நிவின்பாலி-அஞ்சலியின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் துவங்கியது... இயக்குநர் ராம்

சென்னை: அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

தனது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR..

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ்கோடியில்

தனுஷ்கோடியில்

இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்ஷனில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.பல ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் செலஃபீ எடுத்து வருகின்றனர்.இன்னொரு பக்கம் இந்த அற்புதமான லொகேஷன்ஸை தனித்துவமாக காட்ட இந்த குழு பிரத்யேகமாக மெனக்கெடுகிறது .

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார். கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி. அஞ்சலியின் கண்கள் இயக்குனர் ராம் இயக்கத்தில் எப்பொழுதுமே தனித்துவமாக தெரியும் . உணர்வுபூர்வமான காட்சிகள் ரசனை மிகுந்த வசனங்கள் என்று அஞ்சலிக்கு ராம் படம் என்றால் அது எப்பொழுதும் ஸ்பெஷல் தான்.

தேசிய விருதை

தேசிய விருதை

மேலும் இந்தப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலை வடிவமைப்பை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார். மக்கள் தொடர்பு : A. ஜான் என ஒட்டுமொத்தமாக தரமான படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படைப்பும் தேசிய விருதை வரவழைத்து தரும் என எதிர்பார்க்கபடுகிறது .

பேசியது மட்டுமல்லாமல்

பேசியது மட்டுமல்லாமல்

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். இயக்குனராக இயக்கிய படங்கள், நடிகராக நடித்த படங்கள் மற்ற இயக்குனர்களுக்கு உதவி செய்த படங்கள் என்று பல வகையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி மிகவும் எதார்த்தமாக பழகி நேர்மையான சமூக அக்கறையுடன் பல மேடைகளில் பேசியது மட்டுமல்லாமல் அதுபோலவே காட்சிகளையும் வடிவமைத்து தனக்குண்டான டார்கெட் ஆடியன்சை பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X