»   »  காஞ்சி கோவிலில் பெரியார்

காஞ்சி கோவிலில் பெரியார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்து மத அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவிலுக்குள் பெரியார் படத்தின் ஷூட்டிங் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்துவருகிறது.

சத்யராஜ் நடிக்க பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக நடந்துவருகிறது.

இந் நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவிலில் படப்பிடிப்பு நடத்த படக் குழுவினர் கோவிலுக்கு வந்தனர். இரண்டுவேன், ஒரு கார் உளளிட்ட வாகனங்களில் படப்பிடிப்புக்குத் தேவையானதளவாடங்களை கோவிலுக்குள் வாகனங்களிலேயே கொண்டு சென்றனர்.

இதுதவிர சத்யராஜ், குஷ்பு உள்ளிட்ட கலைஞர்கள், 20க்கும் மேற்பட்ட துணைநடிகர்களும் கோவிலுக்குள் வந்தனர். இதையடுத்து இந்து முன்னணி உள்ளிட்ட சிலஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு கூட்டமாக திரண்டனர். போலீஸாருக்கும்தகவல் கொடுத்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. முனியப்பன் அங்கு விரைந்து வந்தார்.

கோவிலுக்குள் படப்பிடிப்பு நடத்த அறநிலையத்துறையினரின் அனுமதி பெற்றிருக்கவேண்டும், உள்ளூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் இந்தஇரண்டையும் படக்குழுவினர் பெறவில்லை. இதையடுத்து உடனடியாக அனைவரும்வெளியேற வேண்டும், அனுமதிக் கடிதம் இருந்தால்தான் மீண்டும்அனுமதிக்கப்படுவீர்கள் எனக் கூறி முனியப்பன் அவர்களை வெளியேற்றினார்.

இதை கேள்விப்பட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன், மண்ணின்மைந்தர் அமைப்பை சேர்ந்த வக்கீல் பார்வேந்தன் மற்றும் திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கட்சி பிரமுகர்கள் கோயிலுக்கு வந்து, இயக்குனர் ஞானராஜசேகரனை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் சென்றனர்.

அங்கு ஆட்சியர் பிரதீப் யாதவ், எஸ்பி. அமல்ராஜ் ஆகியோரை சந்தித்தஞானராஜசேகரன் கோயில் குளத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தர வேண்டும்என்று கோரினார்.

இதற்கு உடனடியாக அனுமதி தரப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு தொடங்கியது.

மாலை 6.30 மணி வரை இடைவிடாமல் ஷூட்டிங் நடந்தது. கோவிலுக்குள்படப்பிடிப்பு நடக்கும் தகவல் அறிந்ததும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்சுமார் 50 பேர் திரண்டு பெரியார் பட ஷூட்டிங்கை எதிர்த்து கோஷம் இட்டனர்.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு முன்பாகவே ஷூட்டிங்கை முடித்து விட்டு படக்குழுவினர் திரும்பி விட்டனர்.

நேற்று நடந்த படப்பிடிப்பின்போது காசி கோவிலில் சாமியார் ஒருவருடன் பெரியார்பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் சத்யராஜ்,ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்தனர். இன்றும் படப்பிடிப்பு நடக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil