»   »  என்னடா இது.. நயனதாராவுக்கு வந்த சோதனை கள்வனின் காதலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற நடிகை நயனதாரா, தன்னை வரவேற்க யாரும் வராத காரணத்தாலும்,விமான நிலைய அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதாதலும், சுமார் 4 மணி நேரம் தவியாய் தவித்துப்போய் அழுதுவிட்டார்.தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, நயனதாரா நடிக்கும் படம் கள்வனின் காதலி. இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றைதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் படம் பிடிக்கத் திட்டமிட்டனர்.இதற்காக எஸ்.ஜே.சூர்யா, தமிழ்வாணன் உள்ளிட்ட படக் குழுவினர் பாங்காக் புறப்பட்டுச் சென்று விட்டனர். லட்சுமி என்றதெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்ததால், நயனதாரா தாமதமாக பாங்காக் புறப்பட்டார்.சென்னையிலிருந்து இரு தினங்களுக்கு முன் நள்ளிரவு 12.15 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் கிளம்பிய நயனதாராஅதிகாலையில் பாங்காக் போய்ச் சேர்ந்தார்.அவரிடம் விசா, பாஸ்போர்ட் இருந்தாலும் பாங்காக்கில் எங்கு போக வேண்டும், எங்கு தங்க வேண்டும் போன்ற விவரங்களோ,யாரை சந்திக்க வேண்டும் என்ற விவரமோ இல்லை.பாங்காக் விமான நிலையத்தில் இறங்கிய நயனதாராவை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. இதனால் விமான நிலையத்தைசுற்றிச் சுற்றி வந்தார். இதனால் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், நீங்கள் யார், எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றுசாதராண முறையில் கேட்டுள்ளனர்.ஆனால் படப்பிடிப்புக்காக வந்துள்ளேன் என்று மட்டுமே நயனதாராவால் பதில் கூற முடிந்தது. படப்பிடிப்பு எங்கே நடக்கிறது,எங்கு தங்கப் போகிறார் என்பது குறித்த தகவல்களை அவரால் சொல்ல முடியவில்லை.சூட்டிங் குழுவில் உள்ளவர்களில் யாருடைய போன் நம்பரும் கூட நயனதாராவிடம் இல்லை.இதனால் அவரை விமான நிலையத்தை விட்டு வெளியே அனுப்ப தடை விதித்த அதிகாரிகள், உரிய றையில் பதில்சொன்னால்தான் அனுமதிக்க முடியும் என்று கூறி உட்கார வைத்து விட்டனர்.இதனால் குழம்பிப் போன நயனாதார கிட்டத்தட்ட 4 மணி நேரமாகக் காத்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக் குழுவினர் யாரும்வரவில்லை. இதனால் பயந்து போன நயனதாரா, சென்னையில் உள்ள தனது மேஜேனஜர் அஜீத்திற்குப் போன் செய்தார்.கதறி அழுதபடி பேசிய அவர், டாய்லெட் கூட போக முடியாமல் நான்கு மணி நேரமாக தவிக்கிறேன். படப்பிடிப்புக் குழுவினர்யாரும் என்னை வந்து கூட்டிச் செல்வதாகத் தெரியவில்லை.பாங்காக்கில் உள்ள படப்பிடிப்புக் குழுவினரின் தொடர்பு எண்ணும் என்னிடம் இல்லை. உடனடியாக நீங்கள் பேசி எனதுநிலையை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.பதறிப் போன அஜீத் உடனே படத் தயாரிப்பாளருக்குப் போன் செய்ய, இதைத் தொடர்ந்து நயனதாராவை பாங்காக்கைச் சேர்ந்தஒருவர் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் என்ன தகவல்களைக் கூற வேண்டும் என்று விளக்கினார்.அவர் சொன்ன விவரங்களையும், தங்கும் இடத்தையும் நயனதாரா சொன்ன பிறகே அதிகாரிகள், நயனதாராவை வெளியேவிட்டனர்.வெளியே வந்து பார்த்தபோது டாக்ஸி டிரைவர் ஒருவர் நயனதாரா என்று பெயர் எழுதப்பட்ட போர்டுடன் நின்றுகொண்டிருந்தாராம்.அவரும் கூட படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவர் இல்லையாம்.வேறு வழியில்லாததால் அந்தக் காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்ற, நயனதாரா கடும் கோபத்துடன் நான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது. உடனே சென்னை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று கத்தியுள்ளார்.இதனால் கடுப்பாகிப் போன தயாரிப்பாளர், அங்கிருந்து சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர்ஏ.எல்.அழகப்பனுக்குப் போன் செய்துள்ளார்.அவர், நயனதாராவின் மேலாளர் மற்றும் தயாரிப்பாளருடன் பேசி இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளார்.அதன் பின்னரே சூர்யாவும், நயனதாராவும் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். அதிர்ச்சியும், கோபமும் மாறாதமுகத்துடன் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினாராம் நயனாதாரா.

என்னடா இது.. நயனதாராவுக்கு வந்த சோதனை கள்வனின் காதலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற நடிகை நயனதாரா, தன்னை வரவேற்க யாரும் வராத காரணத்தாலும்,விமான நிலைய அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதாதலும், சுமார் 4 மணி நேரம் தவியாய் தவித்துப்போய் அழுதுவிட்டார்.தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, நயனதாரா நடிக்கும் படம் கள்வனின் காதலி. இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றைதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் படம் பிடிக்கத் திட்டமிட்டனர்.இதற்காக எஸ்.ஜே.சூர்யா, தமிழ்வாணன் உள்ளிட்ட படக் குழுவினர் பாங்காக் புறப்பட்டுச் சென்று விட்டனர். லட்சுமி என்றதெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்ததால், நயனதாரா தாமதமாக பாங்காக் புறப்பட்டார்.சென்னையிலிருந்து இரு தினங்களுக்கு முன் நள்ளிரவு 12.15 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் கிளம்பிய நயனதாராஅதிகாலையில் பாங்காக் போய்ச் சேர்ந்தார்.அவரிடம் விசா, பாஸ்போர்ட் இருந்தாலும் பாங்காக்கில் எங்கு போக வேண்டும், எங்கு தங்க வேண்டும் போன்ற விவரங்களோ,யாரை சந்திக்க வேண்டும் என்ற விவரமோ இல்லை.பாங்காக் விமான நிலையத்தில் இறங்கிய நயனதாராவை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. இதனால் விமான நிலையத்தைசுற்றிச் சுற்றி வந்தார். இதனால் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், நீங்கள் யார், எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றுசாதராண முறையில் கேட்டுள்ளனர்.ஆனால் படப்பிடிப்புக்காக வந்துள்ளேன் என்று மட்டுமே நயனதாராவால் பதில் கூற முடிந்தது. படப்பிடிப்பு எங்கே நடக்கிறது,எங்கு தங்கப் போகிறார் என்பது குறித்த தகவல்களை அவரால் சொல்ல முடியவில்லை.சூட்டிங் குழுவில் உள்ளவர்களில் யாருடைய போன் நம்பரும் கூட நயனதாராவிடம் இல்லை.இதனால் அவரை விமான நிலையத்தை விட்டு வெளியே அனுப்ப தடை விதித்த அதிகாரிகள், உரிய றையில் பதில்சொன்னால்தான் அனுமதிக்க முடியும் என்று கூறி உட்கார வைத்து விட்டனர்.இதனால் குழம்பிப் போன நயனாதார கிட்டத்தட்ட 4 மணி நேரமாகக் காத்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக் குழுவினர் யாரும்வரவில்லை. இதனால் பயந்து போன நயனதாரா, சென்னையில் உள்ள தனது மேஜேனஜர் அஜீத்திற்குப் போன் செய்தார்.கதறி அழுதபடி பேசிய அவர், டாய்லெட் கூட போக முடியாமல் நான்கு மணி நேரமாக தவிக்கிறேன். படப்பிடிப்புக் குழுவினர்யாரும் என்னை வந்து கூட்டிச் செல்வதாகத் தெரியவில்லை.பாங்காக்கில் உள்ள படப்பிடிப்புக் குழுவினரின் தொடர்பு எண்ணும் என்னிடம் இல்லை. உடனடியாக நீங்கள் பேசி எனதுநிலையை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.பதறிப் போன அஜீத் உடனே படத் தயாரிப்பாளருக்குப் போன் செய்ய, இதைத் தொடர்ந்து நயனதாராவை பாங்காக்கைச் சேர்ந்தஒருவர் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் என்ன தகவல்களைக் கூற வேண்டும் என்று விளக்கினார்.அவர் சொன்ன விவரங்களையும், தங்கும் இடத்தையும் நயனதாரா சொன்ன பிறகே அதிகாரிகள், நயனதாராவை வெளியேவிட்டனர்.வெளியே வந்து பார்த்தபோது டாக்ஸி டிரைவர் ஒருவர் நயனதாரா என்று பெயர் எழுதப்பட்ட போர்டுடன் நின்றுகொண்டிருந்தாராம்.அவரும் கூட படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவர் இல்லையாம்.வேறு வழியில்லாததால் அந்தக் காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்ற, நயனதாரா கடும் கோபத்துடன் நான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது. உடனே சென்னை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று கத்தியுள்ளார்.இதனால் கடுப்பாகிப் போன தயாரிப்பாளர், அங்கிருந்து சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர்ஏ.எல்.அழகப்பனுக்குப் போன் செய்துள்ளார்.அவர், நயனதாராவின் மேலாளர் மற்றும் தயாரிப்பாளருடன் பேசி இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளார்.அதன் பின்னரே சூர்யாவும், நயனதாராவும் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். அதிர்ச்சியும், கோபமும் மாறாதமுகத்துடன் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினாராம் நயனாதாரா.

Subscribe to Oneindia Tamil

கள்வனின் காதலி படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற நடிகை நயனதாரா, தன்னை வரவேற்க யாரும் வராத காரணத்தாலும்,விமான நிலைய அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதாதலும், சுமார் 4 மணி நேரம் தவியாய் தவித்துப்போய் அழுதுவிட்டார்.

தமிழ்வாணன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யா, நயனதாரா நடிக்கும் படம் கள்வனின் காதலி. இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றைதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் படம் பிடிக்கத் திட்டமிட்டனர்.

இதற்காக எஸ்.ஜே.சூர்யா, தமிழ்வாணன் உள்ளிட்ட படக் குழுவினர் பாங்காக் புறப்பட்டுச் சென்று விட்டனர். லட்சுமி என்றதெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்ததால், நயனதாரா தாமதமாக பாங்காக் புறப்பட்டார்.

சென்னையிலிருந்து இரு தினங்களுக்கு முன் நள்ளிரவு 12.15 மணிக்குப் புறப்பட்ட விமானத்தில் கிளம்பிய நயனதாராஅதிகாலையில் பாங்காக் போய்ச் சேர்ந்தார்.

அவரிடம் விசா, பாஸ்போர்ட் இருந்தாலும் பாங்காக்கில் எங்கு போக வேண்டும், எங்கு தங்க வேண்டும் போன்ற விவரங்களோ,யாரை சந்திக்க வேண்டும் என்ற விவரமோ இல்லை.


பாங்காக் விமான நிலையத்தில் இறங்கிய நயனதாராவை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. இதனால் விமான நிலையத்தைசுற்றிச் சுற்றி வந்தார். இதனால் சந்தேகமடைந்த விமான நிலைய அதிகாரிகள், நீங்கள் யார், எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றுசாதராண முறையில் கேட்டுள்ளனர்.

ஆனால் படப்பிடிப்புக்காக வந்துள்ளேன் என்று மட்டுமே நயனதாராவால் பதில் கூற முடிந்தது. படப்பிடிப்பு எங்கே நடக்கிறது,எங்கு தங்கப் போகிறார் என்பது குறித்த தகவல்களை அவரால் சொல்ல முடியவில்லை.

சூட்டிங் குழுவில் உள்ளவர்களில் யாருடைய போன் நம்பரும் கூட நயனதாராவிடம் இல்லை.

இதனால் அவரை விமான நிலையத்தை விட்டு வெளியே அனுப்ப தடை விதித்த அதிகாரிகள், உரிய றையில் பதில்சொன்னால்தான் அனுமதிக்க முடியும் என்று கூறி உட்கார வைத்து விட்டனர்.

இதனால் குழம்பிப் போன நயனாதார கிட்டத்தட்ட 4 மணி நேரமாகக் காத்திருந்தார். ஆனால் படப்பிடிப்புக் குழுவினர் யாரும்வரவில்லை. இதனால் பயந்து போன நயனதாரா, சென்னையில் உள்ள தனது மேஜேனஜர் அஜீத்திற்குப் போன் செய்தார்.


கதறி அழுதபடி பேசிய அவர், டாய்லெட் கூட போக முடியாமல் நான்கு மணி நேரமாக தவிக்கிறேன். படப்பிடிப்புக் குழுவினர்யாரும் என்னை வந்து கூட்டிச் செல்வதாகத் தெரியவில்லை.

பாங்காக்கில் உள்ள படப்பிடிப்புக் குழுவினரின் தொடர்பு எண்ணும் என்னிடம் இல்லை. உடனடியாக நீங்கள் பேசி எனதுநிலையை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

பதறிப் போன அஜீத் உடனே படத் தயாரிப்பாளருக்குப் போன் செய்ய, இதைத் தொடர்ந்து நயனதாராவை பாங்காக்கைச் சேர்ந்தஒருவர் தொடர்பு கொண்டு அதிகாரிகளிடம் என்ன தகவல்களைக் கூற வேண்டும் என்று விளக்கினார்.

அவர் சொன்ன விவரங்களையும், தங்கும் இடத்தையும் நயனதாரா சொன்ன பிறகே அதிகாரிகள், நயனதாராவை வெளியேவிட்டனர்.

வெளியே வந்து பார்த்தபோது டாக்ஸி டிரைவர் ஒருவர் நயனதாரா என்று பெயர் எழுதப்பட்ட போர்டுடன் நின்றுகொண்டிருந்தாராம்.


அவரும் கூட படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவர் இல்லையாம்.

வேறு வழியில்லாததால் அந்தக் காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்ற, நயனதாரா கடும் கோபத்துடன் நான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது. உடனே சென்னை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள் என்று கத்தியுள்ளார்.

இதனால் கடுப்பாகிப் போன தயாரிப்பாளர், அங்கிருந்து சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர்ஏ.எல்.அழகப்பனுக்குப் போன் செய்துள்ளார்.

அவர், நயனதாராவின் மேலாளர் மற்றும் தயாரிப்பாளருடன் பேசி இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளார்.

அதன் பின்னரே சூர்யாவும், நயனதாராவும் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். அதிர்ச்சியும், கோபமும் மாறாதமுகத்துடன் பாடல் காட்சியை நடித்துக் கொடுத்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பினாராம் நயனாதாரா.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil