»   »  திடீரென மாறிய நிலா!

திடீரென மாறிய நிலா!

Subscribe to Oneindia Tamil

சிறு சிறு குறைபாடுகளைக் களைந்து நல்ல பிள்ளையாக மாறியுள்ளாராம் நிலா. முன்பு போல இப்போதுலொள்ளு பண்ணுவதில்லையாம் இந்த சண்டிகர் ராணி.

அன்பே ஆருயிரே என எஸ்.ஜே.சூர்யாவால் அழைத்து வரப்பட்ட நிலா, வந்தது முதலே கோலிவுட்காரர்களுக்குபெரும் எரிச்சலாக மாறிப் போனார். அவரை வைத்துப் படம் எடுத்த அத்தனை பேரும் படாத பாடுபட்டுவிட்டார்கள்.

ஒவ்வொருவரையும் கூப்பிட்டு நிலா பத்தி சிறு குறிப்பு வரைக என்றால் பெரும் புராணமே பாடுவார்கள். அப்படிஒரு அவஸ்தை நாயகியாக இருந்த நிலா இப்போது பெரிதும் மாறியுள்ளாராம். மாற்றிய புண்ணியம் கில்லாடி படயூனிட்டுக்குத்தான் என்கிறார்கள்.

பரத்துடன் ஜோடி போட்டு நிலா நடிக்கும் படம்தான் கில்லாடி. நிலாவைப் பற்றி ரொம்பவே தெரியும் என்பதால்படத்தின் ஸ்டில் ஷாட்டுகளுக்காக பழனிக்குப் போனபோது நிலாவை உட்கார வைத்து படத்தின் தயாரிப்பாளரும்,இயக்குநரும் ரொம்ப நேரம் மனம் விட்டுப் பேசியுள்ளனர்.

நிலாவிடம் உள்ள குறைகள், குழப்பங்கள் எல்லாவற்றையும் சுட்டிக் காட்டிப் பேசிய அவர்கள் கடைசியாக ஒருபலே பன்ச் வைத்துள்ளனர். சிம்ரனின் சாயல் உங்களுக்கு இயற்கையாகவே உள்ளது. அவரைப் போல படுஅழகாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மட்டும் குழப்பம் செய்யாமல் நடித்தால் சிம்ரனை விட பெரிய ரேஞ்சுக்குப்போவீர்கள் என்று அவர்கள் அடுக்க அடுக்க நிலாவுக்கு உற்சாகமாகி விட்டதாம்.

அவர்கள் பேசி முடித்ததும் நிலாவுக்கு தெளிவு பிறந்ததாம். எனது குறைகளை சுட்டிக் காட்டியதற்கு ரொம்பநன்றி, இனிமேல் நான் சரியாக இருப்பேன். இந்தப் படம் முதல் புதிய நிலாவைக் காணலாம் என சத்தியம்செய்யாத குறையாக கூறினாராம்.

இதைக் கேட்டு தயாரிப்பு ரொம்பவே தரப்பு நிம்மதியடைந்ததாம்.

ஆனால் இயக்குநர் அப்படியே நின்று விடாமல், நிலாவை இந்தப் படத்தில் இதுவரை காட்டாத அளவுக்குசிறப்பாக காட்டப் போகிறாராம். இதை நிலாவிடமே சொல்லி விட்டாராம். இதனால் எக்ஸ்ட்ரா ஜாலியாகிவிட்டார் நிலா.

ஒரு பிரச்சினை கூட பண்ணாமல் நடித்துக் கொடுக்கிறேன் பாருங்கள் என்று இயக்குநரிடம் சத்தியம்செய்துள்ளாராம். சொன்னது போல போட்டோ செஷனில் இயக்குநர் சொன்னபடியெல்லாம் நடந்துகொண்டாராம். கிளாமராகவும் சூப்பர் போஸ்கள் கொடுத்து அசத்தினார்.

கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டாராம், காட்டிய ஹோட்டலில் தங்கிக் கொண்டாராம்.

நிலாவின் திடீர் மாற்றத்துக்கு முக்கிய காரணம் தெலுங்கு தான் என்கிறார்கள். அதிக சம்பளம் என்பதற்காக தமிழ்படங்களை பாதியில் விட்டுவிட்டு ஓடிய நிலாவுக்கு ஒரு படமும் கை கொடுக்கவில்லை.

இதையடுத்து தமிழுக்கு திரும்புவதோடு, குழப்பம் செய்யாமல் நடித்து துட்டு சம்பாதிப்பதில் ஆர்வமாகஉள்ளாராம். தமிழில் தீவிரமாக வாய்ப்பு வேட்டையிலும் இறங்கியுள்ளார்.

Read more about: nila in killadi with bharath

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil