»   »  விஜய் தம்பியும், சத்யராஜ் மகனும்! விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் மற்றும் சத்யராஜின் மகன் சிபிராஜ் இணைந்து பட்டாசு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.விக்ராந்த்துக்கு இது 2வது படம். திருப்புமுனையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் சிபிராஜ் இந்தப் படத்தை நிறையவே நம்பி களம்இறங்குகிறார்.இருவரையும் இணைத்து இந்தப் படத்தை இயக்கப் போவது மகா நடிகன் சத்யராஜை வைத்து கடந்த சில படங்களாக சிரிப்பு கலவரத்தைஏற்படுத்திக் கொண்டிருந்த ஷக்தி சிதம்பரம். பல குடும்பப் படங்களை எடுத்த வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில்இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார்.பட்டாசு என்று இப்படத்திற்கு ஏன் பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, இதுவரை ஜாலியான படங்களையே தந்து கொண்டிருந்தநான், பட்டாசு மூலம் அதிரடியான ஒருபடத்தைக் கொடுக்கப் போகிறேன். அதனால்தான் பட்டாசு என்று பெயர் வைத்தேன் என்கிறார் ஷக்திசிதம்பரம்.இப்படத்தின் நாயகியாக மதுமிதா நடிக்கப் போகிறார். ஏற்கனவே ஷக்தி சிதம்பரத்தின் இங்கிலீஷ்காரன் படத்திலும் மதுமிதா ஒருஹீரோயினாக வந்தார். ஆனால் அப்படத்தில் நமீதாவே ரொம்ப பேசப்பட்டதால் மதுமிதா சோர்ந்து போயிருந்தார். அவரது சோர்வைப்போக்கும் விதமாக இப்படத்தில் மதுமிதாவின் கேரக்டரை சிறப்பாக கவனிக்கப் போகிறாராம் இயக்குநர்.கிளாமர் மட்டும் இல்லாமல், நடிப்பதற்கும் இப்படத்தில் நல்ல வாய்ப்பு உள்ளதால், ஷூட்டிங்குக்காக ஆவலுடன் காத்துள்ளாராம் மதுமிதா.காமடிக்காக விவேக்கையும் போட்டுள்ளனர். அடிதடி நடிப்பு, அதிரடி காமெடி, அட்டகாசமான கவர்ச்சி என கலவையான முத்திரைகளுடன் விரைவில் வெடிக்கக் காத்திருக்கிறது இந்தபட்டாசு!

விஜய் தம்பியும், சத்யராஜ் மகனும்! விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் மற்றும் சத்யராஜின் மகன் சிபிராஜ் இணைந்து பட்டாசு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.விக்ராந்த்துக்கு இது 2வது படம். திருப்புமுனையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் சிபிராஜ் இந்தப் படத்தை நிறையவே நம்பி களம்இறங்குகிறார்.இருவரையும் இணைத்து இந்தப் படத்தை இயக்கப் போவது மகா நடிகன் சத்யராஜை வைத்து கடந்த சில படங்களாக சிரிப்பு கலவரத்தைஏற்படுத்திக் கொண்டிருந்த ஷக்தி சிதம்பரம். பல குடும்பப் படங்களை எடுத்த வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில்இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார்.பட்டாசு என்று இப்படத்திற்கு ஏன் பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, இதுவரை ஜாலியான படங்களையே தந்து கொண்டிருந்தநான், பட்டாசு மூலம் அதிரடியான ஒருபடத்தைக் கொடுக்கப் போகிறேன். அதனால்தான் பட்டாசு என்று பெயர் வைத்தேன் என்கிறார் ஷக்திசிதம்பரம்.இப்படத்தின் நாயகியாக மதுமிதா நடிக்கப் போகிறார். ஏற்கனவே ஷக்தி சிதம்பரத்தின் இங்கிலீஷ்காரன் படத்திலும் மதுமிதா ஒருஹீரோயினாக வந்தார். ஆனால் அப்படத்தில் நமீதாவே ரொம்ப பேசப்பட்டதால் மதுமிதா சோர்ந்து போயிருந்தார். அவரது சோர்வைப்போக்கும் விதமாக இப்படத்தில் மதுமிதாவின் கேரக்டரை சிறப்பாக கவனிக்கப் போகிறாராம் இயக்குநர்.கிளாமர் மட்டும் இல்லாமல், நடிப்பதற்கும் இப்படத்தில் நல்ல வாய்ப்பு உள்ளதால், ஷூட்டிங்குக்காக ஆவலுடன் காத்துள்ளாராம் மதுமிதா.காமடிக்காக விவேக்கையும் போட்டுள்ளனர். அடிதடி நடிப்பு, அதிரடி காமெடி, அட்டகாசமான கவர்ச்சி என கலவையான முத்திரைகளுடன் விரைவில் வெடிக்கக் காத்திருக்கிறது இந்தபட்டாசு!

Subscribe to Oneindia Tamil

விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் மற்றும் சத்யராஜின் மகன் சிபிராஜ் இணைந்து பட்டாசு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

விக்ராந்த்துக்கு இது 2வது படம். திருப்புமுனையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் சிபிராஜ் இந்தப் படத்தை நிறையவே நம்பி களம்இறங்குகிறார்.

இருவரையும் இணைத்து இந்தப் படத்தை இயக்கப் போவது மகா நடிகன் சத்யராஜை வைத்து கடந்த சில படங்களாக சிரிப்பு கலவரத்தைஏற்படுத்திக் கொண்டிருந்த ஷக்தி சிதம்பரம். பல குடும்பப் படங்களை எடுத்த வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில்இப்படத்தைத் தயாரிக்கப் போகிறார்.

பட்டாசு என்று இப்படத்திற்கு ஏன் பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, இதுவரை ஜாலியான படங்களையே தந்து கொண்டிருந்தநான், பட்டாசு மூலம் அதிரடியான ஒருபடத்தைக் கொடுக்கப் போகிறேன். அதனால்தான் பட்டாசு என்று பெயர் வைத்தேன் என்கிறார் ஷக்திசிதம்பரம்.


இப்படத்தின் நாயகியாக மதுமிதா நடிக்கப் போகிறார். ஏற்கனவே ஷக்தி சிதம்பரத்தின் இங்கிலீஷ்காரன் படத்திலும் மதுமிதா ஒருஹீரோயினாக வந்தார். ஆனால் அப்படத்தில் நமீதாவே ரொம்ப பேசப்பட்டதால் மதுமிதா சோர்ந்து போயிருந்தார். அவரது சோர்வைப்போக்கும் விதமாக இப்படத்தில் மதுமிதாவின் கேரக்டரை சிறப்பாக கவனிக்கப் போகிறாராம் இயக்குநர்.

கிளாமர் மட்டும் இல்லாமல், நடிப்பதற்கும் இப்படத்தில் நல்ல வாய்ப்பு உள்ளதால், ஷூட்டிங்குக்காக ஆவலுடன் காத்துள்ளாராம் மதுமிதா.காமடிக்காக விவேக்கையும் போட்டுள்ளனர்.

அடிதடி நடிப்பு, அதிரடி காமெடி, அட்டகாசமான கவர்ச்சி என கலவையான முத்திரைகளுடன் விரைவில் வெடிக்கக் காத்திருக்கிறது இந்தபட்டாசு!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil