»   »  நயன்ஸ் பிறந்தநாள்-சிம்பு இல்லை

நயன்ஸ் பிறந்தநாள்-சிம்பு இல்லை

Subscribe to Oneindia Tamil

சிம்பு இல்லாமல் தனது பிறந்த நாளை தெலுங்கு ஹீரோ, புரொடியூசர், டைரக்டருடன் மகிழ்ச்சியாகக்கொண்டாடினார் நயனதாரா.

சிம்பு இன்றி நான் இல்லை, அவரில்லாமல் வாழ முடியுமான்னு தெரியலையே என்று புலம்பித் தவித்த நயனதாராஇப்போது சிம்பு இல்லாமல் படு தெம்பாக தனது பிறந்த நாளை தெலுங்குப் பட ஷூட்டிங்கில் கொண்டாடிக்கழித்துள்ளார்.

வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும், நயனதாராவுக்கும் இடையே நெருங்கிய நட்பு உருவானது.காதலாக மாறிய அந்த நட்பு கல்யாணத்தில் முடியப் போவதாக கோலிவுட்டில் படு வேகமாக செய்திகள் பரவின.

இதுகுறித்து இருவரிடம் பலமுறை நிருபர்கள் கேட்டதற்கு, நல்ல நட்பு உள்ளது, நெருங்கிய நட்பு உள்ளது.ஆனால் அது கல்யாணமாக மாறுமா என்பது தெரியவில்லை என்று நழுவி ஓடினர் சிம்புவும், நயனதாராவும். ஒருகட்டத்தில் சிம்பு இல்லாமல் என்னால் வாழ முடியுமான்னு தெரியலை என்று நயனதாரா ஓப்பனாக பேசஆரம்பித்தார்.

இப்படியாக வளர்ந்து வந்த இவர்களது நட்பும், காதலும், வல்லவன் பட ரிலீஸைத் தொடர்ந்து முறிந்து போய்விட்டது. இனிமேல் நான் வேறு, சிம்பு வேறு. இருவரும் பிரிந்து விட்டோம் என அறிவித்தார் நயனதாரா.(நயனதாராவின் சினிமா சான்சுக்காக இருவரும் போடும் டிராமா என்றும் ஒரு பக்கம் பேச்சிருக்கிறது)

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார் நயனதாரா. தற்போது தெலுங்கில்பிரபாஸுடன் இணைந்து யோகி என்ற படத்தில் நடித்து வரும் நயனதாரா, இதற்காக ஹைதராபாத்தில்முகாமிட்டுள்ளார்.

படத்தின் ஷூட்டிங்கின்போது யூனிட்டாருடன் சேர்ந்து நயனதாரா தனது பிறந்த நாளை சந்தோஷமாககொண்டாடினார். ஹீரோ பிரபாஸ், இயக்குனர் விநாயக் உள்ளிட்ட படக் குழுவினருக்கு நயனதாரா கேக்ஊட்டிவிட அவர்கள் பதிலுக்கு நயன்சுக்கு ஊட்டி விட்டனர்.

விடுவாரா புரொடியூசர் அவரும் நயனதாராவுக்கு கேக் ஊட்டி விட்டார். பதிலுக்கு நயன்சும் பெரிய கேக்காகவெட்டி புரொடியூசர் வாயில் திணித்து அவரை மகிழ்ச்சியூட்டினார்.

சிம்பு இல்லாமல் பிறந்த நாளைக் கொண்டாடினாலும் நயனதாரா முகத்தில் அந்த உணர்வே இல்லைஎன்கிறார்கள் கேக் பீஸை வாங்கிய பாக்கியம் பெற்றவர்கள்.

சிம் இல்லாத ஜிஎஸ்எம் செல்போன் இது

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil