»   »  மங்கும் நிலா அஜலகுஜலா அ..ஆ நிலா இப்போது ஆள் அட்ரஸே இல்லாமல் போய் விட்டார்.ஹைதராபாத்தே அவரது நிரந்தர வசிப்பிடமாக மாறியுள்ளது (அவ்வப்போதுசென்னைக்கு வந்து போகிறார்). எல்லாம் ஜாம்பவானால் வந்த வினை!

மங்கும் நிலா அஜலகுஜலா அ..ஆ நிலா இப்போது ஆள் அட்ரஸே இல்லாமல் போய் விட்டார்.ஹைதராபாத்தே அவரது நிரந்தர வசிப்பிடமாக மாறியுள்ளது (அவ்வப்போதுசென்னைக்கு வந்து போகிறார்). எல்லாம் ஜாம்பவானால் வந்த வினை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜலகுஜலா அ..ஆ நிலா இப்போது ஆள் அட்ரஸே இல்லாமல் போய் விட்டார்.ஹைதராபாத்தே அவரது நிரந்தர வசிப்பிடமாக மாறியுள்ளது (அவ்வப்போதுசென்னைக்கு வந்து போகிறார்). எல்லாம் ஜாம்பவானால் வந்த வினை!

அன்பே ஆருயிரேவில் நிலா அறிமுகமாகியபோது, அடுத்த சிம்ரன் என எல்லோரும்வரிந்து கட்டி எழுதினர். ஆனால் படத்தில் நிலாவைப் பார்த்தபோது, சிம் எங்கே, நிலாஎங்கே என்று கடுப்பாகி விட்டனர்.

சிம்ரனின் இடுப்புக்குக்கூட சமானமில்லாத நிலாவை, எஸ்.ஜே. சூர்யாதான் தூக்கிப்பிடித்து அவரை சிம்ரனுடன் ஒப்பிட்டுப் பேசி வந்தார்.

ஆனால் நிலாவின் இன்றைய நிலை கோலிவுட்டில் படு மோசமாகி உள்ளது.


ஜாம்பவான் படப்பிடிப்பில் தகராறு, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போனது எனஏகப்பட்ட குழப்பங்களில் சிக்கிய நிலாவுக்கு புதிதாக தமிழில் நடிக்க தடை போட்டுவிட்டனர். இதனால் ஹைதராபாத்தில் தங்கியிருந்து தெலுங்குப் படத்தில் நடித்துவருகிறார் நிலா.

ஆனால், அதிலும் அவ்வப்போது முரண்டு பிடிப்பதால் கோலிவுட்டில் அவரை புதிதாகயாரும் புக் செய்ய முன் வரவில்லை.

தமிழ் போனா என்ன, தெலுங்கு இருக்கே என்று தைரியமாக இருந்தவருக்குஅங்கேயும் நேரம் சரியில்லை.


இப்போது அவரது கையில் ஒரே ஒரு தெலுங்குப் படம் மட்டுமே இருக்கிறதாம். புக்ஆன இன்னொரு படத்தில் இருந்து நிலாவைத் தூக்கிவிட்டார்கள்.

இதனால் நிலா பெரும் அப்செட்.

இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வழக்கம் போல அல்டாப்பாகத்தான் வலம்வந்து கொண்டுள்ளார் அம்மணி.

படங்கள் ஏதும் இல்லாத நிலையிலும், ஜம்பத்தை சற்றும் குறைத்துக் கொள்ளாத நிலா,40 குடுங்கோ, 50 குடுங்கோ என்று தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம்லட்சங்களை சாதாரணமாகக் கேட்டு அவர்களை ஓட ஓட விரட்டுகிறாராம்.


இவருக்கு இத்தனை சம்பளத்தையும் கொடுத்து, நொம்பலத்தை கூட சேர்த்துக் கொள்ளநாங்கள் என்ன இனா வாயர்களா என்று கேட்கிறார்களாம் தெலுங்குத்தயாரிப்பாளர்கள். இதனால் புதிய படம் ஏதும் இல்லாமல் ஒரே படத்திலேயே நடித்துக்கொண்டிருக்கிறார் நிலா.

ஷூட்டிங் போரடித்தால் அப்படியே பிளைட்டைப் பிடித்து சென்னைக்கு வந்து விடும்நிலா. இங்கு சூர்யாவிவுடன் லைட்டாக இளைப்பாறி விட்டு மறுபடியும் ஹைதராபாத்போய் விடுகிறார்.

நிலா மெல்ல மெல்ல மங்கி வருவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil