ஜீத்து ஜோசப்பின் ராம்… விறுவிறுப்பான ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ் !

சென்னை : மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ராம் பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.

மலையாள திரைப்பட உலகில் துணை இயக்குனராக இருந்து பின் பல வெற்றி படங்களை இயக்கியவர் தான் ஜீத்து ஜோசப். ஜெயராஜ் என்ற இயக்குனரிடம் துணை இயக்குனராக பணியாற்றினார் ஜோசப். பின் நடிகர் திலிபிடம் தனது கதையை கூறினார். பின்னர் பல தயாரிப்பாளர்களிடம் சென்று கதையை கூற யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.

Photos taken during the Ram film shooting

இதையடுத்து, தன் அம்மாவின் இணை தயாரிப்பில் 'டிடக்டிவ்' என்ற படத்தை எடுத்து முடித்தார் ஜீத்து ஜோசப். இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து மூன்று வருடமாக உழைத்து தனது இரண்டாவது படமான மம்மி அன்டு மீ என்ற படத்தை இயக்கினார். இப்படமும் நல்ல வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.பின் பல படங்களை இயக்கிய அவர் மேமரீஸ் என்ற படத்தை இயக்கிய தன்னை பாக்ஸ் ஆப்பிஸ் இயக்குனர் என்று நிரூபித்தார்.

மலையாள சினிமாவில் ஒரு படம் எடுத்து பல மொழிகளில் அதனை ரீமேக் செய்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் திரிஷியம் இப்படத்தில் மோகன் லால் தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இருப்பார். இப்படத்திற்காக இவர் பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்தது.

Photos taken during the Ram film shooting

இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு இயல்பான தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருப்பார் இப்படம் தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனர் ஜீத்து ஜோசப் தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசக்கூடிய மற்றும் பாராட்டக்கூடிய இயக்குனராக மாறினார்.

இதையடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் தம்பி படம் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் அடி எடுத்து வைத்தார் ஜீத்து ஜோசப். இந்த படத்தில் ஜோதி, கார்த்திக், சத்தியராஜ் என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் அக்கா தம்பி பாசத்தை சொல்லும் படமாக ஒரு மாறுபட்ட கதை அம்சம் கொண்ட கதையாகும் இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

https://tamil.filmibeat.com/gossips/cop-film-actress-got-tensed-her-movie-not-release-on-this-festive-season-066784.html

தனது அடுத்த படமான ராம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது. ஜீத்து ஜோசப், மோகன்லால் மற்றும் திரிஷா இப்படத்தில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X