நீபா டீச்சர்!
பெருசு நீபா, தங்கர் பச்சான் படத்தில் திறமை காட்டப் போகிறார்.
பெருசு படத்தின் மூலம் நாயகியாக வந்தவர் நீபா. கெட்ட அழகுடன், செட்டப்பானகெட்டப்புடன் இருக்கும் நீபாவுக்கு பெருசு கொடுத்த பிரேக் அதன் பிறகுபடபடவென வளராமல் போய் நின்று விட்டது.ஆனாலும் தளராத நீபா நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கலைக்காகவே தன்னைஅர்ப்பணித்து விட்டதாக கூறும் நீபா, முழு நேர கலைச் சேவைக்காக திருமணத்தைக்கூட ஒத்திப் போட்டு விட்டார் என்றால் பாருங்களேன்.
இடையில் ஜி. பாலன் இயக்கத்தில் ராசாத்தி என்ற டெலிபிலிமில் திறமை காட்டினார்நீபா. அதில் அருமையாக நடித்திருந்தும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லையாம்.
இப்போது நீபாவுக்கு அட்டகாசமான வேடம் ஒன்று ஓடோடி வந்துள்ளது.தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம் தான் அந்தப் படம். இதில், கற்றுக் கொடுக்கும்ஆசிரியை வேடத்தில் நடிக்கிறாராம் நீபா. அதுவும் சாதாரண ஆசிரியை இல்லை,கல்லூரிப் பேராசிரியையாக வருகிறாராம் நீபா.
அவருக்கு ஜோடி போடுபவர் யார் தெரியுமா.? தம்பி சீமான்தான். இப்படத்தில்இயக்குநராகவே வேடம் கட்டுகிறார் சீமான். ஹீரோயின் ஸ்னேகாவும் இப்படத்தில்வாத்தியாரம்மாவாகத்தான் நடிக்கிறார். இன்னொரு டீச்சராக நீபா வருகிறாராம்.
இப்போது பந்தம் என்ற டிவி சீரியலிலும் கண்ணும் கண்ணும் என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நீபா,தங்கர் படம் தனக்கு தக்க வழியைக் காட்டும் என வலிமையாக நம்புகிறார். தொடர்ந்துஇதுபோல விதம் விதமான வேடங்களில் புகுந்து கலக்கி புயலென கோலிவுட்டைஅரட்டப் போகிறாராம் நீபா
நல்லாருபா!


Click it and Unblock the Notifications











