For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிம்புவின் பத்து தல படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்... வெளியானது கலக்கலான அப்டேட்!

  |

  சென்னை : சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வந்த நிலையில் இப்போது மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு டைட்டில் வெந்து தணிந்தது காடு என வைக்கப்பட் டுள்ளது.

  கைநிறைய படங்களுடன் நடித்து வரும் சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு கேங்ஸ்டர் டானாக பத்து தல படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

  கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் என பலர் இப்படத்தில் நடிக்க இதன் படப்பிடிப்பு லாக்டவுனுக்குப் பிறகு மீண்டும் எப்போது துவங்குகிறது என்பது பற்றிய அசத்தலான அப்டேட் தற்பொழுது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  ஒரு பொண்ண தொடனும்னா...மஹா டீசரில் சிம்பு சொன்ன அசத்தல் அட்வைஸ் ஒரு பொண்ண தொடனும்னா...மஹா டீசரில் சிம்பு சொன்ன அசத்தல் அட்வைஸ்

  முழு கவனத்துடன்

  முழு கவனத்துடன்

  நடிப்பு நடனம் இயக்கம் தயாரிப்பு இசை என அனைத்து கலைகளையும் கரைத்து குடித்த நடிகர் சிம்புவுக்கு சினிமாவில் தெரியாத வேலையே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு திரைத்துறையில் எத்தனை துறைகள் இருக்கிறதோ அத்தனை துறைகளையும் குறித்து நன்கு அறிந்துள்ளனர் . அவ்வாறு உள்ள சிம்பு கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிப்பதில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இப்போது அதிலிருந்து மீண்டு படங்களில் முழு கவனத்துடன் நடிக்க ஆரம்பித்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி செம ஜோராக கல்லா கட்டியது. ரசிகர்களுக்கும் இந்த திரைப்படம் திருப்தியை ஏற்படுத்தி இருக்க சந்திரன் சிம்பு கூட்டணி மீண்டும் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அரசியல் கதை களத்தில்

  அரசியல் கதை களத்தில்

  இதற்கிடையில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டு இருந்த மாநாடு படத்தையும் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதுவரை சிம்பு பல்வேறு வேடங்களில் நடித்திருந்தாலும் முதல் முறையாக அரசியல் கதை களத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் கலந்த திரில்லர் படமாக இப்படம் உருவாகி வர இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் மாநாடு திரையரங்களில் வெற்றிவாகை சூட உள்ளது.

  வெந்து தணிந்தது காடு

  வெந்து தணிந்தது காடு

  இதுவரை இயக்குனராக இருந்து வந்த கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து நடிகராகவும் வலம் வந்து கொண்டுள்ளார். இயக்குனர் நடிகர் என வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிக்க வந்ததற்கு பிறகும் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் சிம்பு உடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளார். இப்படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் படத்தின் டைட்டிலில் வெந்து தணிந்தது காடு என மாற்றப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு தாறுமாறாக வெயிட் போட்டதை கலாய்த்த பலரும் இப்பொழுது உடல் எடையை குறைத்து 15 வயது சிறுவன் போல சிம்பு மாறியுள்ள தோற்றத்தை பார்த்து வாயடைத்து போய் உள்ளனர். வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசாரி கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

   கேங்ஸ்டர் டானாக

  கேங்ஸ்டர் டானாக

  பொதுவாக தமிழ் படங்கள்தான் கன்னட மொழியில் அதிக அளவில் ரீமேக் செய்யப்படும். ஆனால் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மஃப்டி என்ற திரைப்படம் இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்க சிம்பு இதில் கேங்க்ஸ்டர் டானாக நடிக்கவுள்ளார். படத்திற்கு பத்து தல என மாஸாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தொட்டி ஜெயா படத்தில் ரவுடியாக நடித்த சிம்பு அதற்குப் பிறகு வேறு எந்த படங்களிலும் கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் நடக்காமல் இருந்தால். இப்பொழுது பத்து தல படத்தில் டானாக நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படம் முழுவதும் கருப்பு சட்டை மட்டும் வேஷ்டியுடன் செம கெத்தாக வலம் வருகிறார். கெளதம் கார்த்திக்,பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் ஆகியோர் இப்படத்தில் நடிக்க லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு குறித்த அசத்தலான அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

  படப்பிடிப்பை ராமேஸ்வரத்தில்

  படப்பிடிப்பை ராமேஸ்வரத்தில்

  எப்போதோ துவங்கி இருக்க வேண்டிய இப்படம் பல்வேறு பிரச்சனைகளால் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் விரைவில் பத்து தல படப்பிடிப்பை இயக்குனர் கிருஷ்ணா துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் காட்சிகளை முதலில் படமாக்க திட்டமிட்டுள்ளார். அதற்குள் சிம்பு வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் எனக் கூறப்படுகிறது. படப்பிடிப்பை ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

  English summary
  Simbu is acting in Pathu Thala movie. The shooting was stopped due to lockdown. Now the team is ready to resume the shoot again.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X