»   »  அலறிய ஃபாருல்!

அலறிய ஃபாருல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ட்ரீம்ஸ் படத்தில் அறிமுகமான மும்பை புயல் ஃபாருல், பெரிய இடைவெளிக்குப் பிறகு அடுத்துபிரசாந்த்துடன் புலன் விசாரணை படத்திலும் திறமை காட்டுகிறார்.

கேரள வரவுகளின் காலம் இது. ஆனாலும் அவ்வப்போது மும்பையிலிருந்தும் சிலர் வந்து கலக்குவதுண்டு.அந்த வரிசையில் வந்தவர்தான் ஃபாருல்.

ட்ரீம்ஸ் படத்தில் அறிமுகமான ஃபாருல், அதில்நடித்த தியாவின் கவர்ச்சி அலையில் அடித்துக் கொண்டுபோகப்பட்டார். அதற்குப் பிறகு பாருலை பார்க்க முடியவில்லை.

என்ன ஆனார் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கோலிவுட்டுக்கு விசிட்அடித்துள்ளார் ஃபாருல்.

பிரசாந்த்தின் புலன் விசாரணை 2ம் பாகத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் ஃபாருல். ஆர்.கே.செல்வமணிதான் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, ஃபாருலை, மிரள வைக்க தீர்மானித்தார் பிரசாந்த். சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்படும் பொம்மை துப்பாக்கியை எடுத்து ஃபாருலின் நெற்றிப் பொட்டில் வைத்தார்.

அது பொம்மை துப்பாக்கி எனத் தெரியாத ஃபாரு, பயந்து அலறிவிட்டாராம். அது பிரசாந்த்துக்கு அழகாகதோன்றியது போலும், இன்னும் கொஞ்சம் நூல் விட்டுப் பார்க்க தீர்மானித்த பிரசாந்த், இப்ப சுடப் போறேன்என்று பீதியைக் கூட்டினார், ஃபாருலோ, குரல் வால்யூமை உயர்த்தி, உண்மையிலேயே அழுதுள்ளார்.

பின்னர் பிரசாந்த் பிடியிலிருந்து விடுபட்டு செட்டுக்குள் அங்கும் இங்கும் அழுதபடியே ஓடியிருக்கிறார்.போதும் விளையாட்டு, நிப்பாட்டு என்று பிரசாந்த்தின் மனதுக்குள் வடிவேலு குரலில் அசரீரி ஒலிக்கவே,ஃபாருலை நிறுத்தி இது பொம்மை துப்பாக்கிதான், டோண்ட் ஒர்ரி என்று கூல் படுத்தினாராம்.

அப்புறம்தான் மூச்சே வந்ததாம் ஃபாருலுக்கு.

ஏம்ப்பா, பிரசாந்து.. சின்னப் புள்ளைக்கிட்ட இப்படியா விளையாடுறது?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil