தெறித்து ஓடிய நயன்தாரா.. விடாமல் துரத்திப் போகும் விஜய்சேதுபதி.. என்ன இப்படி லீக் ஆகுதே!

சென்னை: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அத்தனை காட்சிகளும் இப்படியே சமூக வலைதளங்களில் கசிந்து விடும் போல இருக்கே என படக்குழு மிகவும் கவலையில் உறைந்து போயுள்ளனர்.

சமீபத்தில் பேருந்தில் எடுத்த காட்சி லீக்கான நிலையில், தற்போது நயன்தாராவை விஜய்சேதுபதி துரத்தும் ஒரு காட்சியும் லீக்காகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

ஓவர் லீக் ஆகுதே

ஓவர் லீக் ஆகுதே

நானும் ரெளடி தான் படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரியில் எடுத்த போது இப்படி எந்தவொரு பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால், விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா என டாப் நடிகர்கள் நடிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில், ஏகப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

கூட்டத்தோடு கூட்டமாக

கூட்டத்தோடு கூட்டமாக

பெருசா ஒன்றும் செட் போடாமல் அப்படியே கூட்டத்தோடு கூட்டமாகவும் பேருந்து மற்றும் கடை வீதிகளிலும் என விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை நடிக்க வைத்து படமாக்கி வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். எங்கே சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக் கொள்ளும் நிலையில், இப்படி படமாக்கினால் வீடியோக்கள் கசியத் தானே செய்யும் என்றும் கூறுகின்றனர்.

மீண்டும் வளையோசை

மீண்டும் வளையோசை

கமல் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்தில் இடம்பெற்ற வளையோசை பாடலை மீண்டும் ரீ க்ரியேட் செய்யும் விதமாக நயன்தாரா மற்றும் சமந்தாவை விஜய்சேதுபதியுடன் பேருந்தில் பயணம் செய்ய வைத்து படமாக்கிய வீடியோவும் வெளியாகி வைரலானது.

தெறித்து ஓடும் நயன்தாரா

தெறித்து ஓடும் நயன்தாரா

விஜய்சேதுபதியிடம் சிக்கி விடக் கூடாது என சிகப்பு கலர் சேலை அணிந்து கொண்டு மார்க்கெட்டில் ஒளிந்தபடியே தெறித்து ஓடும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

துரத்தும் விஜய்சேதுபதி

துரத்தும் விஜய்சேதுபதி

வெள்ளை சட்டை மற்றும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு நடிகர் விஜய்சேதுபதி நடிகை நயன்தாராவை துரத்திக் கொண்டு அந்த வீடியோவில் ஓடுகிறார். செருப்பு கடை, ஹோட்டல் என பிசியாக இருக்கும் கடை வீதியிலேயே இந்த ஷூட்டை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து வரும் விஜய்சேதுபதியை அந்த இரண்டு பெண்களும் கழட்டி விட்டால் என்ன ஆகும் எனும் லவ் பிரேக்கப் கதையுடன் உருவாகி வரும் இந்த படம் நானும் ரெளடி தான் படத்தை போலவே செம காமெடியாக உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கையில் குழந்தை

கையில் குழந்தை

ஒரு பக்கம் படத்தின் வீடியோக்கள் கசிந்து வரும் சூழலில் இன்னொரு பக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ரசிகரின் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு கொடுத்திருக்கும் போஸ் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

ஷாருக்கான் படத்துக்கா

ஷாருக்கான் படத்துக்கா

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கவுள்ள புதிய படத்திற்கான அறிமுக புரமோ ஒன்றும் சமீபத்தில் மும்பையில் படமாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்காக புதுச்சேரியில் இருந்து சத்தமே இல்லாமல் மும்பைக்கு சென்று வந்து இருக்கிறாராம் நயன்தாரா. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்துக்கு அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்து ஏமாந்த ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்திக்கு அப்டேட் கிடைக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X