»   »  காதல் பெரிதா? காமம் பெரிதா?

காதல் பெரிதா? காமம் பெரிதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சத்தம் போடாதே படத்தில் இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை வைத்து ஒரு சூப்பர் பாடலை எழுதியுள்ளார் நா. முத்துக்குமார்.

வசந்த் இயக்கும் படம்தான் சத்தம் போடாதே. பத்மப்ரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் அசத்தியுள்ளார். நடுத்தரக் குடும்பத்துப்பெண்மணியாக இதில் நடித்துள்ளார் பத்மப்ரியா.

அச்சு அசல் நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவியாக இதில் வாழ்ந்துள்ளாராம் பத்மப்ரியா. கூட்டுக் குடும்பம், மாதக் கடைசியில் வரும் பணப்பஞ்சம், குழந்தைகளின் செலவுகள், வீட்டுச் செலவுகள், இத்தனைக்கும் இடையே புருஷனையும் கவனிக்க வேண்டிய மனைவியின் கடமை எனஎல்லாக் குழப்பங்களையும் தலைமேல் போட்டு சமாளிக்கும் வெயிட்டான ரோல் பத்மப்ரியாவுக்கு.

மிக அழகாக இந்தக் கேரக்டரை செய்துள்ளாராம் பத்மப்ரியா. இந்தப் படத்தில் இரு பாடல்களை வைத்துள்ளார் வசந்த். இரு பாடல்களுமே படுவித்தியாசாக எழுதப்பட்டு, அதை விட வித்தியாசமாக படம் பிடிக்கப்பட்டுள்ளதாம்.

அதில் நா.முத்துக்குமார் எழுதியுள்ள பாடல் காதலையும், காமத்தையும் விளக்கும் பாடல். தாமரை எழுதியுள்ள இன்னொரு பாடலோ, தாலாட்டுப்பாடல். இதிலும் வரிகளில் வித்தியாசம் சிறகு கட்டிப் பறக்கிறதாம்.

முத்துக்குமாரின் பாடலை முதலில் பார்ப்போம். இதில் ஒரு வரி வருகிறது. அது என்ன தெரியுமா?

காதல் பெரியதா?
காமம் பெரியதா?

தேக சாலையில் நடந்து போகையில் காமம் பெரியது ..
தேகம் என்பதைக் கடந்து போகையில் காதல் பெரியது ..

உடல் காமம் இறந்து போகும் ..
உயிர் காதல் என்றும் வாழும் ...

இதுதான் பாடல். என்ன வரிகள் வசீகரிக்கிறதா? யுவன் சங்கர் இசையில், பாடல்கள் உயிர்ப்புடன் உருவாகியுள்ளதாம். அதை விட இந்தப் பாடலைவசந்த்தும் படு லயிப்போடு படமாக்கினாராம். ரசிகர்களை இந்தப் பாடல் வியர்க்க வைக்குமாம்.

அதேபோல தாமரை எழுதியுள்ள தாலாட்டுப் பாடலில் வரும் ஒரு வரி ரசிக்க வைக்கிறது.

ரசிக்கிறேன் ரசிக்கிறேன் ..
என்னை நீ உருட்டுவதை ..
அரையடியில் அம்மணமாய் என்ன நீ மிரட்டுவதை .. என்று போகிறது தாமரையின் தங்க வரிகள்.

இப்படிப் படம் முழுக்க ஏகப்பட்ட விசேஷங்களாம். பத்மப்ரியாவின் மறுபக்கத்தை (நடிப்பில்) இந்தப் படத்தில் பார்க்கலாம் என்று சத்தியம்செய்கிறார் வசந்த்.

பத்மப்ரியா தவிர பிரகாஷ் ராஜ், சுஹாசினி, நாசர் ஆகிய பெருந்தலைகளும் இருக்கிறார்கள்.

சத்தம் போடாம, சீக்கிரமா வந்திருங்க...!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil