சூட்டிங் ஸ்பாட்
மணிரத்னம் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். சாப்ட்வேர் ஆசாமிகள் கதை என்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஏற்கனவே தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த ஸ்ரீகாந்துடன் இன்னொரு இளம் தெலுங்கு ஹீரோநடிக்கிறார். நிதின் என்ற அந்த இளைஞரை ஆந்திர திரையுலகில் இருந்து தமிழுக்கு இழுத்து வருகிறார் மணிரத்னம்.
தெலுங்கில் ஜெயம் என்ற படத்தில் அறிமுகமாகி அங்கு பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிதினுக்குமணிரத்னத்திடம் இருந்த வந்த அழைப்பு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்துவிட்டதாம். ரொம்பசந்தோஷமா இருக்கு என்கிறார்.
இவரை மணி இழுத்து வந்ததற்கு முக்கிய காரணமும் உண்டு. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழிலும்தெலுங்கிலும் உருவாவது தான் காரணம். இதனால் தான் தெலுங்கில் மார்க்கெட் உள்ள நிதினைப் உள்ளேஇழுத்துவிட்டு தனது பேவரிட் பாய் மாதவனை விட்டுவிட்டார் மணி என்கிறார்கள.
ஹீரோயின்களும் புது முகங்களாகவே இருப்பார்கள் என்று தெரிகிறது. இதற்கான செலக்ஷன் நடந்து வருகிறது.
முன்னதாக தமிழில் உள்ள முன்னணி ஆட்களை வைத்துத் தான் படமெடுக்கத் திட்டமிட்டிருந்தாராம் மணிரத்னம்.ஆனால், அவர்களது சம்பளத்தைக் கேட்ட அவருக்கு தலைசுற்றல் வந்ததையடுத்து நிதினைப் பிடித்து இழுத்துவந்துவிட்டாராம்.
இளைஞர், இளைஞிகளைக் குறி வைத்து இளமைத் துள்ளலுடன் வரப் போகிறதாம் இந்தப் படம், ரஹ்மான்இசையமைக்கலாம் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











