பா ரஞ்சித்தின் "நட்சத்திரம் நகர்கிறது" படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!!

சென்னை : அட்டகத்தி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இப்பொழுது பா ரஞ்சித் இயக்கிவரும் காதல் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.

காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இப்படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பாகவே இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த சூழலில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

 சமூக நீதிக்கான குரல்

சமூக நீதிக்கான குரல்

இயக்குனர் பா ரஞ்சித்தின் திரைப்படங்கள் என்றாலே அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்கான குரல் அதிகமாக ஒலிக்கும். குறிப்பாக இவரின் திரைப்படங்கள் வடசென்னையை பற்றிய கதைக்களத்தில் உருவாகும் . அட்டகத்தி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா ரஞ்சித் அதன்பிறகு இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. மெட்ராஸ் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கபாலி மற்றும் காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

 சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

1970களின் வடசென்னையின் ஆஸ்தான விளையாட்டுகளில் ஒன்றாக இருந்த குத்துச் சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இயக்கியிருந்த சார்பட்டா பரம்பரை பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு கடந்த மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. பசுபதி, ஆர்யா, துஷாரா விஜயன், ஜான் விஜய், கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கின், சபீர் ,அனுபமா, பிரியதர்ஷினி என பலர் இப்படத்தில் நடித்து இருக்க படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத வடசென்னையின் குத்துச்சண்டை விளையாட்டை அப்படியே கண்முன் வந்து காட்டி இருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

 நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

இந்த நிலையில் அடுத்ததாக பா ரஞ்சித் " நட்சத்திரம் நகர்கிறது " என்ற காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுவரை தன்னுடைய படங்களில் சமூக அரசியலை பேசிவந்த பா ரஞ்சித் அட்டகத்தி படத்திற்கு பிறகு காதல் படம் ஒன்றை இயக்குகிறார். சார்பட்டா பரம்பரை ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது.

 அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கியது

அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்கியது

கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்க முதலில் திட்டமிட்டிருந்த பா ரஞ்சித் அதன்பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயனை லீட் ரோலில் தேர்வு செய்துள்ளார். வழக்கமான படக்குழு உடன் பணியாற்றாமல் முற்றிலும் புதிய டீமுடன் பணியாற்ற ஆயத்தமாகி வந்த பா ரஞ்சித் படத்தில் சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக "காஸ்ட்லஸ் கலெக்டிவ்' குழுவின் இசையமைப்பாளரான டென்மாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார் . ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குநர் ராமலிங்கம் ஆகியோர் இந்தப்படத்தில் இல்லை. மாறாக கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.இவ்வாறு பா ரஞ்சித் புதிய படக்குழுவுடன் இயக்கி வரும் நட்சத்திரம் நகர்கிறது அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்பொழுது தொடங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X