரேஷ் கோபி, கோபிகா, ஷம்ருத்தா, கார்த்திகா, மணிவண்ணன், ரஞ்சித் ஆகியோர்நடிக்கும் மலையாளப் படமான ஜென்மம் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்கபொள்ளாச்சியில் நடந்து வருகிறது.

    இந்தப் படத்தில் நடிகை வேடத்திலேயே நடிக்க நயனதாராவை ஒப்பந்தம்செய்திருந்தனர்.

    நடிகையாக நடிப்பதற்கும், ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கும் நயனதாராவுக்கு 5லட்சம் சம்பளமாக (தமிழிலில்தான் குண்டக்க மண்டக்க சம்பளம், மலையாளத்தில்நயனதாராவின் மதிப்பு இதுதான்!) பேசியிருந்தனர். இதில் இரண்டரை லட்சத்தைஅட்வான்ஸாக நயனதாரா வாங்கி விட்டார்.

    நயனதாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடிப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டிருந்தன. இதற்காக பொள்ளாச்சிக்கு வந்திருந்தார் நயனதாரா. நிவேதாஹோட்டலில் அவர் குடும்பத்தோடு வந்து தங்கியிருந்தார்.

    படப்பிடிப்புக்கு முதல் நாள் மாலை ஹோட்டலுக்கு வந்த பட இயக்குனர் ராஜன்சங்கராடி, தயாரிப்பு நிர்வாகி செவன் ஆர்ட்ஸ் மோகன் ஆகியோர் நயனதாராவிடம்காட்சிகளை விளக்கினர். பின்னர் மறுநாள் காலை வருவதாக கூறி விட்டுச் சென்றனர்.

    அடுத்த நாள் காலை 7 மணிக்கு தயாரிப்பு நிர்வாகி வந்தபோது, என்னால் இப்படததில்நடிக்க முடியாது. பாடல் காட்சியில் மட்டும்தான் ஆடுவேன் என்றுசொல்லியிலிருந்தேன். ஆனால் அதனுடன் இணைந்த காட்சிகளிலும் நடிக்க வேண்டும்என்று அவர்கள் சொல்லவில்லை. எனவே என்னால் வர முடியாது என்று நயனதாராகூறியுள்ளார்.

    இதையடுத்து கதாசிரியர், உதவி இயக்குனர் உள்ளிட்டோர் ஹோட்டலுக்கு வந்தனர்.அப்போது அவர்களை சத்தம் போட்டுத் திட்டிய நயனதாரா, மரியாதை குறைவாகவும்பேசியதாக தெரிகிறது.

    இதற்கிடையே, படப்பிடிப்புக்காக சுரேஷ் கோபி மற்றும் சென்னையிலிருந்து சென்றநடனக் குழுவினர், உடை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட படக் குழுவினர் நீண்டநேரமாக காத்துக் கொண்டிருந்தனர். ஆனாலும் நயனதாரா வருவதாகத்தெரியவில்லை.

    இந் நிலையில் நயனதாரா ஹோட்டலைக் காலி செய்து விட்டு கேரளாவுக்குப் பறந்துவிட்டார். நயனதாராவின் இந்த செயலால் படக் குழுவினர் பெரும் அதிர்ச்சிஅடைந்தனர். ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடிதான் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதற்காக ரூ. 13 லட்சம் செலவில் பல ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அப்படிச்செய்தும் நயனதாராநநிடிக்க வராமல் போய் விட்டதால் அவர்கள் கடுப்பாகிவிட்டனர்.

    இதையடுத்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில்நயனதாரா மீது படத் தயாரிப்பாளர் புகார் கொடுத்துள்ளார். நயனதாரா மீதுநடவடிக்கை எடுக்கவும், அவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க தடை விதிப்பதுகுறித்தும் மலையாள நடிகர் சங்கம் யோசித்து வருகிறதாம்.

    இப்போது நயனதாராவுக்குப் பதில் வேறு நடிகையை வைத்து படம் எடுக்கதயாரிப்பாளர் மோகன் டிவு செய்துள்ளார்.

    நயனதாராவின் இந்த திடீர் ராவடிக்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது அவரதுமனம் கவர்ந்த நடிகர்தான், இப்படிப்பட்ட துணை நடிகை வேடம், சிங்கிள் பாட்டுக்குஆடுவது போன்றவற்றில் நடிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்தாராம். அதைக்கேட்ட பின்தான் நயனதாரா நடிக்க மறுத்தார் என்கிறார்கள்.

    விரைவிலேயே நயனதாராவுக்கு மலையாள திரையுலகம் ரெட் கார்டு போட்டு விடும்என்று கூறுகிறார்கள்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X