மூணாறில் 'வாயை மூடி பேசவும்'.... ஸ்கூட்டி ஓட்டி விபத்தில் சிக்கிய நஸ்ரியா!
மூணாறில் நடந்த படப்பிடிப்பின்போது ஸ்கூட்டி ஓட்டி வழுக்கி விழுந்து அடிபட்டார் தொப்புள் சர்ச்சை நாயகி நஸ்ரியா.
நய்யாண்டி தொப்புள் சமாச்சாரத்துக்குப் பிறகு வாயை மூடிக் கொண்டு நஸ்ரியா நடிப்பை மட்டும் கவனித்து வருகிறார்.

வாயை மூடி பேசவும்
அதற்குப் பொருத்தமாக இப்போது அவர் நடித்து வரும் தமிழ்ப் படத்துக்கு 'வாயை மூடி பேசவும்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
காதலில் சொதப்புவது எப்படி படம் எடுத்த பாலாஜி மோகனின் அடுத்த படம் இது.

மம்முட்டி மகன்
மம்முட்டியின் மகன் துல்க்வார் சல்மான் ஹீரோவாக தமிழில் அறிமுகமாகும் படம் வாயை மூடி பேசவும். எத்தனையோ ஹீரோக்கள் நஸ்ரியா கால்ஷீட்டுக்காக காத்திருந்த நேரத்தில், அதாவது நய்யாண்டிக்கு முன், நஸ்ரியா விரும்பி கால்ஷீட் தந்த படம் இது.

மூணாறில்...
படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் மூணாறில் நடந்து வருகிறது. வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா தயாரிக்கும் முதல் படம் இது.

ஸ்கூட்டியில்...
நேற்றைய படப்பிடிப்பின்போது, காட்சிப்படி மழையில் ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு வரவேண்டும் நஸ்ரியா. அவர் அப்படி ஓட்டிக் கொண்டு வந்தபோது, மழையில் வழுக்கி ஸ்கூட்டியுடன் விழுந்தார் நஸ்ரியா.

காயம்
இதில் அவருக்கு உடலின் பல இடங்களில் சின்னச் சின்ன சிராய்ப்புகளும், முழங்காலில் ரத்தம் வழிய காயமும் ஏற்பட்டது. வலியில் கண்கலங்கிவிட்டாராம் நஸ்ரியா.

சிகிச்சை
உடனே அவரை அருகிலிருந்த மருத்துமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். கீழே விழுந்து அடிபட்டதுடன் மழையிலும் நனைந்ததால் நஸ்ரியாவுக்கு லேசாக காய்ச்சலும் ஏற்பட்டுவிட்டதாம்.

ஐயாம் ஆல்ரைட்
ஆனாலும் சில மணி நேர ஓய்வுக்குப் பிறகு, 'ஐயாம் ஆல்ரைட்... ஷூட் போகலாம்' என்று இயக்குநர் பாலாஜி மோகனிடம் தெரிவித்துவிட்டு, மீண்டும் அதே ஸ்கூட்டி சீனை தொடர்ந்து எடுக்கச் சொல்லி, வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தாராம்.


Click it and Unblock the Notifications











