»   »  பள பள நிலா!

பள பள நிலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழனி மலைப்பக்கம் டேரா போட்டு, நிலாவை வைத்து பச்சைப் பசேல் எனபோட்டோக்களை எடுத்து வந்துள்ளது கில்லாடி பட யூனிட்.

நடிக்கும் படங்களில் எல்லாம் பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டிருந்தாலும் நிலாவுக்குபுதுப் பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் உள்ளன.

சத்யராஜ் தயாரிப்பில் மகன் சிபி நடிக்க உருவாகும் லீ படத்திலும் நிலாதான் நாயகி.இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நிலா ஏகப்பட்ட லொள்ளு செய்தாராம். இதனால்அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து விட்டு அனுப்பி விட்டது லீ யூனிட்.

இதைத் தொடர்ந்து பரத்துடன் ஜோடி போட்டு கில்லாடி என்ற படத்தில் நடிக்க புக்ஆகியுள்ளார் நிலா. இந்தப் படத்தின் புகைப்பட செஷனை ஒரு ரவுண்டுசென்னையிலும் மிச்சத்தை பழனி மற்றும் சுற்று வட்டாரத்தில் வைத்து ஷூட்செய்தனர்.

போட்டோ செஷனுக்கு வந்த நிலா அனைவரும் ஆச்சரியப்படும்படியாக செமஒத்துழைப்பு கொடுத்து போஸ் தந்தாராம். யூனிட்டாருடன் படு சுமூகமாக பழகியஅவரைப் பார்த்து இந்த நிலாவும் லொள்ளு செய்யுமா என்று அத்தனை பேரும்ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.

ஜாலியாக பேசியதோடு இல்லாமல் பரத்துடன் அவர் படு ஜோவியலாக போஸ்கொடுத்து அசத்தி விட்டாராம். கிளாமராக சில போஸ்களும், கிராமியமாக சிலபோஸ்களுமாக கில்லாடி புகைப்பட செஷன் படு ஜோராக போனதாம்.

நிலா கொடுத்துள்ள போஸ்களைப் பார்த்தால் படத்தில் அவருக்கு கிளாமர் சைடுகொஞ்சம் ஸ்டிராங்காகத்தான் இருக்கும் போலத் தெரிகிறது. அன்பே ஆருயிரேபடத்திற்குப் பிறகு இப்படத்தில் கிளாமர் சைடில் கொஞ்சம் நிலா இறங்கி வந்துநடிப்பார் போலத் தெரிகிறது.

நிலாவின் முழுப்பரிமாணத்தையும் முப்பரிமாண கோணத்தில் வெட்டவெளிச்சமாக்கிபட்டவர்த்தனமாக படம் பிடித்துள்ளனர். நிலாவையும், பரத்தையும் நெருக்கமாகவைத்து பல போட்டோக்களை சுட்டுள்ளனராம். இதில் சில படங்களைத்தான் சாம்பிள்போல வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளனர்.

அடுத்தடுத்து அணல் கக்கும் படங்களை வெளியிடத் திட்டமாம். இந்தப் படத்தில்எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிலா நடித்துக் கொடுத்தாலே பாதிப் படம் ஜெயிச்சமாதிரிதான் என்கிறார்கள் முன்பு நிலாவால் சூடுபட்ட அனுபவஸ்தர்கள்.

நிலா சுடுதோ இல்லையோ, கில்லாடி படத்திற்காக நிலா கொடுத்துள்ள போஸ்கள்சூட்டைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.

Read more about: nilas glamour in killadi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil